வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

போலியான சந்தோஷம்! Print E-mail
Saturday, 15 May 2010 08:26

போலியான சந்தோஷம்!

அறியாமையினால் ஏற்படுவது செயற்கையான சந்தோஷம். உண்மையில் அது சந்தோஷமே அல்ல.போலியான சந்தோஷங்களை அடைந்து, அவைதான் மெய்யான சந்தோஷங்கள் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்ற கருத்தை வலியுறுகிறார் ஸிர் ஷ்ரீ என்ற அறிஞர்.

ஒரு ஊரில் மனைவிக்கு பயந்த கணவன் ஒருவன் இருந்தான் (எல்லா ஊர்களிலும் அப்படித்தான்). அவனுடைய மனைவி கல்யாணத்துக்குப் பிறகு முதன் முதலாக தன் தாயாரின் வீட்டுக்குப் போகவிருந்தாள். 'ஒரு தங்கச் செயினை வாங்கிப் போட்டுக் கொண்டு போனால் என் வீட்டில் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள்' என்றாள் கணவனிடம். 'என்னிடம் அவ்வளவு பணம் இல்லையே என்ன பண்ணுவது ?' கேட்டான் கணவன்.

அவளுக்கு ஒரு ஐடியா தோன்றியது. 'என்னிடம் இரண்டு பவுனில் வளையல்கள் இருக்கின்றன. அதை எடுத்துப் போய் அழகான ஒரு தங்கச் செயினாக மாற்றிக் கொண்டு வாருங்கள்' என்றாள்.

Read more...
 
பொன்மொழி முத்துக்கள் Print E-mail
Wednesday, 20 January 2010 07:26

பொன்மொழி முத்துக்கள்

1. சின்னச் சின்ன விஷயங்கள் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சந்தோஷம் சின்ன விஷயம் இல்லை.

2. செலவுக்குமேல் வரும்படி உள்ளவன் செல்வன்; வரவுக்குமேல் செலவழிப்பவன் ஏழை.

3. போனால் வராதது ஒன்றே ஒன்று; அதுதான் காலம்(நேரம்).

4. மனைவி இல்லாதவன் அரை மனிதன்.

5. ஆண்களைவிடப் பெண்களுக்குப் பசி இரு மடங்கு; புத்தி நான்கு மடங்கு; ஆனால் ஆசைகளோ எட்டு மடங்கு. (பெண்கள் வருந்தற்க)

6. அழகுக்கு ஆற்றல் அதிகம்; ஆயினும் அதைவிட ஆற்றலுடையது பணமே!

7. உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது; அது செயலில் வெளிப்படவேண்டும்.

Read more...
 
லுங்கி! Print E-mail
Tuesday, 16 February 2010 09:05

லுங்கி  !

[ லுங்கியை விட காற்றோட்டமான உடை ஒன்று உண்டா என்று கேட்டால், இல்லவே இல்லை என்பதுதான் இன்றைய நிலை.

திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பார்ட்டிவேராக லுங்கி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தோனேஷியாவிலேயோ, மலேஷியாவிலேயோ இதை தேசிய உடையாகக் கூட அங்கீகரித்திருப்பதாக செவிவழி கேள்வி.]

''லுங்கியுடன் ஆபீஸ் போவதற்கு மனத்தடை இருக்கிறது. அரை டிராயரில் அது இல்லை!''- சமீபத்தில் டவுசர் பற்றிய விவாதம் ஒன்றின்போது ட்விட்டரில் எழுத்தாளர் பாரா சொன்னது இது.  

''லுங்கி கட்டிக்கொண்டு படம் பார்க்கும் போராட்டம் நடத்துவேன்!'' சில வாரங்களுக்கு முன்பாக எழுத்தாளர் ஞாநி குமுதத்தின் ஓ பக்கங்களில் சென்னை கமலா தியேட்டர் நிர்வாகத்தை இவ்வாறாக எச்சரித்திருந்தார். அதாவது புதுப்பிக்கப்பட்ட கமலா தியேட்டருக்கு லுங்கி கட்டிக்கொண்டு படம் பார்க்க வருபவர்களை அனுமதிக்கவில்லை என்பதற்காக இவ்வாறு ஞாநி எச்சரித்திருந்தார். பிற்பாடு கமலா தியேட்டர் ''லுங்கி கட்டிக்கொண்டு வரலாம்'' என்று ஞாநிக்கு சிறப்பு அனுமதியும், மற்றவர்களுக்கு சாதா அனுமதியும் தந்தது, தொடங்கவே தொடங்காத அவரது போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

Read more...
 
