Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் மகன் முதல்நாள், தாய் இரண்டாம் நாள், தந்தை மூன்றாம் நாள், கணவன் ஒரு நாள், மனைவி அடுத்த நாள்...
மகன் முதல்நாள், தாய் இரண்டாம் நாள், தந்தை மூன்றாம் நாள், கணவன் ஒரு நாள், மனைவி அடுத்த நாள்... PDF Print E-mail
Tuesday, 10 September 2013 06:16
Share

[ அன்று சமுதாய ஒற்றுமைக்காகப் பயன்பட்ட பிறை பார்க்கும் கருவியை இன்று சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதற்கே கையில் எடுப்பது வேதனையிலும் வேதனையான ஒரு செயலாகும்.

வெவ்வேறு ஊர்களை விட்டுத் தள்ளுங்கள். உள்ளூரிலேயே குர்ஆன், ஹதீஃத் நேரடிக் கட்டளைகளை ஏற்று அதன்படி துல்லியக் கணக்கீட்டின்படி சரியான நாளில் செயல்படும் ஒரு சாரார்,

பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும். தொலைதூரத்திலிருந்து பிறை பார்த்தத் தகவல் கிடைத்தாலும் அதை ஏற்கலாம் என சர்வதேச பிறையை ஏற்றுச் செயல்படும் இரண்டாவது சாரார்,

தகவலையும் ஏற்க முடியாது, தத்தம் பகுதியில் மட்டுமே பிறையைப் புறக்கண்ணால் பார்த்து மட்டுமே ஏற்க வேண்டும் என்று மூன்றாவது சாரார் என 21:92, 23:52 இறைவாக்குகளுக்கு மாறாக 21:93, 23:53-56 இறைவாக்குகள் கூறுவது போல் சமுதாயத்தை பிறை விவகாரத்தில் மூன்று பிரிவினர்களாகப் பிரிக்கும் மகாக் கொடுமை-வழிகேடு.

அதிலும் மகாக் கொடுமை மகன் முதல்நாள், தாய் இரண்டாம் நாள், தந்தை மூன்றாம் நாள், கணவன் ஒரு நாள், மனைவி அடுத்த நாள் எனக் குடும்பத்தையே பிரித்துச் சீரழிக்கும் இவர்கள் நேர்வழி நடப்பவர்களா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனையை ஏற்று நடப்பவர்களா? ஷைத்தானின் போதனைப்படி நடப்பவர்களா? நடுநிலையுடன் சிந்தியுங்கள்.]

மவ்லவிகளே, முஸ்லிம்களே! நடுநிலையுடன் சிந்தியுங்கள்!

சூரியன், சந்திரன், பூமி இந்த மூன்று கோள்களும் நேர்கோட்டிற்கு வந்து சங்கமம் (Conjunction) ஆகும் நாளே சந்திர மாதத்தின் கடைசி நாள் என்பதில் மவ்லவிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. இதோ 5ம் மத்ஹபு இமாம்(?) கூறுகிறார் படித்துப் பாருங்கள்.

இங்கு ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வானியல் கணிப்பை (கணக்கீட்டை மனமுரணாக கணிப்பு என்கிறார்) ஏற்று, முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வானியல் நிபுணர்களால் கணிக்கவே (கணக்கிடவே) முடியாது என்று நாம் வாதிடுவதாகக் கருதக் கூடாது. பல நூறு வருடங்களுக்குப் பின்னால் சென்னையில் தோன்றக்கூடிய சந்திர கிரகணத்தை இன்றைக்கே அவர்களால் கணித்துச் சொல்ல முடியும். எத்தனை மணி, எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்று கணிக்கிறார்களோ அதில் எந்த மாற்றமுமின்றி அது நடந்தேறும். அந்த அளவு வானியல் வளர்ந்து விட்டது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.

