வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

ஆபாசமும் அபத்தமும்தான் ஃபேஷன் டெக்னாலஜி! Print E-mail
Tuesday, 26 August 2008 08:28

ஆபாசமும் அபத்தமும்தான் ஃபேஷன் டெக்னாலஜி

தொழிற் கல்விப் படிப்புகளில் தற்போது அதிகக் கவனம் பெற்றுள்ளது உணவு தயாரிப்பு (கேட்டரிங்), ஆடை வடிவமைப்பு (ஃபேஷன் டெக்னாலஜி) ஆகியவைதான்.

வெளிநாடுகளுக்குச் சென்று அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற ஆவலைத் தூண்டும் (உண்மையோ, பொய்யோ) துறையாக சில ஆண்டுகளாக இவை பிரபலமடைந்துள்ளன.

இவற்றின் ஒரு பகுதியாக "ஃபேஷன் டெக்னாலஜி' எனப்படும் ஆடை வடிவமைப்பு பயிற்சிக் கல்லூரிகள் தொடங்கும் போதும், வழக்கமான கல்லூரி ஆண்டு விழாக்களிலும் "ஆடை அலங்கார அணிவகுப்பு' கட்டாயம் இடம்பெறுகிறது.

இங்கே தான் குழப்பமே. இந்த அலங்கார அணிவகுப்புகள் தமிழ்நாட்டு கலாசாரத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத அரைகுறை நடை, உடை, பாவனைகளுடன் அமைந்து விடுகின்றன.

நிச்சயமாகப் பொது இடங்களில் போட்டுக் கொண்டு வெளிவர முடியாத ஆடைகளை மட்டுமே அணிந்து கொண்டு, வழக்கமான மேடை கலாசாரமாகிய ஒளி வெள்ளத்தில், "ஆணிக்கால்' வந்தவரைப் போல "ஹை ஹீல்ஸ்' செருப்பு அணிந்து நடந்து வரும் இளம்பெண்கள், மேடையின் முன் அமர்ந்திருக்கிற நூற்றுக்கணக்கான மக்களுக்கு "பறக்கும் முத்தமும்' கொடுக்கிறார்கள்.

Read more...
 
வரதட்சணை வாங்குவது ஹலாலா? ஹராமா? மக்ரூஹா? மக்ரூஹ் தஹ்ரீமா? Print E-mail
Monday, 23 March 2009 08:29

  எம்.ஏ.முஹம்மது அலீ  

[ வரதட்சணை வாங்குவது ஹலாலா, ஹராமா, மக்ரூஹா, மக்ரூஹ் தஹ்ரீமா...?

ஹலாலாக இருந்தால் இந்த கட்டுரையே தேவையில்லை, ஒதுக்கித்தள்ளி விடுங்கள்.

ஹராமாக இருந்தால், 'அதை' ஒட்டு மொத்தமாக, இது ஹராம்தான் என்று தெள்ளத்தெளிவாக அறுதியிட்டுக் கூற தயக்கம் ஏன்?

ஹராமென்று முடிவெடுக்கும் பட்சத்தில் எந்த அடிப்படையில்; மார்க்க அறிஞர்களால் இதுபோன்ற திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன? ]

வரதட்சணைப்பற்றி கவலைப்படாத பெற்றோர்களில்லை, பேசாத தலைர்களில்லை, எழுதாத பத்திரிகைகளில்லை. ஆனால் ஏதோ கடலில் பெருங்காயத்தை கரைத்தது போன்று மிகவும் குறைந்த அளவுக்குத்தான் தடுக்க முடிந்ததே தவிர அதை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை. எப்போதுமே வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகின்ற சமுதாயம்தானே நாம்!

சொல்வதற்கு சங்கடமாகத்தான் இருக்கிறது! அனைத்திற்கும் அல்லாஹ்வின் அருட்கொடையாக, மானிட சமுதாயம் அத்தனைக்கும் வழிகாட்டியாக, எல்லாவற்றிர்க்கும் முன்னுதாரணமாக விளங்கும் எம்பெருமானார் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனையை பின்பற்ற வேண்டிய சமுதாயம், நமது நாட்டில் கடந்த சில தலைமுறைகளாக வரதட்சணையின் கோரப்பிடியில் சிக்கி இருப்பதைப் பார்க்கும்போது வரதட்சணைப்பற்றி இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஒரு தெளிவான பார்வை நமது சமூக மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை என்றே தோன்றுகிறது.