உயிரைப் பற்றி அன்றும், இன்றும், என்றும்! Print E-mail
Thursday, 23 February 2012 07:36

    உயிரைப் பற்றி அன்றும், இன்றும், என்றும்!    

''முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உன்னிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' என்று கூறுவீராக.'' (குர்ஆன் 17:85)

குர்ஆன் கூறும் இந்த வசனம் நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. குர்ஆனின் பல வசனங்கள் உலகில் உள்ள அனைத்து படைப்புகளைப் பற்றியும் சிந்திக்கச் சொல்கிறது. விண்வெளி பயணம் மனிதர்கள் ஆகிய நீங்கள் செய்ய முடியும். இன்னும் பல அறிவியல் முன்னேற்றங்களைக் கண்டாலும் உயிரைப் பற்றி உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாது என்று அடித்து சொல்கிறது குர்ஆன். 'மனிதனே நீ குறைவாகவே அறிவு கொடுக்கப்பட்டிருக்கிறாய். உயிரின் சூட்சுமத்தை உன்னால் அறிந்து கொள்ள முடியாது' என்று கூறுகிறது.

உயிரைப் பற்றி சில யூதர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது என்ன நடந்தது என்பதை பின் வரும் புகாரி ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.

பேரீச்ச மட்டை ஒன்றைக் கையில் ஊன்றியவர்களாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றை அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் 'ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்' என்றார்.

அவர்களின் இன்னொருவர் 'அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை' என்றார். அவர்களில் மற்றொருவரோ, '(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்' என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து, 'அபுல் காஸிம் அவர்களே! உயிர் என்றால் என்ன? என்று கேட்டார்.

உடனே நபி அவர்கள் மெளனமானார்கள். 'அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகும் வரை பொறுத்திருந்தேன்)) அவர்கள் தெளிவடைந்தபோது '(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப்படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!' (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஸஹீஹூல் புகாரி 125) Volume:1, Book: 3)

Read more...
 
அனைத்து தமிழர்களுக்கும் பொதுவான கலிமா பிரச்சாரம் துளிர்விடவில்லை! Print E-mail
Saturday, 17 March 2012 15:12

     தாவத் நெருக்கடிகள் !  

[  ஐம்பது ஆண்டுகள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் மத பிரச்சார பீடங்களை அலங்கரித்தவர்கள் ஒரே ஒருவரையும் இஸ்லாம் மதத்துக்குள் நுழைக்கவில்லை.   களப்பணி காட்டும் உண்மை புள்ளிவிவரம் இது.]

இந்துக்களை முஸ்லிமாக மாற்றுவது, தாவத் பணி இலக்கு.

அரசாங்கம் இந்துக்களின் பெரும் ஆதரவில் நிலைநிறுத்தப்படுகிறது.

மதமாற்றம் சொல்லாட்சி மிகக் குறுகலானது. சிக்கலை வரவழைக்கும். காவல்துறை, நீதிமன்றம், பாயும். முகமூடி தேவைப்படுகிறது. ‘‘அழைப்புப் பணி’’ சொல் பயன்தருகிறது. பாதுகாப்பு கிடைக்கும்.

இந்து சமுதாயத்தில் ஒருவரும் மதம் மாற தயாராயில்லை.

குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் அரசின் பல சலுகைகளை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டுள்ளனர். பண வசதி, வேலை வாய்ப்பு, கல்வி, விடுதி சலுகை, கடன் தள்ளுபடி, சுகத்தை தியாகம் செய்ய யாரும் விரும்புவதில்லை.

எண்பது ஆண்டுகள் முன்னர், ‘‘மேடை முதலாளிகள்’’ நெல்லை சுற்றுப்புற மாவட்ட பகுதிகளில் மத மாற்றம் செய்தனர். தொடர்ந்து வந்த மாநில, மத்திய அரசுகள் தாழ்த்தப்பட்ட குடிகளை கல்வி, பொருளாதார நிலைகளில் உயரே தூக்கி நிறுத்தின. மதமாற்றம் அவசியப்படவில்லை.

Read more...
 
