Home கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ ஈடேற்றத்துக்கு வழி இஸ்லாமே!
ஈடேற்றத்துக்கு வழி இஸ்லாமே! PDF Print E-mail
Sunday, 03 July 2011 07:41
Share

ஈடேற்றத்துக்கு வழி இஸ்லாமே!

முஸ்லிமல்லாத மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு மதத்தைப் பின்பற்றினால் போதும் ஈடேற்றம் கிடைத்துவிடும் என்று என்று நினைக்கின்றனர்.

உண்மையான இறைவேதமாம் திருக்குர்ஆன் அவர்கள் கேட்கும் பொதுவான சில கேள்விகளுக்கு பதிலையும் கொடுத்து விளக்குகிறது.

திருக்குர்ஆனின் 2:21 வசனம் . "மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம்."

அல்லாஹ் தன்னை வணங்கும்படி மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறான். ஆனால் மனிதர்களில் சிலர் 'ஏன் அல்லாஹ்வை நாங்கள் யூதராகவோ, கிறிஸ்தவராகவோ, ஹிந்துவாகவோ அவரவர்கள் மதத்தின் அடிப்படையில் இருந்துகொண்டு வணங்கக்கூடாது?' என வினவுகின்றனர்.

இக்கேள்விக்கு அல்லாஹ் பதிலளிக்கும்போது,

திருக்குர்ஆனின் "3:85 ஆவது வசனத்தில், "இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்" என்கின்றான்.

மேலும் திருக்குர்ஆனின் 5:3 ஆவது வசனத்தில், "இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;. ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்."

மேலும் திருக்குர்ஆனின் 7:40 ஆவது வசனத்தில், "எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வவரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுபப்போம்." என்கின்றான்.

''இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் (அலைஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாம்) ஆகியோர் யூதர்களாக இருக்க வில்லையா? ஏன் ஜீஸஸ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூட கிறிஸ்தவராகத்தானே இருந்தார்?'' என்று கேட்கின்றனர்.

திருக்குர்ஆனின் 3:52 ஆவது வசனத்தில், அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, "அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, ''அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; ''நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர் என்கின்றான் அல்லாஹு ஜல்லஷானஉத் தஆலா.

அதுமட்டுமின்றி திருக்குர்ஆனின் 2:170 ஆவது வசனத்தில் "மேலும், ''அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ''அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?" என்று கேள்விகணைகளாக அவர்கள்மீது தொடுக்கின்றான்.

ஆனால் என் குடும்பத்தார்களும் நண்பர்களும் உங்கள்மீது கோபம் கொள்வார்களே என்று நீங்கள் பயந்தீர்களானல் உங்கள்மீது அதிகமான கோபம் கொள்வதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வேயன்றோ!

அனைத்து வல்லமையும் மிக்க ஏக இறைவன், தனது வேதமாம் திருக்குர்ஆனில் முதல் அத்தியாயத்தின் 1-7 வசனங்களில் கூறுவதை கவனியுங்கள்:

1:1. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

1:2. அனைத்துப்புகழும்இஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

1:3. (அவன்) அளவற்ற அருளாளன்இ நிகரற்ற அன்புடையோன்.

1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

1;:5. (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்

உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:6. நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!

1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்லஇ நெறி தவறியோர் வழியுமல்ல.

நியாயத் தீர்ப்பு நாளன்று ஒவ்வொருவரது செயல்களுக்கும் அவர்களிடம் கணக்குக் கேட்கப்படும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

நீங்கள் அனைவரும் நியாயத்தீர்ப்பு நாளில், அவரவரது செயல்களுக்காக கணக்கு கேட்கப்படும்போது மற்றவர்களைக் குறைகூறி தப்ப முடியாது. என்பதை உணர வேண்டும்.

திருக்குர்ஆனின் 5:116. ஆவது வசனத்தில் "இன்னும், ''மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்" என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், ''நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்"" என்று அவர் கூறுவார்." (என்றும்,)

திருக்குர்ஆனின் 5:117 ஆவது வசனத்தில் ''நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), ''என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும் கூறுவார்கள்) என்று விளக்குகிறான்.

மறுமை நாளில் ஒவ்வொருவரும் தனக்காக மட்டுமே பாவமன்னிப்புத்தேடி மன்றாடும்போது நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே தனது உம்மத்துக்காக அல்லாஹ்விடம் மன்றாடக்குடியவராக இருப்பார்கள் என்பது புகாரி ஷரீஃபில் பதிவாகியுள்ளது.

மேலும், அல்லாஹ்வின் வேதம் தொடர்கின்றது....

70:6. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.

70:7. ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.

70:8. வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-

70:9. இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-

70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.

70:11. அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-

70:12. தன் மனைவியையும், தன் சகோதரனையும்-

70:13. அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-

70:14. இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).

எனவே தெளிவாக, அந்நாளில், நீங்கள் தனியாகவே இருப்பீர்கள்; உங்கள் பெற்றோர்கள் அல்லது உங்கள் நண்பர்கள் அல்லது அல்லாஹ்வுக்குப் பதிலாக நீங்கள் எவர்களை வணங்கி வந்தீர்களோ அவர்கள் எவரும் உங்களுக்கு உதவ வரமாட்டார்கள். அனைவரும் அச்சத்தால் நடுநடுங்கியவர்களாகவே இருப்பார்கள்.

அதைத்தான் திருக்குர்ஆனின் கீழ்க்கண்ட வசனங்கள் தெரிவிக்கின்றன.

80:34. அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -

80:35. தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;

80:36. தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-

80:37. அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

இனியாவது ஈடேற்றம் என்பது எதைக்கொண்டு என்பதை விளங்காதவர்கள் விளங்கிக்கொள்வார்களா?

- எம்.ஏ.முஹம்மது அலீ

www.nidur.info