இன்று இந்தப் பகுதியில் பிறை தென்படும் வகையில் இருக்கும் என்று கணித்துக் கூறினால் அந்தப் பகுதியினர் காணும் வகையில் ஆகாயத்தில் நிச்சயம் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்குத் துல்லியமாகக் கணிக்க இயலும். மேகம் மற்றும் புறக் காரணங்களால் நமது பார்வைக்குத் தெரியாமல் போகவும் கூடும். அவர்களது கணிப்பு சரியானதுதான் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே சமயத்தில் தலைப்பிறையைத் தீர்மானிக்க அதை அளவு கோலாகக் கொள்ளக்கூடாது என்பது தான் நமது வாதம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாதத்தின் முதல் தினத்தைத் தீர்மானிப்பதற்குக் கண்ணால் பார்க்க வேண்டும் என்று வரையறுத்துவிட்டனர். (ஏகத்துவம்: ஏப்ரல் 2009 பக். 31,32)

ததஜவினரின் இவ்வாதப்படி அறிவியல் அதி முன்னேற்றம் காரணமாக சந்திரனின் சுழற்சியைத் திட்டமாகவும், துல்லியமாகவும் அறிந்து கொள்ள முடியும். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 1434 வருடங்களுக்கு முன்னர் இருந்த துல்லியமற்ற தோராய நிலையை விட இன்று மிகமிகத் துல்லியமாக மாதம் பிறப்பதை அறிந்து கொள்ள முடியும் என்பதையும் அவர்களே ஒப்புக் கொண்டுள்ளதையும் அவர்களின் இந்த வாக்குமூலம் உறுதிப் படுத்துகிறது. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறக் கண்ணால் தலைப்பிறையைப் பார்த்து மட்டுமே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று வரையறுத்துவிட்டதாக ஓர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளனர்.

''எவனொருவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாகப் பொய்யைக் கூறுகிறானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் பார்த்துக் கொள்ளட்டும்'' எனப் பல நபிதோழர்கள் அறிவிக்கும் முத்த வாத்திரான ஹதீஃத் அவர்களை உணர்வு பெறச் செய்யாது. அந்த அளவு அவர்களது உள்ளங்கள் கற்பாறையைவிடக் கடினமாகி விட்டன. (பார்க்க: 2:74,174-176, 5:13, 6:125)

அவர்கள் தங்களின் இந்தக் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால், தலைப்பிறையைப் புறக்கண்ணால் மட்டுமே பார்த்து மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறும், அதுவும் கழிந்து செல்லும் மாதத்தின் கடைசி நாளில், காலையில் உதித்து மாலையில் மறையும் பிறையை மேற்கில் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தைத் துவக்க வேண்டும் என்று கூறும் ஆதாரபூர்வமான ஹதீஃத் அல்ல; பலகீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃதையாவது காட்டுங்கள் என்று கடந்த 18 ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதுவரை அப்படிப்பட்ட ஓர் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃதைக் கூட அவர்களால் காட்ட முடியவில்லை.

ஆம்! அன்றைய குறைஷ் காஃபிர்கள் சத்தியத்தை-நேர்வழியை மறுத்துக் கூறியது போல், எங்களின் உம்மா, வாப்பா காலத்திலிருந்து காலங்காலமாக நாங்கள் மேற்கில் மறையும் பிறையைப் புறக்கண்ணால் மட்டுமே பார்த்து மாதத்தைத் துவக்கி வருகிறோம். பிறை பிறந்துவிட்டது, நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்றும் நடைமுறைப்படுத்துகிறோம் என்றே கூறுகிறோம் என்ற பதிலையே தருகிறார்கள்.