அரபு தேசத்தை பிளவு படுத்திய ஐரோப்பிய காலனித்துவம். – ஓர் அரசியல் நோக்கு! Print E-mail
Wednesday, 27 November 2013 07:08

காலனித்துவம் என்பது ஐரோப்பாவின் மையவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். கடந்த காலங்களில் காலனித்துவம் வெற்றி பெருவதற்கு அல்லது முஸ்லீம் ஆட்சியாளர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஐரோப்பாவின் ஆட்சி மேலோங்குவதற்குறிய அடிப்படைக் காரணம் முஸ்லீம் சாம்ராஜ்யத்தின் வெளிப்படையான இயலாமை தான் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக முஸ்லிம் நாடுகளை தனது ஆக்கிரமிப்பில் வைத்திருந்த ஐரோப்பிய நாடுகளின் தாக்கத்தினால் பல விதமான கலாசார சீர்கேடுகளுக்கும் சிந்தனா ரீதியிலான பிரச்சினைகளுக்கும் முஸ்லீம் நாடுகள் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

அது மட்டுமன்றி காலனித்துவத்தில் இருந்து மீண்ட நாடுகள் மீண்டும் ஸ்திரத் தன்மையை அடைய முடியாத அளவுக்கு பின்விளைவுகளை விட்டுச் சென்றதுடன், பொருளாதாரத்தையும் தேவைக்கும் அதிகமாகவே மேற்கு நாடுகள் சூரையாடிச் சென்றன.

முஸ்லீம் உலகின் அறிவியல் பொக்கிஷங்களை திருடியர்கள் கிருத்துவத்தின் திரித்துவ சிந்தனையை முஸ்லீம் நாடுகளில் விதைப்பதற்கு முயன்று தேவாலங்களையும் அமைத்துவிட்டு சென்றார்கள். 

19-ம் நூற்றாண்டு காலப்பகுதியில் நடை பெற்ற காலனித்துவ படையெடுப்புகள் கிருத்தவ மதத்தை பரப்புவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. மட்டுமன்றி ஐரோப்பிய கலை, கலாசார தினிப்புகளையும் இதன் மூலம் கட்டவிழ்த்துவிட்டார்கள்.

Read more...
 
கரணம் தப்பினால் மரணம் எனும் விதியின் கீழ் தவிக்கும் 'யகூதி நசாரா' கூட்டு! Print E-mail
Saturday, 20 July 2013 10:06

Image result for 'யகூதி நசாரா' கூட்டு!

கரணம் தப்பினால் மரணம்

எனும் விதியின் கீழ் தவிக்கும்

'யகூதி நசாரா' கூட்டு!

இந்த முஸ்லீம் உம்மத் மிக நீண்ட காலம் தனக்கு முன் எதிர்ப்படும் தடைகளை முற்றுப்புள்ளியாக்கி எஞ்சிய மார்க்கத்தோடு (தனது அடயாளப் படுத்தலோடு)திருப்தி காணுவது; எனும் முடிவுரையிலேயே தனது போராட்ட சிந்தனைகளை மழுங்கடித்து வாழ்ந்து வந்தது. ஆனால் தடைகளை தாண்டுவது என்பது தான் இலட்சிய வாத போராட்டத்தின் உண்மையான வடிவம் ஆகும். இங்கு இழப்புகள் இறப்புகள், ஒரு விடயமே அல்ல. கொள்கை கொச்சைப் படுத்தப்படக் கூடாது. இலட்சியம் கோமா நிலைக்கு கொண்டு செல்லப் பட்டு தகுதியற்றதாக மாற்றப்படக் கூடாது. ஆனால்   இதுவரை நடந்தது இந்த நாசகாரம் தான் .
 
இந்த உம்மத்தின் சிந்தனை தெளிவின்மையும், தலைமைகளின் தவறான வழி நடாத்தலும் இஸ்லாத்தின் நடைமுறை சாத்தியம் பற்றி' குப்பார்களின்' தடைகளுக்கு முன்,' குப்பார்களின்  சதிகளுக்கு முன் அதில் ஒரு அங்கமாக நின்று பிரதிபளிப்பது தான் இஸ்லாத்தின் போராட்டம் என தவறான சாயம் பூசப்பட்டது. விளைவு முஸ்லிமிற்கே 'வஹி' வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியது.

வாழ்க்கையே' வஹியாக்க' வேண்டிய சமூகம் காலத்தையும், சூழ்நிலையையும் கூட்டுச் சேர்த்து ஒரு இணைவைப்பை இபாதத் ஆக்கியது. அதாவது வஹி மாற்ற வேண்டிய காலமும் சூழ்நிலையும் வஹியையே காலாவதி ஆக்கியது. இந்த தவறை சுட்டிக் காட்டுபவர்களிடம் "நீங்கள் சித்தாந்த வாதிகள் உங்களது போதனைகள் சாத்தியமற்றது" என கூறவும் பட்டது. (ஆகக் கொடுமையானது 'வஹியின்' முன்னுரிமை தொடர்பில் முஸ்லீம்களின் வாக்குப் பலத்தை கேட்கத் தொடங்கியதே.)

Read more...
 
நவ யுகத்தின் அறைகூவலும் நமது இளைஞர்களும்! Print E-mail
Sunday, 22 May 2011 06:40

Image result for muslim youth logo

நவ யுகத்தின் அறைகூவலும் நமது இளைஞர்களும்!