ஏன் மக்கள் உள்ளங்களில் அழுத்தமாகப் பதியவில்லை?!

Read more...
 
பெண்கள் பற்றி புராணங்கள்! Print E-mail
Thursday, 07 June 2012 07:01

பெண்கள் பற்றி புராணனங்கள்! 

பெண்கள்-எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடையாத, நம்பத்தகாத, சாக வேண்டிய, கழுதை போன்ற நிலையற்ற புத்தி படைத்த, கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை.

பெண் குலத்தை இழிவு படுத்துவதில் மகாபாரதமும், காவியங்களும் சிறிதும் பின் வாங்கவில்லை.

புரபசர் இந்திரா எம்.ஏ., (சாஸ்திர காவ்ய திரு.வித்யாலங்கார் எம்.ஓ.எல்., முதலிய பட்டம் பெற்றவர்) எழுதிய பழைய இந்தியாவில் பெண்கள் நிலை என்னும் புத்தகத்தில் 11-ஆம் பக்கம் முதல் 26- ஆம் பக்கத்திற்குள் உள்ளவற்றிலிருந்து...

அதாவது அவர்கள் பெண்களைப் பற்றி இந்து மத ஆதாரங்களான வேத சாஸ்திரங்கள் புராண இதிகாசங்கள் ஆகியவைகளிலும், பண்டைய அரசு நீதியிலும் காணப்படுவதைத் தொகுத்துக் குறிப்பிட்டிருப்பதாவது:

1- ஊர்வசி புரூரவ முனிவருக்குச் சொன்னது: (ரிக்வேதம் - 8-3-17) பெண்கள் நிலையற்ற புத்தி படைத்தவர்கள். அவர்கள் நம்பத்தகாதவர்கள்

2- ஊர்வசி புரூரவ முனிவருக்குச் சொன்னது: (ரிக்வேதம் - 10-95-10) பெண்கள் நட்பு நீடித்ததல்ல. அவர்கள் கழுதைப்புலியின் தன்மையுடையவர்கள்.

Read more...
 
என்னைக் கவர்ந்த இஸ்லாம்! Print E-mail
Wednesday, 22 December 2010 09:32

[ இஸ்லாம் ஓர் உண்மையான மார்க்கம்! அது முழுமையான மார்க்கம் என்று எனக்குத் தெரிந்தது! முஸ்லிம்கள் நல்ல பாசமாக நடந்து கொள்கிறார்கள். பைபிளில் ஏசு எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார். ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும்? ஏன் எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார்? என்று குழம்பிப் போய் இருந்தேன். குர்ஆனைப் படித்துப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அந்த கர்த்தரே அல்லாஹ் என்று!

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்''. (திருக்குர்ஆன் 2:208)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும், முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.'' (திருக்குர்ஆன் 3:102)

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!'' (திருக்குர்ஆன் 3:200)]

Read more...
 
ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை ஏன் வெறுக்கின்றனர்? (1) Print E-mail
Saturday, 24 November 2012 07:17

ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை ஏன் வெறுக்கின்றனர்? (1)

  அ.மார்க்ஸ் பதில்   

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து கோவில்களை சிதைத்தார்களா?

இந்துக்கள் மீது 'ஜிஸியா' என்னும் தண்டனை வரி? மத மாற்றம்?

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சி காரணம்?

போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார், பேராசிரியர் அ.மார்க்ஸ்.

கேள்வி - பதில் தொகுப்பு:

இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர். வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா?

வரலாற்று நூல்கள் உங்களுக்கு அப்படிப் போதித்துள்ளன. ஆனால் வரலாற்றை ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் இன்று இஸ்லாமியரை அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் இங்கே வந்து குடியேறியவர்கள்தான் என்பது விளங்கும். வடமொழி வேதங்களில் (கி.மு. 1500-கி.மு.500) 'தஸ்யு'க்கள் என்னும் உள்நாட்டு மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் படை எடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரீயர்கள் ரிக் வேதக் காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களுடன் கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினரை அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகா தவர்களாகவும் ஆக்கினார்கள்.

