Home கட்டுரைகள் அரசியல் கொப்புளங்கள்!!!
கொப்புளங்கள்!!! PDF Print E-mail
Friday, 24 June 2011 12:26
Share

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியின் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு வாடுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கொந்தளிப்பதற்கு பதிலடியாக சீரிப்பாயும் தமிழர்களின் ஏவுகணைகள் - இனிமேலும் பொதுமக்களை வாய்ச்சொல்லால் ஏமாற்றமுடியும் என்று கணக்கு போடும் கருணாநிதிக்கு இந்நாள் தமிழக மக்களின் பதில்:

o அய்யா மிஸ்டர் உளறல்! ஊழல் செய்வதற்கு முன் யோசித்து செய்திருக்கவேண்டும். இன்று கண்ணீர் விட்டு என்ன பயன்? 90 வயதை எட்டும் ஒரு முதியவர் எல்லா ஆசைகளையும் விட்டு ஒரு துறவியைப் போல் இருந்து ஆட்சி செய்து இருக்கவேண்டும். ஆசைகளின் மொத்த உருவமாய் குடும்பம் குடும்பமாக கொள்ளை அடித்தால் இதுதான் பலன். இன்னும் உங்களில் திஹார் போகவேண்டியவர்கள் நிறைய இருக்கிறார்கள். அதற்குள் இப்படி வேதனைப் பட்டால் எப்படி!!! By annakan

o நாற்பதாயிரம் தமிழ் பெண்கள் இலங்கையில் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு துளி ஆடை கூட இல்லாத பிணங்களாக லாரிகளில் தூக்கி எறியப்படுவதை பார்த்த பிறகு இதெல்லாம் ஒன்றும் பெரிய துன்பமாக படவில்லை. இன்னும் முகாம் மக்கள் துன்ப படுகிறார்கள். இந்த கொப்பளம் கதை பத்தாது. இன்னும் நிறைய இருக்கு. கருணாநிதியே! ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். அதுபோல் நீ எப்படி தமிழ் மக்களை முகாம்களில் ஊட்டி வளர்க்க ஆசை பட்டயோ அதுபோல் உன் மகளை சிறையில் ஊட்டி வளர்கிறார்கள். தன் வினை யாரை சுடும்? உட்கார்ந்து யோசி எல்லாம் நல்லா புரியும். கறுப்பு கண்ணாடியை இப்போதுதானே கழட்டி இருக்கிறாய். இனி எல்லாம் வெள்ளையாக தெரியும். By k.nagendiran

o எனது வாழ்க்கையில் மிகவும் சந்தோஷ படும் நாள் இதுவே. ஒரு லட்சம் மக்கள் கொள்ளப்படும் போது. மானாட மயிலாட நமீதாவை வைத்து பாத்துக்கொண்டு இருந்தாய் அல்லவா, நீ செய்த பாவம் எல்லாம் உன் பிள்ளைகளையே சாரும். By Mahe

o அய்யகோ தமிழுக்கு ஏன் இந்த சோதனை. கொழுமண்டபத்தில் அமரவேண்டியவளுக்கு கொப்புளமா தாங்க முடியவில்லையே. தமிழகத்தை ஆளும் தகுதியுடைய வம்ச கொழுந்துக்கு தனி சிறையா என்னே கொடுமை. ஆரிய பார்ப்பன சக்திகள் இந்த சூத்திரனுக்கு எதிராக நடத்தும் சதிதான் இதற்கு காரணம். By திராவிடன்

o ஊரு பணத்தை சாப்பிட்டா குஷ்டம் கூட வரும். By மோகன்

o "அய்யயோ கொல்றன்களே", "சிறையில் ஸ்டாலினை பூட்ஸ் காலால் மிதித்தனர்" போன்ற வசனங்களை ஏற்கனவே கேட்டு விட்டோம். இப்போது மகளுக்காக புது வசனம் சொல்கிறார். என்னவோ மகளை மட்டும் தனியாக வதைப்பது போல செய்தி வெளியிடுகிறார்! By velumani

o அங்கே சிறையில் இருப்பவர்கள் மட்டும் மனிதர்கள் இல்லையா ? அவர்களுக்காக என்றாவது ஒரு முறை வருத்த பட்டீரா ? நீர் இன்னும் நிறைய சந்திப்பீர் ! By கவின்- இங்கிலாந்து