    மௌலான அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)   

நவ யுகத்தின் அறைகூவலும் நமது இளைஞர்களும்! இது தான் இன்று எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் சொற்பொழிவின் தலைப்பு!

நவயுகம் என்றால் என்ன? இதைப்பற்றி முதலில் நீங்கள் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்து வந்த மனிதன் தனது காலத்தை நவயுகம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறான். சென்று போக யுகம் பூர்வீகம். அதில் மனித சமுதாயத்திற்கு எத்தகைய நன்மையும் விளையவிலலை என்றே கருதி வந்தான்.

அக்கால மக்கள் அறியாமையிலும், மௌட்டீகத்திலும் மூழ்கிப் போயிருந்தனர். தெளிவான சிந்தனையுள்ளவர்கள், கல்வி கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், விஞ்ஞான விற்பன்னர்கள் என்றும், சென்ற கால் மக்களுக்கு கிடைக்கப் பெறாத அனைத்து வசதிகளையும் நாம் பெற்றிருக்கின்றோம் என்றெல்லாம் எண்ணி வந்தான். இப்படியே அந்தந்த காலத்தில் வாழ்ந்த மனிதன் தவறான எண்ணத்திற்கு பலியாகி விட்டிருந்தான்.

மனிதனுக்கு இறைவன் சிறுகச் சிறுக அருளியிருந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களை ஒதுக்கி விட்டு பொதுவாக நாம் பார்க்குமிடத்து, ஆதிமனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலந்தொட்டு இன்று வரை ஆரம்பத்தில் எப்படி இருந்தானோ அப்படியே தான் இருக்கின்றான்.

Read more...
 
ஷரீஅத் அமெரிக்காவை அச்சுறுத்துகின்றது - SHARIA THE THREAT TO AMERICA Print E-mail
Monday, 31 March 2014 06:31

ஷரீஅத் அமெரிக்காவை அச்சுறுத்துகின்றது - SHARIA THE THREAT TO AMERICA

இப்படியொரு அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த அறிக்கை அதாவது ஷரீஅத் அமெரிக்காவை மிரட்டுகின்றது என்ற அறிக்கையை தயாரித்தது ஏதோ ஒரு தனிமனிதரோ அல்லது ஆராய்ச்சி நிறுவனமோ அல்ல.

அமெரிக்காவின் இராணுவ தலைமையகம் பெண்டகன். இந்த அறிக்கையை தயார் செய்து இருக்கின்றது.

இதில் அங்கம் வகித்தவர்கள் அனைவரும் அமெரிக்காவின் எதிர்காலத்தை மட்டுமல்ல. எதிர்வரும் நாள்களில் எங்கெல்லாம் அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் வகுத்து தருபவர்கள்.

ஷரீஅத் அமெரிக்காவை அச்சுறுத்த முடியுமா....?

அமெரிக்காவை அச்சுறுத்த வேண்டும் என்றால் அமெரிக்கா செய்து தயாராக வைத்திருக்கும் ஆயதங்களை விஞ்சிடும் வண்ணம் உள்ள ஆயுதங்கள் அமெரிக்காவை அச்சுறுத்தலாம். அல்லது அமெரிக்காவை விஞ்சும் விஞ்ஞான வளர்ச்சியை பெற்ற ஒரு நாடு அமெரிக்காவை அச்சுறுத்தலாம். ஆனால் ஷரீஅத் எப்படி அமெரிக்காவை அச்சுறுத்த முடியும்?

400 பக்கங்களை கொண்ட பென்டகனின் அறிக்கை சொல்கிறது ஷரீஅத்தால் அமெரிக்கா அச்சப்பட்டு நிற்கின்றது என்று!

Read more...
 
பர்தாவைப்பற்றிய ஊடகங்களின் சூழ்ச்சிக்கு இரையாகாதீர்கள் Print E-mail
Monday, 03 May 2010 16:17

பர்தாவைப்பற்றிய ஊடகங்களின் சூழ்ச்சிக்கு இரையாகாதீர்கள்

பர்தாவை எப்படியாவது சந்திக்கு இழுத்து அதை மதிப்பிழக்கச்செய்ய வேண்டும், முஸ்லீம் பெண்கள் மத்தியில் அதைப்பற்றி தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்த வேண்டும், அதை எப்படியாவது ஒழித்துகட்டியே தீர வேண்டும்என்று உலக ஊடகங்கள் தலைகீழாக குட்டிக்கரணம் போட்டுக்கொண்டே இருக்கின்றன.