ரஜபுத்திரர்கள் கூடத் துருக்கியர்கள் குடியேறிய காலத்தில் இங்குக் குடியேறியவர்கள்தான். சௌகான், பரிகரர், சோலங்கி எல்லாம் வந்தேறிகள்தான். எனில் இஸ்லாமியரை மட்டும் வந்தேறிகள் எனச் சொல்வது என்ன நியாயம்? "ஆரியர் வருகை" எனச் சொல்லும் நம் பாட நூல்கள் "இஸ்லாமியர் படை எடுப்பு" எனச் சொல்வது பிஞ்சு மனத்தில் வகுப்பு வாதத்தை பதிப்பதில்லையா? இங்குள்ள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இந்த நாட்டுக் குடிமக்களாக இருந்து மதம் மாறியவர்கள்தான். யாருக்கும் வக்காலத்து வாங்குவதல்ல நமது நோக்கம். அரசியல் நோக்கில் இங்கே பரப்பப்பட்டுள்ள மதவெறி பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ளது.

Read more...
 
ஷவ்வால் மாத ஆறு நோன்பு Print E-mail
Saturday, 19 September 2009 17:16

ஷவ்வால் மாத ஆறு நோன்பு

       இப்னு ஹனீஃப்       

ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம்.

இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும். எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதக் கூடாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் "எவர் ஒருவர் ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடம் முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமம்". (ஆதாரம்: முஸ்லிம்)

ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி அறியாமல், அதனையும் நோற்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மையைப் பெறுவதில் கவனம் செலுத்தத் தவறி விடுகின்றோம்.

Read more...
 
தொழுகை ஓதுதலை ஒலிபரப்ப வேண்டாம்! Print E-mail
Saturday, 13 November 2010 11:20

பள்ளிவாசலில் தொழுவதை வெளி மைக்கின் மூலம் ஒலிபரப்ப வேண்டாம் என்று தமிழகத்தின் மூத்த ஆலிம்களில் ஒருவரான மவ்லவீ, டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி அவர்களைத் தலைவராகக் கொண்ட நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்மானம். ஒவ்வொரு மஹல்லாவும் பொறுப்புணர்வுடன் அதை ஏற்று நடப்பது மிகவும் அவசியம் என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை.

நோன்பு கால தராவிஹ் தொழுகைக்கு தெருவுக்குத்தெரு மைக்கை கட்டி வயோதிகர்களையும், நோயாளிகளையும், பெண்களையும், குழந்தைகளையும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளையும் பற்றி சிறிதுகூட கவனத்தில் கொள்ளாமல்; தொல்லைக்குள்ளாக்கும் செயலை ஏதோ நன்மையான காரியமாக் கருதி அதை நடைமுறைப்படுத்தி வருவது அமைதி மார்க்கமான இஸ்லாம் காட்டித் தந்த வழியல்ல.

கூட்டுத்தொழுகை என்பது பள்ளிவாசலுக்கு வருகின்றவர்களுக்கு மட்டுமே. அதை வெளி மைக் மூலமாகவும் தெருவுக்குத்தெரு குழல் ஒலிபெருக்கி மூலமாகவும் ஒலிபரப்பும்போது வீட்டிலுள்ள பெண்கள் தனித்து தொழும்போது அது எவ்வளவு இடையூறை விளைவிக்கும் என்பதை எவரும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

Read more...
 
உறங்கும் மனிதனே விழித்தெழு! - மகாகவி அல்லாமா இக்பால் Print E-mail
Thursday, 02 February 2012 09:10

MUST  READ

  முஸ்லிம்களே! முஸ்லிம்களாக வாழுங்கள்! 

[ மவ்டீகத்தில் மூழ்கியிருக்கும் முஸ்லிமே! உன்னை தூய்மையானவனாக ஆக்கிக் கொள்!

