வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

உள்ளதைச் சொல்கிறேன் Print E-mail
Monday, 07 December 2015 09:00

உள்ளதைச் சொல்கிறேன் - ராஜ்குமார்

சிலர் சினம் கொள்கிறீர்கள் எனக்கு இசுலாமிய அமைப்புகளைப் பாராட்ட எந்த அவசியமும் இல்லை. இன்று சென்னை அம்பேத்கர் நகர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் மட்டும் 5,000 பேருக்கு இசுலாமிய அமைப்புகள் உணவும் நீரும் கொடுத்துள்ளன,. இது நியூஷ் 7 டிவியிலும் இப்போ இரவு 11.20ப்ம் கு காட்டப்பட்டது.

எந்த முஸ்லிமும் செல்பி எடுத்து அனுப்பல,. பேச்சும் கொடுக்கல ஆனா ஊடகங்கள் தான் இன்று அவர்களைப் படம் எடுக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள ஒவ்வொரு இடத்திலும் இசுலாமியர்கள் உதவிக் கொண்டு இருக்கிறார்கள். கேமராவும், ராணுவமும் நுழையாத இடங்களிலும் உள்ளார்கள்.,

"இதில் மதப்பெயர ஏன் சொல்லுரீங்க"நு சிலர் கேட்கறீங்க., யாரோ யாரயோ அடிச்சப்போ., யாரோ திருடுநப்போ, யாரோ ஏதோ செஞ்சப்போ முஸ்லிம், முஸ்லிம், இசுலாமியர் என்று கடந்த காலத்தில் மதத்தோடு தொடர்பு படுத்தித் தானே கேவலப்படுத்துனோம்., (தனி மனித தவறுக்கு)

இப்போ நல்லத அந்த சமூகமே சேந்து செய்யுரப்போ மதத்த சேக்காம இசுலாமியன்னு சொல்லாம., பிரிச்சு பேசச் சொன்னா எப்படி?, தொட்டதுக்கெல்லாம் அவங்க மதத்தோட தொடர்பு படுத்திப் பேச கத்துக் கொடுத்ததே நீங்க (ஊடகம், பஜக.RSS) தானே..!

நாங்கல்லம் செய்யலயானு சிலர் கேட்கரீங்க., நீங்களும் செய்யரீங்க ஆள் பாத்து ஒரு சின்ன தெருவுக்குள் குறுகிய அளவில் சில எல்லை வரையறைகளோடு.,

இன்னைக்கு கோயில்ல இருக்கரவங்களும் ஒரு இசுலாமியன் கோவில் உள்ள வந்தா அவன் நீரும், சோறும் கொண்டு வருவான்னு ஆவலோடு பாக்கறாங்க மக்கள்.,

Read more...
 
முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இணை வைக்காத நிலையில் ஈமான் கொள்ளவில்லை! Print E-mail
Sunday, 05 January 2014 06:39

முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இணை வைக்காத நிலையில் ஈமான் கொள்ளவில்லை!

முஸ்லிம்களே பேராபத்தைச் சந்திக்கப் போகிறீர்கள்!

1. “.....முஃமின்களைக் காப்பாற்றுவது நம்மீது கடமை”. (10:103)

2. ”...முஃமின்களை நிச்சயம் அல்லாஹ் பாதுகாக்கிறான்” (22:38)

3. “....முஃமின்களுக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் கடமை”. (30:47)

4. “....தைரியத்தை இழக்காதீர்கள்; கவலைப் படாதீர்கள்! முஃமின்களாய் இருப்பின் நீங்களே மேலோங்குபவர்கள்”. (3:139)

5. “முன்னிருந்தோரை ஆட்சியாளர்களாய் ஆக்கியது போல் உங்களில் ஈமான் கொண்டு நற்செயல்கள் புரிபவர்களை பூமிக்கு ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், அவர்களுக்கென அவன் பொருந்தியுள்ள மார்க்கத்தில் அவர்களை உறுதிப் படுத்துவதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அமைதியானதாய் மாற்றுவதாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் எனக்கு எவரையும் இணை வைக்காமல் எனக்கே அடிபவணிவார்கள். இதன் பின்னர் மாறு செய்வோரே பாவிகள்” (24:55)

6. “அல்லாஹ் வாக்குறுதி மீறவே மாட்டான்” (3:9,194, 13:31, 39:20)

7. “...நீர் எவ்வளவுதான் விரும்பினாலும் மனிதர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்வதாக இல்லை.” (12:103)

8. “அவர்களில் அநேகர் இணை வைப்பவர்களாய் இருக்கிற நிலையில் அல்லாமல் அல்லாஹ்வை நம்புபவர்களாய் இல்லை”. (12:106)

Read more...
 