அதன் ஒரு பகுதியாக 02 05 2010 NDTV-யில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். நமது நாட்டிலுள்ள முஸ்லீம் பெண்களில் 'புர்கா' அணியாத பெண்களை விட 'புர்கா' அணியும் பெண்கள்தான் அதிகம் என்பது உலகத்துக்கே தெரிந்த விஷயம். ஆனல் அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் 90% முஸ்லீம் பெண்கள் (!!!) தலையை திறந்து போட்டுக் கொண்டு கலந்து கொண்டதிலிருந்தே அந்த தொலைக்காட்சியின் சூழ்ச்சி என்னவென்பதை புரிந்து கொள்ள முடியும்.

இந்த நிகழ்ச்சிக்கு தங்களுடைய மகளை அனுப்பி வைத்த முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விஷயம் விளங்க வேண்டும். அதாவது ஒரு முஸ்லீமான பெண் 'புர்கா' அணியாமல் திரிவது ஷரீஅத்தின் பார்வையில் நிச்சயமாக குற்றம்தான். இதை எவரும் மாற்ற முடியாது என்பதோடு அப்படிப்பட்ட பெண்களை நரகத்தில் கண்டபோது அதற்கான தண்டனை என்னவென்பதையும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிந்து உலகுக்கு தெரிவித்தும் விட்டார்கள்.

Read more...
 
திருக் குர்ஆன் குறித்த கேள்வி பதில்கள் Print E-mail
Wednesday, 25 March 2009 18:15

பதில்கள்: டாக்டர் ஜாகிர் நாயக்

கேள்வி-1: குர்ஆன் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் எழுதப்பட்டது. அது இறை வேதமல்ல என்பது தானே உண்மை?

கேள்வி-2: குர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் காலத்தில்; உஸ்மான் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களால் எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.

பதில்: இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது, குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று.

எந்த அருள்மறை முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான், இஸ்லாமிய உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில் திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம்.

Read more...
 
ஞானம் பெறுவது தலையாய கடமை Print E-mail
Wednesday, 14 November 2012 05:50

ஞானம் பெறுவது தலையாய கடமை

  நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்    

இஸ்லாத்தைப் பற்றி, அப்புனித மதத்தின் தீர்க்கதரிசி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி, பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒவ்வொரு இஸ்லாமிய இளைஞனும் திறம் பெற்றிருக்க வேண்டும்.

மற்ற மத நண்பர்களோ நம் மதத்திலேயே நமது நாகரிகம், கலை, பண்பாடு முதலியவற்றை அறியாத பாமர மக்களோ நம்மிடம் விளக்கம் கேட்கும் போது கொஞ்சமும் தயங்காது விரிவுரை தருவதற்கு நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.

இதற்குப்பல வழிகள் இருக்கின்றன. பொதுவாக ஒவ்வாரு முஸ்லிம் கிராமத்திலும் சங்கங்கள் இயங்கிவருகின்றன.

திருமண வைபவங்களில் கலந்து பணியாற்றுவதையே பிரதானக் கடமையாக அவைகள் கருதுகின்றன. அப்படி இல்லாது இன்னும் பல பணிகளில் அவைகள் ஈடுபட வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பொருள் பற்றி அங்கத்தினர்களிடையே கருத்தரங்கு, விவாதம், பேச்சு முதலியவை நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும். பெரிய மனிதர்களை அழைத்து பார்வையாளர்களாக இருக்கச் செய்ய வேண்டும்.

இஸ்லாமியக் கருத்துக்களைப் பின்னணியாக வைத்து பலவித எழுத்தோவியங்கள் அங்கத்தினர்கள் எழுதி மாதம் ஒரு முறை கையெழுத்துப் பத்திரிக்கை கொண்டு வரவேண்டும். வருடத்திற்கு ஒரு சிறப்பு மலர் உருவாக்கி அதை அச்சிலேற்றி விநியோகிக்க வேண்டும்.மனிதன் எதையும் தானாக செய்வதில்லை.

Read more...
 
மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்! Print E-mail
Sunday, 21 February 2010 08:17

[ அமெரிக்காவிலும்ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளிலோ முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்லாம் அங்கு வளர்ந்து வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி கேலிச்சித்திரம் வரைந்த டென்மார்க் நாட்டில் இஸ்லாம் அதிவேகமாக வளர்ந்து வருவதாக அந்த நாட்டைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் கூறுகிறார்.

இத்தகைய அதிவேக வளர்ச்சியைக் கண்டு பொறுக்காத மேலை நாட்டுச் சக்திகளும், மிஷனரிகளும் பல்வேறு வகையான திட்டங்களைத் தீட்டி இஸ்லாத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்த முனைகின்றனர். இவர்களின் இந்த கீழ்தரமான செயல்களை ஒரு பெரிய பட்டியலாகவே வெளியிடலாம்.]

அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தங்களின் கொள்கைகைளைத் தாங்கிப் பிடிக்க இயலாத மேலை நாட்டு சக்திகளும், தாங்கள் பின்பற்றும் சமயத்தை விட சத்திய இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதைத் சகித்துக் கொள்ள இயலாதவர்களும் இஸ்லாத்தைப் பற்றி பொய்யான தகவல்களையும், அவதூறுகளையும் கூறி இஸ்லாத்தின் மீது சேற்றை வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றனர்.

Read more...
 
இந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா? Print E-mail
Monday, 06 May 2013 06:56

Image result for indian muslim politics

இந்திய அரசியல்

முஸ்லீம்களுக்கு ஹராமா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

"இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள் " (அல்குர்ஆன் 2:208).

ஒரு முஸ்லீமின் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் அடுக்களை முதல் ஆன்மீகம் வரை, பள்ளிவாயில் முதல் பாராளுமன்றம் வரை என அனைத்திற்கும் தீர்வை குர்ஆன் மற்றும் அதன் விளக்கவுரையாக திகழ்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலிருந்தே தேட வேண்டும் என குர்ஆன் வலியுறுத்துகிறது.

அதனடிப்படையில் வாழ்வின் மற்ற துறைகளை போல் அரசியல் குறித்த இஸ்லாமிய கொள்கையையும் இந்திய அரசியல் குறித்த இஸ்லாத்தின் பார்வையையும் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இஸ்லாத்தின் அரசியல் கொள்கைஅல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது (அல்குர்ஆன் 33:21) எனும் திருமறை வசனத்திற்கேற்ப அனைத்து விடயங்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்ற வேண்டிய முஸ்லீம்கள் "என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்" (மாலிக் –ஸஹீஹுல் புகாரி 9.352) என்ற ஹதீதின் அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொழுகையில் பின்பற்றும் முஸ்லீம்கள் கூட இஸ்லாமிய அரசியல் கொள்கை குறித்து தெளிவற்றவர்களாக உள்ளனர்.

''ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனை தவிர வேறு யாருக்கும் அடிபணியக் கூடாதென்று இறைவன் கட்டளையிட்டுள்ளான்.'' (அல்குர்ஆன் 12:40, 4:65, 5:18, 6:57, 7:3) என குர்ஆன் பகர்கின்றது.

வானின் அதிபதியே இப்பூமிக்கும் அதிபதி. எந்த இறைவன் பூமியை படைத்தானோ அவனுடைய சட்டங்கள் தான் பூமியை ஆள வேண்டும் என்பதையே பகுத்தறிவு உணர்த்தும்.

Read more...
 
குடும்ப முன்னேற்றத்திற்கு தடையாக நிற்கும் பெண்கள்! Print E-mail
Tuesday, 17 April 2012 06:29

குடும்ப முன்னேற்றத்திற்கு தடையாக நிற்கும் பெண்கள்!

இன்றைய சூழலில் படித்த அனைவருக்கும் பாதுகாப்பான அரசு வேலை கிடைப்பது சாத்தியமில்லை. தனியார் துறையும் மாத சம்பளத்திற்கு எல்லோருக்கும் வேலை கொடுத்துவிட முடியாது. ஏதேனும் சொந்தமாக தொழில் துவங்கி முன்னேறுவதே வழி. திருமணமான ஆண்கள் இத்தகைய முயற்சி எடுப்பதை பெண்கள் ஆதரிப்பதில்லை.

’’இங்கு வரும் பெண்களில் பெரும்பாலானோர் எதிர்மறை சிந்தனை(Negative thinking) கொண்டவர்களாக இருக்கிறார்கள்” என்கிறார் சுய தொழில் துவங்க ஆலோசனை வழங்கும் நண்பர் ஒருவர். பெண்கள் திரும்பத்திரும்ப ”நஷ்டம் ஆகி விட்டால் என்ன செய்வது?” என்பதையே அதிகம் கேட்கிறார்கள். ஒரு உதாரணத்தையும் கூறினார்.

சாதாரண அரசுப்பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றவரின் மகன் அவர்.படிப்பு,தந்தை சொத்து இவ்ற்றை வைத்து திருமணமும் ஆகி விட்ட்து. ஒரு தனியார் கம்பெனியில் வேலையில் இருந்தார். நாளாக நாளாக வருமானம் போதவில்லை. இப்போது தந்தையும் இல்லை.சில லட்சங்கள் கையில் இருந்த்து. சொந்தமாக வீடு கட்டவேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான எதிர்பார்ப்புகள். திறமையான ஆள். எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் மனைவி தொழில் துவங்க மறுத்து விட்டார்.அவர் மனைவி சொன்ன காரணம் எதற்கு ரிஸ்க் என்பதுதான்.