‘புறப்படு மகனே! இஸ்லாமிய புனிதப் பாதையில் புறப்படு! உனது உண்மையான நிலைமையை உலக மக்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. இவ்வையகத்தின் வாழ்க்கைக்கு முன்மாதிரயாக இருந்து அதைச் சீர்திருத்த நீ இன்னும் தேவைப்படுகிறாய்.

இளைப்பாறும் நேரம் உனக்கு எங்கிருக்கிறது? நீ செய்ய வேண்டிய பணி இனியும் எவ்வளவோ இருக்கிறதே! ஏகதெய்வக் கொள்கையின் மெய்யொளியைப் பூரணமாக்கும் சேவைக்காக உன்னுடைய தூண்டுதல் இவ்வுலகினுக்கு இன்னும் தேவையாய் இருக்கிறதே!

உனது ஊக்கத்தின் இயக்கத்தாலே உலகவாழ்க்கை பிரகாசமடைய வேண்டும். இறைவனுடைய கலீஃபாவாக – பிரதிநிதியாக உலகில் நீயே பிரகாசிப்பாய்.’ – மகாகவி, அல்லாமா இக்பால் ரஹ்துல்லாஹி அலைஹி ]

Read more...
 
சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்... Print E-mail
Thursday, 03 February 2011 08:59

சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்...

இஸ்லாமிய சமுதாயத்தின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும் போது, அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தோடு ஒன்றுபட்ட, ஒரே சமுதாயம் என்ற கட்டமைப்பு முற்றுப் புள்ளி பெற்றுவிட்டது. நபிகளார் இந்த உலகைப் பிரிந்த நேரத்திலிருந்தே பிரிவினை சக்திகள் சமூகத்திற்குள் ஊடுருவி பிளவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த சமூகம் ஒன்று பட்டுவிடக் கூடாது என்பதில் யூதர்களும், கிருத்தவர்களும் குறியாக இருந்தனர். அவர்கள் எவ்வாறு வேதம் அருளப்பட்டபின்னரும் தங்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி சிதறிப்போனார்களோ அதைப்போன்றே மற்ற சமூகங்களும் ஆகிவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம்.

அவர்களுடைய இந்த சூழ்ச்சியை முறியடித்துக் காட்ட வேண்டும் என்ற நோக்குடன் எந்தெந்த காலத்திலெல்லாம் இஸ்லாமிய சமுதாயம் ஓர் அணியில் ஒன்று சேரவேண்டும் என்ற முயற்சியில் இறங்கியதோ அப்போதெல்லாம் அந்த முயற்சியைத் தகர்ப்பதற்காக இஸ்லாத்தின் எதிரிகள் முழு முயற்சியோடு செயல்பட்டனர். அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள்.

Read more...
 
யார் பொறுப்பு? Print E-mail
Tuesday, 18 September 2012 12:12

   யார் பொறுப்பு?  

[ அனாச்சாரங்களை கண்டிக்கும் இலட்சியத்தோடு அறப்போர் புரிபவன் மிஷ்காத்தை கரைத்துக் குடித்தவனாக இருக்க வேண்டியதில்லை

5, 7, 10 ஆண்டுகள் என்று அரபி மதரஸாக்களில் கற்றுத் தேர்ந்து படாடோபங்களோடு காட்சி தரவேண்டியதில்லை.

கலைகள் பலவற்றில் சட்ட நுணுக்க வல்லுனர்களாக ஆராய்ந்தறிந்த சாஸ்திரியாக இருக்கத்தான் வேண்டுமென்ற விதியும் இல்லை.

அனைவராலும் அது முடியக்கூடிய காரியமா? இஸ்லாம் அப்படி ஏதேனும் சட்டம் விதிக்கவில்லை.

புனிதமும் ஜீவாதாரமுமான தொண்டு புரிய இலாயக்குள்ளோர் மதகுருமார்களான மெளலவிகள் தான் என்பது நம்மிடை நிலவி வரும் தவறான கருத்து.

ஒவ்வொருவனுக்கும் மதப்பணியைக் கடமையாக்கி இருக்கிறது. "லாலாஹ இல்லல்லாஹு" இந்தக் கலிமா மந்திரத்தை ஓதி விட்டாலே போதுமே. ]

Read more...
 