ஆம்! கி.மு. 383ல் யூதர்கள் 36:39 இறைவாக்குக் கூறும் "உர்ஜூனில் கதீம்" என்ற புறக்கண்ணுக்குத் தெரியும் கடைசிப் பிறையை கிழக்கில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் பார்த்த பின்னர், மாதத்தின் இறுதி நாள் (அமாவாசை) அன்றும் அடுத்த நாள் (மாதத்தில் முதல் நாள்) பிறை கிழக்கிலோ, மேற்கிலோ தென்படாமல் இரண்டாம் நாள் பிறை காலையில் கிழக்கில் பிறந்து மாலையில் மேற்கில் மறையும் பிறையையே முதன் முதலாகப் பார்த்துவிட்டு அதையே முதல் பிறை என்றும், முதன் முதலாகப் பிறையைப் புறக்கண்ணால் மாலையில் பார்த்ததால், நாள் மாலையில் ஆரம்பிக்கிறது என்றும் மூட நம்பிக்கையில் நடைமுறைப் படுத்தினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் அறிவிப்புச் செய்தது போல், யூதர்களை ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் பின்பற்றும் இந்த மவ்லவிகளும் (பார்க்க புகாரீ(ர.அ) 3456, 7320 முஸ்லிம் (ர.அ.) 5184) அந்த யூத மத கலாச்சாரத்தைப் பின்பற்றிக் கொண்டு அந்தப் பழியை 4:112 இறைவாக்குக் கூறுவது போல் எம்மீது போடுகிறார்கள்.

அதற்கு மாறாக இந்த மவ்லவிகள் யூத மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றி அவர்களைச் சார்ந்தவர்களாக ஆகாமல் அல்குர்ஆன் 6:96, 7:54, 10:5, 13:2, 14:33, 16:12, 21:33, 29:61, 31:29, 35:13, 36:39,40, 39:5, 55:5 இந்த 13 இறைவாக்குகளையும் நேரடியாகப் படித்து விளங்கினால் சூரியனும், சந்திரனும் மனிதனின் புறக்கண் கட்டுப்பாட்டில் இல்லை; முழுக்க முழுக்க இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஒரு வினாடி கூட முன்பின் ஆகாமல், அவற்றின் வட்டவறைகளில் சுழன்று கொண்டிருக்கின்றன. நாம் வாழும் பூமி முழுமைக்கும் ஒரே ஒரு சந்திரன்தான். இரண்டோ, மூன்றோ அல்ல. அதனால் உலகம் முழுக்க ஒரே பிறைதான். இரண்டு நாளோ, மூன்று நாளோ ஒருபோதும் வரவே முடியாது.

சந்திரனின் சுழற்சியை மிகமிகத் துல்லியமாக கணக்கிடும் விண்ணியல் அறிவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் இருக்கவில்லை. அதைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "லாநக்த்துபு வலாநஹ்சுபு" என்று கூறினார்கள். ஆனால் இன்றோ அந்த கணக்கிடும் ஆற்றலை அல்லாஹ் மனிதகுலத்திற்குக் கொடுத்துள்ளான் என்பதை எல்லாம் திட்டமாக அறிந்து கொள்ள முடியும். எனவே அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளை நிராகரித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்திரனின் சுழற்சி மனிதனின் புறக் கண்ணின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று ஒருபோதும் சொல்லி இருக்க முடியாது. இது அப்பட்டமான பொய், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது சுமத்தப்படும் பெரும் பழி, பெருத்த அவதூறு என்பதை எளிதாக விளங்க முடியும். இது மட்டுமா?

இன்னும் பாருங்கள் இவர்களின் மடமையின் ஆழத்தை. மூன்று கோள்களும் நேர் கோட்டுக்கு வந்து சங்கமம் (Conjunction) ஆகி விட்டால் மாதம் முடிந்து புதிய மாதம் ஆரம்பித்து விட்டது என்பதை அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். சங்கமம் ஆனவுடன் புதிய பிறை பிறந்து மாதம் ஆரம்பித்துவிட்டது என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள். பிறந்த அப்புதுப் பிறை கண்ணுக்குத் தெரியவில்லை. (Non Visible Moon) அதனால் அதை மாதம் ஆரம்பித்துவிட்டதாகக் கொள்ள முடியாது என்றே கூறுகின்றனர்.