Read more...
 
பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...! Print E-mail
Friday, 11 May 2012 06:12

  பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...! 

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை பெண்களுக்கு மட்டும் தானா?!

தவறு செய்வதற்கு அச்சம் இருப்பதுதானே முறை. நாணப் படுவதற்கு நாணப்படுவதுதானே உயர்வு "அஞ்சுவது அஞ்சாமை பேதமை" .இது ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியம் தேவை . வீரம் நிறைந்தவனாக ஆண் மட்டும் இருந்தால் போதுமா! தனக்கு வரும் ஆபத்தினை எதிர்கொள்ள ஒரு பெண்ணுக்கும் அவசியம் தேவை . குணங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சில வேறுபாடுகள் இருந்தாலும் இக்காலத்தில் பலவகையான குணங்களை ஆணும் பெண்ணும் அவசியம் பெற்றுக்கொள்ள தேவைப் படுகின்றது.

அனைத்துக்கும் மேலாக நல்ல காரியங்களுக்காக ஆணும் பெண்ணும் அனுசரித்து போகும் நிலை அவசியம் தேவைப் படுகின்றது. ஆணின் காலில் விழும் பெண்ணின் குணமும் பெண்ணின் காலில் விழும் ஆணின் குணமும் அவசியம் அழிக்கப் படவேண்டும். சுமரியாதையை வளர்த்து இறைவன் ஒருவனுக்கே அடிபணிவேன் என்ற மனப்பக்குவம் வந்தே ஆக வேண்டும். உனது உரிமை எனது உரிமையை பாதிக்கக் கூடாது என்பது பொதுவான சிந்தாந்தம். வாழ்வோம் வாழ விடுவோம் இதுதான் நம் கொள்கையாக மாற வேண்டும்

Read more...
 
XX & XY : யாருக்காக..? Print E-mail
Friday, 10 February 2012 07:17

  ஹுஸைனம்மா  

[ பெண்கள் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான வீடுகளில், அவளது வருமானம் ஒரு உபரியாகவே கருதப்பட்டு, ஆடம்பரங்களுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்லலாம்.

குடும்பத்திற்காகத்தானே சம்பாதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே, குடும்பத்தின் நிம்மதி இழக்கவும் காரணமாகிவிடக்கூடாது.

பணம் என்பது, குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற, பாதுகாக்க அவசியமான ஒரு பொருள். அவ்வளவே. ஆனால், அதைச் சம்பாதிப்பதுதான் ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கு, சுதந்திரத்திற்கு அடையாளம் என்பதில் எனக்குச் சிறிதும் ஒப்புதலில்லை.

குடுமபத்திற்காகப் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாப்பதிலும் உள்ளது.

ஒருவருக்கு பணம் சம்பாதிக்கும் பொறுப்பு என்றால், இன்னொருவருக்கு குடும்பத்தைப் பேணும் பொறுப்பு - இரண்டுமே ஒன்றுக்கொன்று பளுவில் குறைவில்லாத வேலைகள்தாம்.]

Read more...
 
நன்மை பயக்கும் நபிமொழி - 17 Print E-mail
Wednesday, 29 October 2008 08:20

"நானும் அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் போது ஒரே பாத்திரத்தில் சேர்ந்து குளிப்போம் என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்.  நூல்: அபூ தாவூத் (குறிப்பு: முஸ்லிம், நஸயீ, அஹ்மது ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

"ஒரே பாத்திரத்தில் இருந்து நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உலூச் செய்யும் போது எனது கையும் ரஸூல் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் கையும் போட்டி போட்டுக் கொள்ளும்" என்று உம்மு சுமைய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்.  (நூல்: அபூ தாவூத்) (குறிப்பு: இது இப்னுமாஜாவிலும் இடம் பெற்றுள்ளது.)

"அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து உலூச் செய்வார்கள்" என இப்னு உமர் ரளியல்லாஹுஅன்ஹு அறிவிக்கிறார்கள். முஸத்தத் அவர்களது அறிவிப்பில் 'ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்தில் உலூச் செய்வார்கள்" எனக் கூறியுள்ளார்.  நூல்: அபூ தாவூத் (குறிப்பு: நஸயீ, இப்னுமாஜா, முஅத்தா, புகாரி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

"அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் (ஆண்களாகிய) நாங்களும் பெண்களும் ஒரே பாத்திரத்தில் எங்களது கைகளை உள்ளே விட்டு உலூச் செய்வோம்" என இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: அபூ தாவூத்)

o "(உம்முல் முஃமினீன்) மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் குளித்து விட்டு எஞ்சிய தண்ணீரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளித்தார்கள்" என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள் (நூல்: முஸ்லிம்)

Read more...
 