கதைக் களமான மஸ்ஜித்கள்! Print E-mail
Friday, 05 October 2012 21:43

கதைக் களமான மஸ்ஜித்கள்!

[ தமிழகத்தில் மதரஸா, பள்ளிவாசல் திறந்து கொண்டேயிருக்கின்றனர். விஸ்தீரணப் படுத்துதல், பிரம்மாண்டப்படுத்தல் நடக்கிறது. நிதி கேட்டு அலைதல் ஒரு புறம்.

அனைத்துக்கும் பேஸ் குர்ஆன். அதைப் புறக்கணித்துவிட்டு அனைத்து வேலைகளும் நடத்தப்படுகிறது.

குர்ஆன் செவிமடுப்பதில் வெறுப்பு காட்டுகின்றனர்.

நன்நோக்கத்தோடு மஸ்ஜித் நிர்வாகம் ஏற்பாடு செய்வது விழலுக்கு இறைத்த நீராகிறது.

ஷரிஅத் அடிப்படையில் குர்ஆன் அறியவேண்டும் ஆர்வமில்லை.

கடுமையாகப் புறக்கணிக்கின்றனர்.

விளைவு?! குர்ஆனும், மஸ்ஜித்தும் மனிதர்களைப் புறக்கணிக்கும்.]

Read more...
 
ஷரீஅத் சட்டமா? ஊர் வழக்கமா? சமுதாயம் சிந்திக்க வேண்டும்! Print E-mail
Saturday, 27 November 2010 09:18

  மவ்லவி, டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி 

[ ஷரீஅத் வழிகாட்டுதலை ஒதுக்கிவிட்டு ஊர் கட்டுப்பாடு, ஜமாஅத் வழக்கம் என்ற பெயரில் பல கொடுமைகள் பரவலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலை நீடித்தால் இஸ்லாத்திற்கு மிகப்பெரும் ஆபத்தும் விபத்தும் ஏற்படலாம். எனவே, ஷரீஅத்தையும், மார்க்கத்தையும் மீறி ஏற்படுத்தப்பட்டுள்ள ஊர் கட்டுப்பாடுகளையும் வழக்கத்தையும் எதிர்த்து போராடி ஒழித்துக்கட்டுவது அவசியத்திலும் அவசியமாகும்.

இன்றைய கால கட்டத்தில் இந்த அநியாயங்களை எதிர்த்து போராடி இஸ்லாத்தை நிலைநிறுத்த பாடுபடுவதுதான் மிகப்பெரும் ஜிஹாது.

சங்கைக்குறிய உலமாக்களும், ஷரீஅத் உணர்வு நிறைந்த சமுதாயப் பெருமக்களும் இந்த அறப்போருக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும்படி ஷரீஅத்தின் பெயரால் கேட்டுக்கொள்கிறோம்.]

முஸ்லீம்களின் வாழ்க்கை நெடுகிலும் ஷரீஅத்தின் அணுகுமுறைகளும், செயல்பாடுகளும் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும். ஷரீஅத்தை ஓரங்கட்டிவிட்டு முஸ்லீம் என்ற பெயரால் வாழவே முடியாது.

Read more...
 
மேற்கத்தியர்கள் இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுவது ஏன்? Print E-mail
Monday, 18 August 2008 09:31

மேற்கத்தியர்கள் இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுவது ஏன்?

[ இஸ்லாத்தைப் பற்றி ஆயிரமாயிரம் ஆராய்ச்சிகளைச் செய்யும் அமெரிக்காவுக்கோ, ஐரொப்பாவுக்கோ தெரியாததல்ல. அப்படி அமெரிக்கா அறியாமலிருந்தாலும் அதற்குப் புரியும் வகையில் இஸ்லாமிய அறிஞர்கள் எடுத்துச் சொல்லியே இருக்கின்றார்கள். ஒவ்வொரு நிகழ்வின் போதும் தெளிவுபடுத்தியே வருகின்றார்கள்.

இத்தனையும் அறிந்தும் தெரிந்தும் அமெரிக்காவும் ஐரொப்பிய நாடுகளும் இஸ்லாம் சொல்லும் ஜிஹாதையும் இஸ்லாத்தையும் தீவிரவாதத்தோடு இணைக்கின்றனவே ஏன்?