அதே அடிப்படையில் மாதத்தின் இரண்டாம் நாளையும் பிறை புறக்கண்ணுக்குத் தெரியாததால் மாதத்தின் முதல் நாளாகக் கொள்ள முடியாது என்கின்றனர். இரண்டாம் நாள் காலையில் பிறந்த இரண்டாம் பிறை மாலையில் மறையும் போதே அது புறக்கண்ணுக்குத் தெரிகிறது. அப்பிறையையே பிறை பிறந்துவிட்டதாகவும் மாலையில் முதல் நாள் ஆரம்பித்துவிட்டதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

அவர்களின் இந்த கூற்று எந்த அளவு மடமை நிறைந்தது என்பதை விவரிக்கிறோம். கவனமாகப் படியுங்கள். அல்குர்ஆன் 2:189, 10:5, 36:39 வசனங்களைப் படித்து விளங்குகிறவர்கள் மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு மன்ஜில்-தங்குமிடம் என்பதை உறுதியாக அறிய முடியும். மாதம் 29 நாள்கள் அல்லது 30 நாள்கள் மட்டுமே கொண்டது என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தெளிவான நேரடியான அறிவிப்பு. எனவே மாதம் 28 நாள்களில் முடியவும் செய்யாது. 31 நாள்கள் நீடிக்கவும் செய்யாது என்பதை ஒப்புக்கொள்கிறவர்கள் மட்டுமே உண்மையான நம்பிக்கையாளர்களாக இருக்க முடியும். அப்படியானால் ஒவ்வொரு நாளும் ஒரு மன்ஜிலாக கண்டிப்பாக இருந்தேயாக வேண்டும். மன்ஜில் இல்லாத வெற்று நாளாக ஒருபோதும் ஒரு நாளும் இருக்கவே முடியாது.

இப்போது இந்த மவ்லவிகளின் தவறான வாதத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள். சங்க மத்துடன் (அமாவாசை) பழைய மாதம் முடிவுற்றதை அவர்களும் ஏற்கிறார்கள். ஆனால் முதல் நாளாகிய அடுத்த நாள் புதிய பிறை இருக்கிறது. ஆயினும் கண்ணுக்குத் தெரிய வில்லை (Non Visible Moon) அடுத்து இரண்டாம் நாளும் புதிய பிறை இருக்கிறது. கண்ணுக்குத் தெரியவில்லை. (Non Visible Moon) இரண்டாம் நாள் காலையில் கிழக்கில் உதித்து மாலையில் மேற்கில் மறையும் பிறையே கண்ணுக்குத் தெரிகிறது. எனவே அதுவே முதல் பிறை, மாலையில் புதிய மாதம் ஆரம்பிக்கிறது என்பதே இந்த மவ்லவிகளின் நிலைப்பாடு. அறிவீனமான கொள்கை.

இவர்களின் இந்த நிலைபாட்டின்படி சங்கமத்திற்கு அடுத்த முதல் நாளும், அதற்கடுத்த இரண்டாம் நாளும் அல்லாஹ் 10:5, 36:39 இறைவாக்குகளில் கூறும் மன்ஜில்கள்-தங்கு மிடங்கள் இல்லாத வெற்று நாட்கள். ஆம்! இந்த மவ்லவிகள் இந்த இரண்டு நாள்களையும் ஒரு மாதத்திலுள்ள 29 அல்லது 30மன்ஜில்களான நாள்களின் கணக்கில் எடுக்கவில்லை. எனவே அவர்களின் அகராதிப்படி ஒவ்வொரு மாதமும் 27நாள்களையோ அல்லது 28 நாள்களையோ மட்டுமே கொண்டவை. இந்த மவ்லவிகளின் மடமை வாதம் புரிகிறதா?