o இந்த பிறவி விரும்பி இருந்தால் அன்று தமிழ் உயிர்களை கர்ற்பர்டியிருக்க முடியும் இல்லையா? இன்று இதனால் இந்த கோடரிகர்ம்பு உலகப் புகழ் பெற்று இருக்கலாம் உயிர் பிச்சை இகு கதரியபோர்த்து இவன் என்ன சொன்னான்? நான் பதவியை ராஜினாமா செய்தல் தனி ஈழம் கிடைக்குமா என்று திமிருடன் சொன்ன துரோகி இந்த கிழடு இது ஆரம்பம் இன்னும் அதிகம் இருக்கு By KOOPU

o உங்க குடும்பம் ஆட்டைய போட்ட பைசால ஒரு சிறு பகுதிய செலவிட்டு தரமான நிலகரி வாங்கி மின்சாரம் வழங்கியிருந்தா தமிழ் நாட்டில கோடிக்கணக்கான மக்கள் சூடு கொப்பளங்கள் இன்றி இருந்திருப்பார்கள். அதை ஒரு கணம் யோசியும். உமது மகளுக்கு சூடு கொப்பளம் வந்தால் மட்டும் உமக்கு வலிக்கிறதோ? By இளமுருகு

o உமது மகளுக்கு உடலில் கொப்பளங்கள் வந்திருக்கா எம் இனமக்கள் இராசாயான குண்டுகளாலும், கொத்துக்குண்டுகளாலும் பாதிக்கும் போது அதில் ஏற்பட்ட ரணத்தை அனுபவித்து மாண்டவர்களுக்கு, எப்படி இருந்திருக்கும். சிறையில் ஓய்வு எடுக்கும் உமது மகளுக்கு கொப்பளமா நீர் பேசுகிறிர் மனிதாபத்தை பற்றி...... By ஞானசேகர் S

o கருணாநிதி இதற்கு சிறந்த வழி இலங்கை தமிழர்களுகாக நீ பிரதருக்கு கடிதம் எழுதியது போல இப்ப கனிய காப்பாத ஒரு லெட்டர் போடு நைனா உடனே ரிசல்ட் கிடைக்கும், இறக்கம் இல்லாத தமிழர் தலைவா இப்ப உன் பொண்ணுக்கு என்றல் இதயம் துடிக்குதா? துடிக்கட்டும் மன்மோகன் சோனியா கு கண்டிப்பா காது கேக்காது! By சித்ரா lekha

o ஊழலின் ஊற்றுக்கண் ஊழல் ஒழிப்பைப் பற்றிப்பேசுகறது."சாத்தான் வேதம் ஓதுகிறது என்பது இதுதானோ? By இராம.பில்லப்பன்

o பல லட்சம் பேர்களின் ரத்தம் கொபுலங்கிலன் பண்ணைத் சுரண்டியதால், உடம்பில் கொப்புளம், இது கருணாவின் குடும்பத்திற்கு ஒரூ பாடம், கருணா நாடகம் ஆடுகிறார

o அடிச்சா பணத்தாள திகார் சிறைக்கு AC போட்டு குடு நைனா By silluvandu

o கருணாநிதிக்கு மகள் மேல் அக்கறை இருந்தால் கருணாநிதியும் ஜெயில்லே தங்க வேண்டியதுதானே முதல்லே இந்த கிழவனை ஜெயில்ல தூக்கி போடுங்கப்பா. கடைசிகாலத்துல ரொம்ப படுத்துகிறது By அகமதபாத் முர்த்தி

o எனது வாழ்க்கையில் மிகவும் சந்தோஷ படும் நாள் இதுவே.ஒரு லட்சம் மக்கள் கொள்ளப்படும் போது.மண்ட மயிலாட நமீதாவை வைத்து பாத்துக்கொண்டு இருந்தாய் அல்லவா, நீ செய்த பாவம் எல்லாம் உன் பிள்ளைகளையே சாரும்,தமிழ் நாட்டை பாத்து பாத்து கத்தினார்கள் காப்பற்றும் படி அப்போது உனக்கு பதவி சுகம் தடுத்தது.இப்போது யாரும் கவனிப்பார் இல்லாமல் டெல்லிக்கு காவடி தூக்கி ஒன்றும் செய்ய முடியாது.இந்தியாவின் உள்ள அத்தனை மீன் சந்தையிலும் எல்லா மீனும் கிடைக்கும் ஆனால் உனது மகளுக்கு ஜமீன் இப்போதைக்கு கிடைக்காது இது ஆத்மாக்களின் உத்தரவு By kanagaraj

