Home கட்டுரைகள் எச்சரிக்கை! நாசமாகும் சமுதாயம்! அம்பலமாகும் அந்தரங்கம்!
நாசமாகும் சமுதாயம்! அம்பலமாகும் அந்தரங்கம்! PDF Print E-mail
Sunday, 03 March 2013 06:37
Share

நாசமாகும் சமுதாயம்! அம்பலமாகும் அந்தரங்கம்!

கணவனும் மனைவியும் சந்தோஷம் அனுபவிக்கத்தான் திருமணம் என்ற பந்தத்தை இறைவன் ஏற்படுத்தியிருக்கிறான்.

இதில் அந்தரங்கம் என்பது இருவருக்கும் மத்தியில் அன்பை ஏற்படுத்தும்....இந்த அன்பு அதிகமாகி நம் மக்கள் இப்போதய நவீன கண்டுபிடிப்புக்களான செல் போன் வசதியை பயன் படுத்தி வெளி நாடுகளில் பணிபுரியும் கனவன்மார்கள் தங்களின் மனைவிடம் நான் உன்னைபிந்து தனியாக இருக்கும் போது நான் மட்டும் பார்க்க என்று சொல்லி மனைவியை நம்பவைத்து அந்தரங்கத்தை செல்லில் படம் பிடித்து வைத்துக்கொள்கின்றனர்.

இது வரம்பு மீறி தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் என காட்டி இந்த அந்தரங்கத்தை வெளிப்படுத்தும் ஒரு சில நபர்களும் உள்ளனர்.

இந்த கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு தோனும் போது இதை வைத்து பிளாக் மெயில் செய்யும் கணவர்மார்களும் உள்ளனர்.

இந்த செய்தியை படித்த பிறகாவது நம் பெண்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தங்களின் அந்தரங்கம் கணவனுக்கு மட்டுமே அந்த கணவனே கொஞ்சினாலும் கூத்தாடினாலும் செல் போனில் படம் பிடிக்க அனுமதிக்க மாட்டேன் என கண்டிப்புடன் கூறி விட்டால் இது போன்ற பயமுறுத்தல்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

சென்னை கோடம்பாக்கம் --- தெருவைச் சேர்ந்தவர் ஜீனத் பேகம்.(பெயர் மாற்றப்பட்டுள்ளது), 28 வயதான இவர், தனது கணவர் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்:

எனக்கும், ஜின்னா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், 10 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக, 2003ல், விவாகரத்து செய்து கொண்டோம். பின், 2012ம் ஆண்டு, துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தேன்.

அப்போது, ஒரு அலைபேசி கடையில் வேலை பார்த்து வந்த, கேரள மாநிலம், காசர்கோட்டை சேர்ந்த, சாவீருக்கும், எனக்கும் காதல் ஏற்பட்டது.கடந்த, 2012, நவம்பரில், இருவரும் சென்னை வந்தோம். டிச., 27ம் தேதி திருமணம் செய்து கொண்டு, சென்னை வடக்கு பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்தோம்.

பின்னர், கோடம்பாக்கத்தில் வசித்து வந்தோம். அபுதாபியில், ஒருவருக்கு பணம் தர வேண்டி இருப்பதாக கூறி, 30 சவரன் நகை, 3 லட்சம் ரூபாயை, என்னிடம்இருந்து, என் கணவர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நகை, பணம் கேட்டு தொந்தரவு செய்ய துவங்கினார். மிரட்டல்இந்நிலையில், அவருக்கு, பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்து, அதை நான் கேட்டபோது, "அப்படித் தான் இருப்பேன்' என, பதிலளித்தார். மீறி ஏதாவது கேட்டால், "படுக்கை அறை காட்சிகளை, இணைய தளத்தில் வெளியிடுவேன்' என, தொடர்ந்து மிரட்டி வந்தார்.

இது தவிர, துபாயில் நான் வேலை செய்த இடத்தில், நிலுவையில் உள்ள பணத்தை பெற்று வரச் சொல்லி, தொந்தரவு செய்தார். கடந்த, ஜன., 7ம் தேதி, துபாய் சென்றேன். அங்கு பணத்தை பெறுவதில், கால தாமதம் ஏற்பட்டது.

கடந்த, 10 நாட்களுக்கு முன், சாவீரை தொடர்பு கொண்டபோது, அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவரது தம்பி ஜாகீரிடம் கேட்டபோது, சாவீர் திருமணமாகி, மனைவியுடன் வசிப்பதாக தெரிவித்தார்.நடவடிக்கை இதையடுத்து, சென்னை வந்து சாவீரிடம் கேட்டபோது, விவாகரத்து செய்யுமாறு மிரட்டினார். கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகிறார்.

இவர், ஏற்கனவே துபாயில் கொலை முயற்சி வழக்கில், சிறை சென்று வந்துள்ளதால், எனக்கு அதிக பயம் ஏற்பட்டு உள்ளது.என்னை திருமணம் செய்து, நகை, பணத்தை பெற்று, கொலை மிரட்டல் விடுக்கும் சாவீர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நான் பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளேன். எனக்கு 2003-ம் ஆண்டு திருமணம் நடந்தது. முதல் கணவரை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டேன்.

அதன்பிறகு நான் துபாயில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்தேன். அப்போது சாவீர் என்பவருடன் காதல் ஏற்பட்டது. நாங்கள் சென்னை வந்து பதிவு திருமணம் செய்து கொண்டோம். சாவீர் செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்தார். அவர் கேரளாவைச் சேர்ந்தவர்.

நாங்கள் சந்தோஷமாகத்தான் வாழ்ந்தோம். ஆனால் திடீரென்று எனது கணவர் சாவீர் இப்போது என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அவர் கேரளாவில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக அறிகிறேன்.

இதுபற்றி எனது கணவரிடம் கேட்டால், என்னை விவாகரத்து செய்யப்போவதாக சொல்கிறார். மேலும் நானும், அவரும் படுக்கை அறையில் ஒன்றாக இருந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளார். என்னையும் தனியாக ஆபாசமாக படம் எடுத்து வைத்திருக்கிறார். அந்த படங்களை இணையதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்தப்போவதாகவும் மிரட்டுகிறார்.

அவர் ரூ.3 லட்சம் பணத்தையும், 30 சவரன் நகைகளையும் என்னிடம் இருந்து பறித்துச் சென்று விட்டார். எனது ஆபாச படங்களை அவரிடம் இருந்து பறிமுதல் செய்வதோடு, அவர் என்னிடம் பறித்த பணம் மற்றும் நகைகளையும் மீட்டுத்தர வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்தார். அவர் கொடுத்துள்ள புகார் மனு மீது, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோடம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.