இன்று இவர்கள் நடைமுறைப்படுத்தும் சங்கமத்திற்குப் பின்னுள்ள புதிய மாதத்தின் முதல் நாளையும், இரண்டாம் நாளையும், கழிந்த மாதத்தின் 29ம் நாளாகவும், 30ம் நாளாக வும் கொள்வது மடமையிலும் கொடிய மடமை என்பதை அவர்களின் வாக்கு மூலமே உறுதிப் படுத்துகிறது.

ரமழானின் முதல் இரண்டு மன்ஜில்களை- நாள்களை ஷஃபானின் கடைசி இரண்டு மன்ஜில்களாக- நாள்களாகக் கணக்கிட்டும், ரமழானின் கடைசி இரண்டு மன்ஜில்களை- நாள்களை ஷவ்வாலின் முதல் இரண்டு மன்ஜில்களாகக் கணக்கிட்டும், நோன்பு நோற்பது ஹராமான ஷவ்வால் ஒன்றில் நோன்பு நோற்றும் முஸ்லிம்களை அல்லாஹ்வுக்கு மாறு செய்ய வைக்கின்றனர். 9:37 இறைவாக்குக் கூறுவது போல் சுயநலத்துடன், ஷஃபானின் நாள் களை ரமழானின் நாள்களாக்கியும், ரமழானின் நாள்களை ஷவ்வாலின் நாள்களாக்கியும் அந்நஸீவு என்ற சுயநலத்துடன் மாதங்களின் நாள்களை முன்பின் ஆக்கி நிராகரிப்பை அதிகப் படுத்துகின்றனர். இதன் மூலம் முஸ்லிம்களை நிராகரிப்பவர்களாக்கி வழிகெடுக்கின்றனர்.

ஆம்! இந்த மவ்லவிகள் 10:5, 36:39 இறை வாக்குகளையும், சந்திர மாதங்கள் 29 அல்லது 30 நாள்களைக் கொண்டவை, சந்திரமாதத்தில் 28 நாள்களும் வரா, 31 நாள்களும் வரா என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலையும் மறுக்கிறார்கள் என்பதை அவர்கள் மறுக்க முடியுமா?

இவர்களின் இந்த மடமை வாதத்தை வேதவாக்காக ஏற்று ரமழானின் முதல் இரண்டு நோன்புகளையும் நோற்காமல் விடுபவர்களின் நாளை மறுமையின் நிலை என்ன?

நோன்பு நோற்பது ஹராமான பெருநாள் தினமாகிய இவ்வால் பிறை ஒன்றில் நோன்பு நோற்பவர்களின் நாளை மறுமையின் நிலை என்ன? 9:31, 33:36,66-68 இறைவாக்கு களைப் படித்து விளங்கி, உணர்ந்து இந்த மவ்லவிகளின் உடும்புப் பிடியிலிருந்து விடுபடு பவர்களே 3:31, 7:3, 33:21 இறைவாக்குகள் கூறு வது போல் வெற்றியாளர்கள்; சுவர்க்கத்திற்குரி யவர்கள். உண்மையில் அல்லாஹ்வின் மீதும், மறுமையின் மீதும் மிக உறுதியான நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமே இது சாத்திய மாகும்.

அன்று அதாவது 1434 வருடங்களுக்கு முன்னால், விண்ணியல் அறிவியல் முன்னேற்றமோ, தகவல் தொடர்பு வசதிகள் போன்றவையோ இல்லாத அக்காலத்தில், பக்கத்து ஊரில், அல்லது தொலைதூர ஊர்களில் பிறை பார்த்த செய்தியோ, இன்றிருப்பது போல் பல ஆயிரம் மாதங்களின் ஆரம்பமும், முடிவும், சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் நாள்களும் அறவே தெரியாத நிலையில் சந்திரனின் சுழற்சியை அன்றாடம் அதன் வளர்ந்து தேயும் மன்ஜில்களைக் கண்ணால் பார்த்து முடிவு செய்யும் கட்டாயத்தில் இருந்தார்கள். சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுவதை முன்கூட்டியே அறிய முடியாமல், அவை நிகழும்போது கண்ணால் பார்த்து மட்டுமே செயல்பட்டார்கள்.