o தன் மகள் சிறையில் இருப்பதற்காக அவர் வருத்தபடுவது ஒரு தகப்பனுக்கு உரிய உணர்ச்சி. எதற்காக மற்றவர்கள் மீது கோபப்படவேண்டும். கனிமொழி செய்தது குற்றம் தானே. அதற்கு தண்டிக்க படுவதும் நியாயம் தானே. By Ramar

o எவனோ பைத்தியக்காரன் உலர்ரன்ன எவன் கேட்பான், எத்தனை ஈழ தமில் மக்கள் செத்து மடிந்டறாக்கள் அப்போ இல்லாத பாசம் மகள் ந மட்டும் துடிகுதாட இது உங்களுக்கு பத்தாது இன்னும் இருக்கு மாப்ளைகளா..... By ராஜா M

o நரகத்தில் இதை விட நெருப்பான சூடு உனக்காகக் காத்திருக்கிறது, மறந்து விடாதே முதியவரே! By செல்வா சிதம்பரம்

o நாங்கள் (மக்கள்) வெயிலின் கொடுமையில் மின்விசிறி கூட பயன்படுத்த முடியாமல் மின் வசதியின்றி உடலில் கொப்பளம் வந்தது உங்கள் சிந்தைக்கு கூட அது எட்டவில்லை. ஆனால் மக்கள் பணத்தை கொள்ளையடித்து கொழுத்த உங்கள் செல்ல மகளை எண்ணி வருந்தாது முறையா? அடுத்து செல்ல மகளின் உடலில் கொப்புளங்கள் இருப்பதற்கே வேதனைப்படுகிறாயே, உடலில் உறுப்புகளே இல்லாமல் அங்கஹீனர்களாக ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் எந்த விதமான அடிப்படை வசதியும், மருத்துவ உதவியும் இல்லாமல் முள்வேலி முகாமில் இன்றும், இன்னமும் அடைபட்டு கிடக்கிறார்களே அது உன் கண்ணுக்கு தெரியவில்லையா? ஆனால் மனிதாபிமானம் பற்றி பேச மற்றும் தெரியும். கொத்துகுண்டுகளால் தமிழ்மக்கள் செத்துவிழுந்து கொண்டிருந்த போது அவர்களுக்காக என்ன செய்தாய் ? இங்கு பாராட்டு விழா, புத்தக விழா என்று உல்லாசமாய் இருந்தாய் என்பதை நினைக்கும்போது "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்று தான் சொல்ல தோன்றுகிறது. மேலும் திஹார் சிறையை குளிர்சாதன வசதி செய்து கொடுக்கலாமா? By natarajan , chidambaram

o கவலைப்படாதீங்க karunanidhi, கொள்ளை அடிச்ச பணத்தை எல்லாம் ஒரே thavanaiyil செலுத்தி விடுங்கள். ரசீதை கான்பித்தவுடனேயே, ஒரு நிபந்தனையும் இல்லாமல் கனிமொழியை வெளியில் விட்டு விடுவார்கள். அசலை செலுத்தினால் கூட போதும், வட்டி கூட தேவை இல்லை. நீங்கள் தயாரா ? By வெட்டி மாஸ்டர்

o விவஸ்தை இல்லாத மனிதனப்பா.பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டதனால்தான் சி பி ஐ இவர் மகள் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறதாம்.எல்லோரையும் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று நினைத்துகொண்டு சொல்கிறார்.இதை விட தமிழனக்கு வேறு இழுக்கு இல்லை. By vadivelu

o இந்த கிழட்டு நரி இன் முதலை கண்ணீரை கண்டு யாரும் வருந்த தேவை இல்லை. By கருணா

o தற்போதைய முதல்வரை பெண்ணென்றும் பாராமல் எலி நிறைந்த சிறையில் அடைத்தீரே, அப்போது என் போன்ற என்னன்ற உள்ளங்கள் வடித்த துயர கண்ணீரின் சாபம் தான் தற்போது நீர் வடிக்கும் (நீலி) கண்ணீர். பத்திரிக்கையும் சிபிஐயுமா உமது மகளை கோடி கோடியாக வாங்க சொன்னது. இன்னும் எத்தனை கலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டினை தமிழ் நாட்டினை. தமிழை காக்கும் கடவுளே தமிழன் விழித்துக்கொண்டான் என்பதை தெரிந்துக்கொள்ளும் By விஜயகுமார் ராஜாளியார்