காரணமிருக்கின்றது! அமெரிக்காவுக்கு முஸ்லிம் நாடுகளைப் பற்றி அச்சம் அறவே இல்லை என்பது உண்மை தான். ஆனால் அது நிச்சயமாக இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுகின்றது. காரணம், அதன் மடியில் - இன்னுஞ் சொன்னால் அதன் அடிவயிற்றில் அது கட்டிக் கொண்டிருக்கும பிரச்னைகள். 

இஸ்லாமியப் பிரச்சாரம், அதன் வெற்றி இவர்கள் நுழையவே முடியாது என்று கட்டி வைத்திருக்கும் கோட்டைகளுக்குள் எல்லாம் இன்று இஸ்லாமியப் பிரச்சாரம் புகுந்திருக்கின்றது. இந்த இஸ்லாமியப் பிரச்சாரம் மிகவும் அமைதியான முறையில் அமெரிக்காவில் ஓர் இஸ்லாமிய அலையை உருவாக்கி இருக்கின்றது. எழுந்து வரும் இந்த அலையை எப்படியேனும் முடக்கிப் போட வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்.]

Read more...
 
கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன? Print E-mail
Thursday, 12 March 2009 07:43

கனவுகள் மெய்பட வாழ்க்கையில் பணம் மிக முக்கியமான ஒன்றாகி விடுகிறது. ஒவ்வொரு மனிதனும் செல்வந்தானாக வேண்டும் என்று விழைகிறான். குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க ஒரே ஒரு நேர்வழியாக அயல் நாட்டு வாழ்கையை அவன் தேர்ந்தெடுக்கிறான். கடமைகளுக்காக வாழ்கையை அடகு வைக்கிறான். ஃபாரின் வாழ்க்கையில் அவன் கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன?. இவற்றை யதார்த்தமாய் பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.

சிறு வயதில் வானத்தை அண்ணாந்து பார்த்து சிறு குருவி போல் கடந்து செல்லும் விமானங்களை அதிசயமாக நாம் பார்த்ததுண்டு. அப்போதைக்கு அது எங்கு செல்கிறது ? ஏன் செல்கிறது நாம் யோசிப்பதில்லை,சிறு வயதில் நாம் அதனை வியப்போடு பார்க்க மட்டுமே செய்கிறோம்.

நாம் வளர்கிறோம், படிக்கிறோம்,கனவுகளும் நம்மோடு சேர்ந்து வளர்கிறது. வாழ்கையின் அடிப்படை தேவைகளுக்கு கூட கடின படும் எண்ணிலடங்காத குடும்பங்கள் இருக்கின்றன. செய்து முடிக்கவேண்டிய கடமைகள் கனவுகளை காட்டிலும் அதிகமாகி போகிறது.!

Read more...
 
ரமளானில் உங்களுடைய நாள் ஏன் இவ்வாறு அமையக் கூடாது? Print E-mail
Wednesday, 24 August 2011 14:07

ரமளானில் உங்களுடைய நாள் ஏன் இவ்வாறு அமையக் கூடாது?

  மௌலவி, கான் பாகவி  

புனித ரமளான் மாதத்தைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர். மற்ற நாட்களை மாற்றமான வழியில் கழிப்பவர்கள்கூட, நோன்பு நாட்களைக் கண்ணியமான முறையில் செலவிட வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

ரமளான் மாதத்தின் பகல் பொழுதையும் இரவு நேரத்தையும் வணக்க வழிபாடுகளில் செலவழிக்க வேண்டும் என்பது மட்டும் எல்லாருக்கும் தெரியும். எந்த வழிபாடுகள் என்பதோ, அந்த வழிபாடுகளை எந்த நேரத்தில், எந்த வரிசைப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதோ பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை.

எனவே, ரமளான் மாதத்திற்கு ஒரு கால அட்டவணை இருந்தால் கடைப்பிடிக்க இலகுவாக இருக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பு. அந்த அட்டவணை ஏன் கீழ்க்கண்டவாறு இருக்கக் கூடாது? சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!