எனவே அன்று கணிப்பின் அடிப்படையிலுள்ளவர்கள் மாதத்தை முன்னரே முடிவு செய்துவிட்டார்கள் என்றோ, தூர, பக்கத்து ஊரில் பிறை பார்த்துவிட்டார்கள், நமக்குத் தான் பிறை தெரியவில்லை என்றோ சச்சரவிட்டுச் சமுதாயம் பிளவுபடும் நிலை அறவே ஏற்படவில்லை. அதாவது பிற ஊர்களின் நிலை அறிந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுச் சச்சரவிட்டுப் பிளவு படும் நிலை அறவே அன்று இல்லவே இல்லை.

அதே சமயம் அன்று உள்ளூரிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிளவு படும் ஒரு சந்தர்ப்பம் இருக்கவே செய்தது. அதாவது இன்று போல் யூத மதக்கலாச்சாரத்தைப் பின் பற்றி மாதக் கடைசியில் மட்டும் மேற்கில் பிறை பிறந்து விட்டதா? என்று புறக்கண்ணால் பார்க்கும் மூடப் பழக்கம் நபிதோழர்களிடம் இருக்கவே இல்லை. அதற்கு மாறாக 2:189 இறை வழிகாட்டல்படி அன்றாடம் சந்திரனின் பிறைகளை வளர்ந்து தேய்ந்து இறுதியில் கண் பார்வையை விட்டு மறைந்து போகும் வரை அவதானித்து வந்தார்கள். அப்படி அவதானிக் கும் போது சிலரது அவதானிப்பில் அந்த மாதம் 29ல் முடிகிறது என்றும், வேறு சிலரது அவதா னிப்பில் மாதம் 30ல் முடிகிறது என்றும் கருத்து வேறுபாடுபட்டார்கள். இதனால் சச்சரவும் அது முற்றி உள்ளூரிலேயே சமுதாயப் பிளவும் பகையும் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டது.

இந்தக் கருத்து வேறுபாட்டைத் தீர்க்க இன்று போல் கணினி கணக்கீட்டு முறைக் கண்டு பிடிக்கப்படவில்லை. சந்திரனின் பிறைகளைப் புறக் கண்ணால் பார்த்து மட்டுமே சமுதாய ஒற்றுமை காக்க முடிந்தது. இதற்காகத் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ""அதை (சந்திரனின் வளர்ந்து தேயும் படித்தரங்களை) பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள், முடியுங்கள்" என்று கூறி கருத்து வேறுபாட்டைத் தீர்த்து வைத்தார்கள். மற்றபடி சந்திரனைக் கண்ணால் பார்த்து மட்டும்தான் மாத ஆரம்பத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாகக் கட்டளையைப் பிறப்பிக்க வில்லை. கண்ணால் பார்ப்பது வஹீ என்ற அடிப்படையில் மார்க்கமாக்கவும் இல்லை.

இன்று இந்த மவ்லவிகள் பிறையைக் கண்ணால் பார்த்து மட்டுமே மாத ஆரம்பத்தை முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் பலமான, பலவீனமான செய்திகள் அனைத்தும் ""லாநக்த்துபு வலாநஹ் சுபு" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்திய சந்திர ஓட்டம் பற்றிய விண்ணியல் கணக்கு கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலையில் கண்ணால் பார்ப்பதை வலியுறுத்தி சமுதாய ஒற்றுமைக் காக்கக் கூறப்பட்டதே அல்லாமல் கண்ணால் பார்ப்பது வஹியோ கடமையோ அல்ல என்பதே நிதர்சன உண்மையாகும்.