o தன் மகள் சிறையில் இருப்பதற்காக அவர் வருத்தபடுவது ஒரு தகப்பனுக்கு உரிய உணர்ச்சி. எதற்காக மற்றவர்கள் மீது கோபப்படவேண்டும். கனிமொழி செய்தது குற்றம் தானே. அதற்கு தண்டிக்க படுவதும் நியாயம் தானே. ஒரு முதல்மந்திரியாக இருந்தவர் தம் கம்பனிக்கு ஹவாலகாரனிடம் இருந்து பணம் வாங்கி விட்டு நியாயபடுத்துவது தர்மமா. லஞ்சம் என்பது எல்லோருக்கும் புரியும்போது இவருக்கு மட்டும் புரியவில்லையா? ஒருவேளை மற்றவர்களுக்கும் இதில் பங்கு இருக்குமானால் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது, கோவையில் கள்ள நோட்டு அடித்து ஒருவர் மாட்டிகொண்ட போது யாரோ ஜி டி நாயுடு விடம் கேட்டார்களாம் "நீங்கள் தான் அந்த கள்ள நோட்டு அடிக்கும் கருவியை அவருக்கு கொடுத்ததாக பேச படுகிறதே" என்றபோது, அவர் சொன்ன பதில் " அடிக்க தெரிந்தவனுக்கு தப்பிக்கவும் தெரியவேண்டும்" என்று.

o நாற்பதாயிரம் தமிழ் பெண்கள் இலங்கையில் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு துளி ஆடை கூட இல்லாத பிணங்களாக லாரிகளில் தூக்கி எறியப்படுவதை பார்த்த பிறகு இதெல்லாம் ஒன்றும் பெரிய துன்பமாக படவில்லை.தொப்புள் கொடிகள் மீது கொத்து குண்டுகள் விழுந்தபோது , மனிதாபிமானமற்ற முறையில், நீ அறிக்கை விட வில்லையா???? By mani

o தாத்தாவே நீ வாங்கிய இரண்டாம் தர நிலக்கரியால் மின்வெட்டு . நாங்க எல்லாம் படிக்கமுடியாம , தூங்க முடியாமா, உடம்பு வெந்த போது எங்கே பொய் இரிந்திஹா . இப்போ இப்படி உருஹீறீங்க. By சலம்

o மகள் கலைஞர் டிவி க்கு லஞ்சம் வாங்கியது தந்தைக்கு முன்பே தெரியுமா என்பது தெரியாது.ஆனால் பாசத்தினால் தந்தை வருந்துகிறார்.பாவம்.தெரிந்திருந்தால் தடுத்திருப்பார?சென்ற பாதை சன் டிவி பாதை (மக்சிஸ் ) என்பது தெரிகிறது. சரத் வழி காட்டுதலோ? By robert luis

o இவர் எத்தனை சுய விளம்பர போராட்டங்களை நடத்தி இருக்கிறார். எத்தனை முறை மத்திய அரசாங்கத்தை மிரட்டி இருக்கிறார். அதனால்தான் மத்திய அரசு இவனை கண்டு கொள்ள வில்லை. By Deepak

o தி மு க டில்லியில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மத்திய ஆட்சியில் பங்கேற்று சுகத்தை அனுபவித்து வந்துள்ளது. முன்யோசனையுடன் திஹார் சிறைச்சாலையை முழு ஏசி செய்திருக்கலாமே! காலம் கடந்துவிடவில்லை. இப்போதாவது அந்த ஏற்பாட்டை செய்தால் இவரும் இவரது குடும்பத்தாரும் வர இருக்கும் கொப்புளங்களிருந்து தப்பிக்கலாம். By திண்டல் சங்கர நாராயணன்