Read more...
 
குர்ஆனிலுள்ள 'துஆ'க்கள் (2) Print E-mail
Friday, 07 January 2011 19:02
 

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

 

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (2:128) 

 

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!". (2:201)

 

Read more...
 
இஸ்லாம்-ஈமான்: வேறுபாடு என்ன? Print E-mail
Tuesday, 16 February 2010 08:33

இஸ்லாம் என்றால் என்ன?

ஈமான் என்றால் என்ன?

இவற்றிக்கிடையே உள்ள வேறுபாடு என்ன?

இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, ''இறைத்தூதர் அவர்களே! 'ஈமான்' எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?'' என்று கேட்டார்.

அவர்கள், 'ஈமான்' எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.

''இறைத்தூதர் அவர்களே! 'இஸ்லாம்' (அடிபணிதல்) என்றால் என்ன?'' என்று அவர் கேட்டார். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான 'ஸக்காத்'(Zakaath) தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்'' என்றார்கள்.

அம்மனிதர், ''இறைத்தூதர் அவர்களே! ''இஹ்ஸான்'' (நன்மை புரிதல் என்றால் என்ன?'' என்று கேட்டார்.

Read more...
 
டென்ஷன் ஆவது ஏன்? Print E-mail
Sunday, 14 March 2010 10:14
டென்ஷன் ஆவது ஏன்?

  ஸஃபியா என்.ஜமான்   

[ நான்கு பேருக்கு விருந்து கொடுப்பதாக இருந்தாலும்கூட பெண்களுக்கு டென்ஷன் ஏற்பட்டுவிடும்.

மாணவர்களுக்குப் பரீட்சை வந்தாலே முதலில் டென்ஷனாவது பெற்றோர்கள்தான். இது முற்றிலும் தவறானதாகும். எப்பொழுதாவது ஒரு நாள் அந்த வருடத்திற்கான பரீட்சை வரும் என்று எமக்குத் தெரியும்தானே எனவே அதற்குத் தகுந்த மாதிரி எம்மை ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பணிப்பெண்கள் என்ற போர்வையில் வெளிநாடு வரும் பெண்கள் படும்பாட்டைக் கொஞ்சம் உற்று நோக்குவோமானால் அதுவும் கூட பருவக்கோளாறினால் ஏற்படுகின்ற டென்ஷன் என்றால் அது மிகையாகாது.

நம்மில் பெரும்பாலானவர்கள் கணவரை, பிள்ளைகளை அவரவர் வேலைகளுக்கு வாகனங்களில் அனுப்பிவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டு தேவையில்லாமல் டென்ஷனாவது. எங்கே போய் சேர்ந்திருப்பார்களோ அல்லது இடையில் ஏதாவது ஆகியிருக்குமோ என்றெல்லாம் தடுமாறுகிறார்கள் எனவே நாம் அவர்களை அனுப்பும் போது படைத்தவனை நினைத்து அவனுடைய துணையுடன் போய்வரும்படி வழியனுப்ப வேண்டும்.

மனோபாவம்தான் எல்லாவகையான டென்ஷனுக்கும் காரணமாக அமையும்.

டென்ஷன் அடிப்படை மையமே நமது உள்ளம் தான். இது கெட்டு விட்டால் எமது உடலே கெட்டுவிடும். இதனால் இரத்த அழுத்தம், புற்று நோய், சக்கரை வியாதி போன்ற பயங்கரமான வியாதிகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

ஒரு வகையான ஷைத்தானின் ஊசலாட்டம் தான் இந்த டென்ஷன். எனவே இதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் ''திக்ர்'' பெரும் பங்கு வகிக்கிறது.]

Read more...
 
ஹஸீனா அம்மா பக்கங்கள் (7) Print E-mail
Wednesday, 28 September 2016 07:29

    ஹஸீனா அம்மா பக்கங்கள் (7)     

சொர்க்கத்தில் சிறை!

நாங்கள்
சிறுபான்மையினர்தாம்
ஆனால்,
எங்களுக்குத் தலைவர் என்று
இயம்பிக்கொள்வோரோ
எண்ணிக்கையில்
பெரும்பான்மையினர்!