ஆனால் சமுதாயத்தைப் பிளவுபடுத்தியே அற்பமான உலகியல் ஆதாயங்களை அடைவதையே குறியாகக் கொண்ட இந்த மவ்லவிகள் அன்று சமுதாய ஒற்றுமைக்காகப் பயன்பட்ட பிறை பார்க்கும் கருவியை இன்று சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதற்கே கையில் எடுப்பது வேதனையிலும் வேதனையான ஒரு செயலாகும். அன்று நபிதோழர்களிடையே மாதம் 29ல் முடிகிறது; இல்லை இல்லை 30ல் முடிகிறது என்று உள்ளூரிலேயே ஏற்பட்ட பிளவைத் தீர்க்க வலியுறுத்தப்பட்ட பிறை பார்த்தலை இன்று உள்ளூரில் மட்டுமல்ல, குடும்பங்களுக்குள்ளேயே இரண்டாக, மூன்றாகப் பிளவு பட இந்த மவ்லவிகள் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றால் இவர்கள் மக்களை நேர்வழி நடத்தும் நபிமார்களைப் பின்பற்றுகிறவர்களா? அதற்கு மாறாக வரம்பு மீறிச் செயல்படும் 25:30 இறை வாக்குக் கூறுவது போல் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரிக்கும் தாஃகூத்களா என்பதை நிதானமாகச் சிந்தித்து நடுநிலையுடன் முடிவுக்கு வாருங்கள்.

வெவ்வேறு ஊர்களை விட்டுத் தள்ளுங்கள். உள்ளூரிலேயே குர்ஆன், ஹதீஃத் நேரடிக் கட்டளைகளை ஏற்று அதன்படி துல்லியக் கணக்கீட்டின்படி சரியான நாளில் செயல்படும் ஒரு சாரார்,

பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும். தொலைதூரத்திலிருந்து பிறை பார்த்தத் தகவல் கிடைத்தாலும் அதை ஏற்கலாம் என சர்வதேச பிறையை ஏற்றுச் செயல்படும் இரண்டாவது சாரார்,

தகவலையும் ஏற்க முடியாது, தத்தம் பகுதியில் மட்டுமே பிறையைப் புறக்கண்ணால் பார்த்து மட்டுமே ஏற்க வேண்டும் என்று மூன்றாவது சாரார் என 21:92, 23:52 இறைவாக்குகளுக்கு மாறாக 21:93, 23:53-56 இறைவாக்குகள் கூறுவது போல் சமுதாயத்தை பிறை விவகாரத்தில் மூன்று பிரிவினர்களாகப் பிரிக்கும் மகாக் கொடுமை-வழிகேடு.

அதிலும் மகாக் கொடுமை மகன் முதல்நாள், தாய் இரண்டாம் நாள், தந்தை மூன்றாம் நாள், கணவன் ஒரு நாள், மனைவி அடுத்த நாள் எனக் குடும்பத்தையே பிரித்துச் சீரழிக்கும் இவர்கள் நேர்வழி நடப்பவர்களா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போத னையை ஏற்று நடப்பவர்களா? ஷைத்தானின் போதனைப்படி நடப்பவர்களா? நடுநிலையுடன் சிந்தியுங்கள்.

இடைத்தரகர்களாகச் செயல்படும் தாஃகூத்களான இம்மத குருமார்களான புரோகிதர்களான இந்த மவ்லவிகளை 7:3, 33:36,66-68, 59:7 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து அவர்களை முற்றிலும் புறக்கணித்து 3:103 இறைக் கட்டளைப்படி ஜமாஅத்தாக அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் நேரடி வழிகாட்டல்படி நடப்பவர்களே வெற்றியாளர்கள்; அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் நுழைவோர். அவர்களே அறிவாளிகள், நேர்வழி நடப்போர், நன்மாராயம் பெற்றோர். (பார்க்க 39:17,18)

-அபூ அப்தில்லாஹ

source: http://annajaath.com/?p=6616