o கருணாநிதி மகளுக்கு ஒடம்புல கொப்புளம் வந்ததே மனித தன்மையற்ற செயல் அப்படியென்றால் , தினம் தினம் எனது மீனவ மக்கள் சிங்கள கடற்ப்படயினால் துன்புறுத்தப்படுவதும் , அதற்க்கு விளக்கம் கேட்டாள் பேராசை காரணமாக எல்லை தாண்டி சென்றார்கள் எனக்க்கேளியாக கருணாநிதி கூறியது என்ன ஒரு இழிவான செயல் ? உண்மை என்னவென்றால் கருணாநிதியும் , கனிமொழியும் , ஏனைய திருடர்களும் பேராசை காரணமாக அதிக பணம் சேர்த்து உலகத்திலேயே முதல் பணக்காரர் என்ற இடத்தை எட்டுவதற்காக திருடியதன் விளைவுதான் இது . எனது தமிழினத்தின் படுகொலையும் , எனது மீனவனின் கண்ணீருக்கும் இத்த துரோகி கருணாநிதியையும், கனிமொழியும், மற்ற பிற கொடும்ப உறுப்பினர்களையும் சும்மா விட்டுவிடாது என்பது மட்டும் உண்மை . By அன்புக்குமரன் - இந்தோனேசியா

o நாட்டின் தேசிய சிறையான, திஹார் சிறையில் குளிர்சாதன வசதி செய்து கைதிகள் மனம் மகிழும்படி செய்யலாமே. மருத்துவத்தில் சிறந்த, நல்ல மருத்துவர்களை வைத்து ராஜ வைத்தியம் செய்தால் நல்லது. டில்லியில் சூடு அதிகம் உள்ளதால், சிறையை சிம்லா, நைனிடால், டார்ஜிலிங்க் போன்ற குளிர் பிரதேசங்களுக்கு மாற்றினால் இன்னும் நல்லது. By பி.டி.முருகன்

o உடலில் கொப்புளங்கள் இருப்பதற்கே வேதனைப்படுகிறாயே ,உடலில் உறுப்புகளே இல்லாமல் அங்கஹீனர்களாக ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லாமல், மருத்துவ உதவியும் இல்லாமல் முள்வேலி முகாமில் இன்றும் ,இன்னமும் அடைபட்டு கிடக்கிறார்களே அது உன் கண்ணுக்கு தெரியவில்லையா ? மனிதாபிமானம் பற்றியெல்லாம் பேச உனக்கு அருகதை இல்லை .கொத்துகுண்டுகளால் தமிழ்மக்கள் செத்துவிழுந்து கொண்டிருந்த போது அவர்களுக்காக என்ன செய்தாய் ? இங்கு பாராட்டு விழா, புத்தக விழா என்று உல்லாசமாய் இருந்தாய் ? அன்று வினை விதைத்தாய் இன்று அறுவடை செய்கிறாய். By மூர்த்தி

o ஏன் இவர் ஆட்சியில் சிறையில் இருக்கும் தலித் மக்களுக்கு சப்ரமஞ்சமும் பால் பாயசமும் கொடுத்துகொண்டிருந்தரா என்ன? எத்தனை அப்பாவிகளை இவரது ஆட்சியில் போலீஸ் காரர்கள் பணத்துக்காக துன்புறுத்தி இருப்பார்கள்? அந்த தலித் மக்களுக்கு வந்த கொப்புளங்கள் தான் இப்போது கனிமொழிக்கும் வந்துள்ளது என்பதை அவர் நினைவு கூற வேண்டும். செய்திகள் சரியானவையே. இவர் சொல்வது தான் தவறானது. இவரது அநியாய நடவடிக்கைகளால் எத்தனை ஏழை வீடுகள் அழிக்கப்பட்டன, எத்தனை தாய்மார்கள் மக்களை இழந்தனர். திராவிடராகிய இவருக்கு தமிழர்களின் துன்பங்கள் எப்படி தெரியும்? அடுத்தாற்போல் மழைகாலத்தில் தீகாரில் கொசுக்கள் வெட்டுக்கிளிகள் மாதிரி பறக்கும். என்ன செய்யபோகிறார்? இடப்பட்ட சாபங்கள் நிறைவேறுகின்றன. தனது சொத்துக்களை எல்லாம் அநீதி இழைக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இருப்பிடமாக கட்டித்தர கொடுப்பாரா? அவர் தன மகளை பற்றி அரற்றி கொண்டே இருப்பரே தவிர ஏழைகளுக்கு எதுவும் செய்யார் By adithyan

நன்றி: தினமணி