ஆறுமுகங்கொண்டவர் கூட
ஒருமுகமாகப் பேசுகின்றனர்!
ஆனால்,
ஒருமுகமாகப் பேசவேண்டிய
எங்கள் தலைவர்களோ,
ஆறு விதமாகப் பேசுகின்றனரே

Read more...
 
உடல் உஷ்ணத்திற்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்மந்தம் என்ன? Print E-mail
Saturday, 26 November 2011 07:17

உடல் உஷ்ணத்திற்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்மந்தம் என்ன?

உடல் உஷ்ணம் பல கோளாறுகளை உண்டாக்கும். வாய்வுத் தொல்லையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும். ஆசை அதிகம் ஆனால் செயல்பாடுகள் பலவீனமாக இருக்கும்.

வெய்யில் காலத்தில் ஆண்களின் ஜனனேந்திரிய உறுப்பு – விந்துப்பை தளர்ச்சியாக, அதிகமாக விரிந்து, பெரிதாக தொங்கும். காரணம் பரப்பை அதிகமாக்குவதால் உஷ்ணம் சிக்கிரம் குறையும். குளிர்காலத்தில் விந்துப்பை சுருங்கி இருக்கும். பரப்பளவு குறைவதால் குளிரின் தாக்கம் அதிகம் தெரியாது. இந்த பருவகால மாற்றங்கள் வேறு, உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு வேறு.

சாதாரணமாகவே உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று பாலியல் குறைபாடுகள். ஜனனேந்திர உறுப்புகள் ‘கூலாக’ (குளுமையாக) இருக்க வேண்டும். உடலின் மற்ற அவயங்களை விட, உடல் உஷ்ணத்தில் ஒரு டிகிரி குறைந்தே இருக்க வேண்டும். அப்போது தான் கரு உண்டாக்கும் ஆண் தாதுவை விந்துப்பையில், அடிவயிற்றை விட ஒரு டிகிரி உஷ்ணக் குறைவில் வைத்து பாதுகாக்க முடியும்.

Read more...
 
மொபைல் ஃபோன்களும் முஸ்லிம்களும் Print E-mail
Monday, 07 February 2011 09:49

மொபைல் ஃபோன்களும் முஸ்லிம்களும்

      ஜூவைரியா பின்த் முஹம்மது அலி, மேலக்காவேரி       

[ மிக முக்கியக் கடமையான தொழுகையை ஒரு மனிதன் நிறைவேற்றும்போது அவருக்கு அருகில் அமர்ந்து ஒருவர் சப்தமிட்டு திருக்குர்ஆனை ஓதுவது கூட அங்கு தொழுபவற்கு இடைஞ்சலை தரக்கூடும் என்பதால் அவ்வாறு சப்தமிட்டு ஓதுவதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்கிறார்கள்.

அப்படியிருக்க,

இந்த மொபைல் ஃபோன்களிலிருந்து தொழுகை நேரத்தில் பள்ளிகளுக்குள் ஒலிக்கும் சங்கீதங்கள் தொழுகையில் ஈடுபட்டு அல்லாஹ்வின் நினைவில் மூழ்கியிருக்கும் இமாம் உட்பட அனைவரது மனவோர்மையையும் சீர்குலைத்து விடுகின்றன. 

இசையில்லாத சாதாரன ரிங் டோன், சைலன்சர், வைப்ரேட்டர், இன்னும் தேவைப்பட்டால் முழுதும் ஆஃப் செய்து வைத்துவிடக்கூடிய சகலவிதமான வசதிகளுடன் எல்லா மொபைல் ஃபோன்களும் தயாரிக்கப்படுகின்றன.
இந்த வசதிகளை கண்டுக்கொள்ளாமல் தாங்கள் இருக்கும் இடம், பொருள், ஏவல் எதையும் பற்றி கவலைப்படாமல் இந்த அரிய சாதனத்தை மனம்போன போக்கில் பயன்படுத்துபவர்களை நினைத்தால் மனம் வேதனையடையத்தான் செய்கிறது.]
Read more...
 
More Articles...
<< Start < Prev 91 92 93 94 95 96 Next > End >>

Page 93 of 96

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article