Home கட்டுரைகள் எச்சரிக்கை! பெண்களை இழுத்துப்போகும் கலாச்சாரம்!
பெண்களை இழுத்துப்போகும் கலாச்சாரம்! PDF Print E-mail
Thursday, 01 December 2011 10:36
Share

  பெண்களை இழுத்துப்போகும் கலாச்சரம்!   

"பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது; பெண் சுதந்திரம் வேண்டும்" இவை இரண்டையும் நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தால் போதும், மீடியாக்களில் உங்கள் முகம் காட்டப்படும். அடுத்த கட்டமாக சமுதாய முன்னேற்றம் கருதும் தியாகி என்று நீங்கள் வர்ணிக்கப்படுவீர்கள்.

இந்த வார்த்தைகள் புரட்சிகரமான கோஷங்களாக வெளியில் தெரிந்தாலும் இதன் மூலம் வீதிக்கு இழுக்கப்பட்ட பெண்ணினத்தின் சமூகச் சீரழிவுகள் ஆக்டோபஸாக மாறியிருக்கின்றன. அந்தச் சீரழிவுகளில் எல்லா சமுதாயப் பெண்களும் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.

வாலிபப் பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு எனும் முகமூடியில் தங்கள் இச்சைகளை வெளிப்படையாகவே தீர்த்துக்கொள்கின்றனர். அடுத்த வாலிபன், தன் உடலை - அதுவும் மறைவிடங்களின் அழகைப்பார்த்து தம்மைப் புகழ, தொடர வேண்டும் என்ற நோக்கில் ஆடை அணிகிறார்கள். அந்தரங்க விஷயங்களை அம்பலத்தில் பேசுவதை சுதந்திரம் என்று நினைத்து விட்டனர். பெற்றோர் இது குறித்துப் பேசுவதோ, கண்டிப்பதோ பெரும்பாவச் செயலாக மாறிவிட்டது.

அந்நிய சமுதாய வாலிபர்களுடன் சுற்றியலைவதும், கற்பைப் பறிகொடுப்பதும், மிஞ்சும்போது ஈமானைத் தூகியெறிவதும் சர்வ சதாரணமாகிவிட்டது. செல்லமாக வளர்த்த மகள் தன் தந்தையை "அவருக்கும் எனக்கும் தொடர்பில்லை" என்று காவல் நிலையத்தில் பதிவு செய்கிறாள். தன் தாயை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறாள். "உங்கள் வீட்டு வாசலும், தோப்புத் துறவுகளும் எனக்குத் தேவையில்லை" என்று துணிந்து கூறுகிறாள். ஈமானற்ற வாலிபனின் இன்பத்(!) துணை ஒன்றே தம் வாழ்வின் இலக்கு என்பதுபோல் கண்டம் விட்டு கண்டம் தாவுகிறாள்.

பெண்களின் உடம்பை வியாபரமாக்கவே மேற்கத்தியர்களின் "பெண் சுதந்திரம்" கோஷம் :

பெண்களின் உடலை வியாபரமாகவே மேற்கத்தியர்கள் "பெண் சுதந்திரம்" கோஷத்தை எடுத்து வருகின்றனர். "நாம் மார்க்கத்தின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சமூகத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளோம்" என்று எடுத்துச் சொல்லப்பட்டபோது அப்படிச் சொன்னவர்கள் "பிற்போக்குவாதிகள்" என்றும், "பெண்ணினத்தை அடிமையாக வைத்திருக்க நினைப்பவர்கள்" என்றும் "உலக நடப்பு தெரியாதவர்கள்" என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். ஏன்! குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் கூட காலத்திற்கு ஒவ்வாதவை என்று பெயர்தாங்கி ‘முஸ்லிம் ஸ்காலர்’களாலேயே சாடப்பட்டன.

இழக்கப்பட்ட, இழந்து கொண்டிருக்கும் முஸ்லிம் இளம்பெண்களின் கற்புகளுக்கு பதில் சொல்லப்போவது யார்? சமுதாயப் பெண்களைக் கட்டிப்பிடித்துக் கதைத்துக் கொண்டிருக்கும் அந்த வாலிபர்களிடம் நமது சமுதாயப் கண்மணிகளாம் பெண் கண்மணிகளைத் தூக்கிக் கொடுத்தவர்கள் யார்? ஈமானையே துச்சமாக நினைக்குமளவுக்கு வாலிப சமுதாயத்தை மாற்றியமைத்தவர்கள் யாராக இருப்பினும், அவர் மறுமையின் மைதானத்தில் அழைக்கப்படுவார். விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.

பெற்றோர்களே! பிள்ளைகளை ஒழுக்கசீலர்களாக மாற்றி அல்லாஹ்விடம் ஒப்படையுங்கள். அதற்காக திட்டமிட்டு குடும்பத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.

தாங்களே ஊக்குவித்தால் அத்தகையோரிடமிருந்து எந்தப் பேச்சும் வெளிப்படாது. சீரழிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் விபத்துகள் என்று கூறிவிட்டு தாம் தப்பிக்க தேடிக்கொள்வார்கள்.

எனவே, சமுதாய அமைப்புகளே! இயக்கங்களே! கழகங்களே! திட்டமிட்டு நடக்கும் "இழுத்துக்குப் போவதை" இன்னமும் நீங்கள் விட்டுக்கொண்டே இருக்கப் போகிறீர்களா? வேண்டாம்! சமுதாய ஒழுக்கத்தைக் காக்கவும், அல்லாஹ்வின் கோபம் வெளிப்படுவதைத் தடுக்கவும் நீங்கள் களமிறங்குங்கள்.

நன்றி: மனாருல் ஹுதா

www.nidur.info