விவாகரத்தும் குழந்தைகளும் Print E-mail
Sunday, 27 June 2010 09:05
 

விவாகரத்தும் குழந்தைகளும்

குழந்தைகளுக்கு பெற்றவர்கள்தான் எல்லாமும்.

இதனாலேயே அவர்கள் மீதான நம்பிக்கையும் அன்பும் மிக அதிகம்.

உண்மையில் பெற்றோரைவிட, குழந்தைகள் அவர்கள் மீது காட்டும் அன்பு மிக அதிகம்.

எந்த நிலையிலும் தன் அம்மாவோ அப்பாவோ துன்புற, தான் காரணமாகி விடக்கூடாது என்ற பய உணர்ச்சி அவர்களிடம் உண்டு.

விவாகரத்தின் போதோ இல்லை அம்மாவும் அப்பாவும் விவாதங்கள் செய்யும் போதோ இதற்கு தான் காரணமாகிவிட கூடாது என்ற பயமும் அதனால் அவர்களை மகிழ்விக்க செய்யும் சின்ன சின்ன செயல்களிலும் இதை புரிந்து கொள்ளலாம்.

ஒரு வேலையை விட்டுவிட நேரிடும் சில பெண்கள் எந்த காரணம் கொண்டும், ''உன்னால்தான் இதை விட்டேன்" என்று சினந்து சொல்லி விட்டால் குழந்தைகள் மனம் உடைந்து போய் விடுவார்கள்.

Read more...
 
மாமனிதர் (1) Print E-mail
Friday, 19 February 2010 10:35

  அபூமுஹம்மத்  

ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். எனது ஒட்டகம் சண்டித்தனம் செய்து (மற்றவர்களை விட) என்னைப் பின் தள்ளியது.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்து 'ஜாபிரா' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். '(பின் தங்கி வருவதற்கு) என்ன காரணம்?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டனர்.

என் ஒட்டகம் சண்டித்தனம் செய்து என்னைப் பின் தள்ளி விட்டது. அதனால் பின் தங்கி விட்டேன் என்று நான் கூறினேன். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தம் ஒட்டகத்திலிருந்து) இறங்கினார்கள்.

தமது வளைந்த குச்சியால் என் ஒட்டகத்தைக் குத்தி விட்டு 'ஏறுவீராக' என்றனர். நான் ஏறிக் கொண்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட முந்தி விடாதவாறு அதை இழுத்துப் பிடிக்க ஆரம்பித்தேன்.

Read more...
 
ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை! Print E-mail
Sunday, 27 March 2011 08:38

Related image

ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை!

[காஃபிரகளுடன் கூட ஆதாரங்களை முன்வைத்து அழகாகவும், பண்பாடாகவும் விவாதிக்குமாறு அல்-குர்ஆன் பணிக்கின்றது.’மேலும் அவர்களுடன் சிறந்த (பண்பாடன) முறையில் விவாதிப்பீராக.’ (16:125)

ஆனால் நாமோ நமது சகோதர முஸ்லிம்களுடன் முரண்படுகின்ற போதெல்லாம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களிலும் தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றோம். ஈமானிய உறவை மறந்து சொல்லம்புகளால் தாக்குகின்றோம். சொல்லால் மட்டுமன்றி கையால், கல்லால் அடிக்கவும் நாம் தயங்குவதில்லை. சில போது எமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக அடுத்த சகோதரர்கள் மீது பழி சுமத்துவதற்கும், அபாண்டங்களைக் கூறுவதற்கும் நாம் துணிந்து விடுவதுண்டு.

மொத்தத்தில் மார்க்கத்தின் பெயரிலேயே அது கூறும் சகோதரத்துவம், அன்பு, ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு முதலான பண்புகளுக்கு நாம் சாவு மணி அடிக்கின்றோம். முஃமின்கள் தம்மத்தியில் அன்புடனும் ஆதரவுடனும் இருப்பார்கள். நளினமாகவும் நயமாகவும் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் குறிப்பிடும் அல்குர்ஆனின் போதனைகளை காற்றில் பறக்க விடுபவர்களாக நாம் இருக்கின்றோம்.]

Read more...
 
More Articles...
<< Start < Prev 91 92 93 94 95 96 97 98 99 100 Next > End >>

Page 95 of 100

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article