உடல் ஆரோக்கியத்துக்கு நீராகாரம் அல்லது நீ(ர்)ச்சோறு! Print E-mail
Tuesday, 19 February 2013 19:12

உடல் ஆரோக்கியத்துக்கு நீராகாரம் அல்லது நீ(ர்)ச்சோறு!

ஆற்றுநீர் வாதம் போக்கும்

 அருவிநீர் பித்தம் போக்கும்

  சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

 -என்பது பழமொழி.

நீர் + ஆகாரம் = நீராகாரம். மீதமானச் சோற்றில், அச்சோறு கெடாமல் இருக்க, அச்சோறு முழுகும் அளவுக்கு நீரை ஊற்றுவர். அந்நீரால், அச்சோறு அடுத்த நாள் கெடாமல் இருக்கும். அடுத்த நாள் அச்சோற்றுக்கு மேலே இருக்கும் நீரை (சில நேரங்களில் அச்சோற்றை அந்நீரில் கரைத்தும்) உண்பர். இதுவே நீராகாரம். சத்துள்ள திரவநிலை உணவாக இது கருதப்படுகிறது.

நீராகாரம் அல்லது நீ(ர்)ச்சோறு! கிராமங்களில் வயல்வெளியில் வேலை செய்பவர்களுக்கு இது ஓர் வரப்பிரசாதமாகும். இதில் அடங்கியிருக்கும் நன்மைகளை தெரிந்துகொண்டால் நகரத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயமாக கிராமத்தார்களைப் பார்த்து பொறாமை ஏற்படவே செய்யும்.

முதல் நாள் சோற்றில் நீர் ஊற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் விட்டமின் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் "ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்" (கவனியுங்கள்- மில்லியன் அல்ல "ட்ரில்லியன்") பெருகி நம் உணவுப்பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்.

Read more...
 
பல அற்புதமான நோய்களைக் குணப்படுத்தும் ஹோமியோபதி மருத்துவம் Print E-mail
Wednesday, 13 March 2013 06:13

ஹோமியோபதி - ஓர் விளக்கம்

ஜெர்மன் நாட்டின் மருத்துவப் புரட்சியாளர், மருத்துவச் சீர்திருத்தவாதி, ஹோமியோபதி மருத்துவத் தந்தை டாக்டர் ஹானிமன் (1755-1843) தான் நிறுவிய புதிய மருத்துவ முறையின் பெயரை "ஹோமியோபதி" என்றார். அவர் காலத்தில் பின்பற்றப்பட்ட மருத்துவத்திற்கு "அலோபதி" என்று புதுப்பெயரிட்டார். இன்றளவும் இம்மேதை இட்ட பெயரை உலகம் பயன்படுத்தி வருகிறது.

1810 இல் தமது வேதப்புத்தகமான ஆர்கனான் நூலை வெளியிட்டார். எனவே ஹோமியோபதியின் வயது 191. "நவீன மருத்துவம்" (Modern Medicine) என்ற பெயர் ஹோமியோபதிக்குத்தான் பொருந்தும்.

இதற்கு மாறாக, அலோபதி மருத்துவர்கள் தமது பாராட்மபரிய மருத்துவத்தை "நவீன மருத்துவம்" என்றும், ஹோமியோபதியை விஞ்ஞான அடிப்படையற்ற, மறைந்து வரும் பழைய மருத்துவம் என்றும் கூறுகின்றனர். எனவே ஹோமியோபதி மருத்துவ முறையில் அடைந்துள்ள வெற்றிகளை அலட்சியப்படுத்திப் பேசுகின்றனர்!

அலோபதி மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் மருந்தில்லாத மாத்திரைகளை நோயாளிகளைச் சமாதானப்படுத்துவதற்காகக் கொடுக்கும் போது "ஹோமியோபதிக் டோஸ்" என்று கூறுவது வழக்கம். இருப்பினும் தற்போது ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை அனுபவித்து கற்றுணர்ந்த அலோபதி மருத்துவர்கள் பலரும் ஹோமியோபதி மருத்துவர்களாக மாறியுள்ளனர். M.B.B.S பட்டம் பெற்ற சில மருத்துவர்களின் பெயர் பலகைகளில் "ஹோமியோபதி கிளினிக்" என்று காணப்படுகிறது.

Read more...
 
மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Print E-mail
Thursday, 02 January 2014 10:48

மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?

உடலில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் என்பார்கள். செல்வாக்குள்ள மனிதர் யாரையாவது பார்த்தால் அவனுக்கு உடம்பெல்லாம் மச்சம்டா என்று பேசிக் கொள்வது உண்டு. சாஸ்திர சம்பிரதாயத்தில் கூட மச்சத்துக்கு பலன் உண்டு என்று கூறுவார்கள். எங்கெங்கு மச்சம் இருக்கிறதோ அதற்கான பலன்கள் என்ன வென்றும் கணித்து கூறுகிறார்கள்.

உண்மையில் மச்சம் என்பது அதிர்ஷ்டம் அல்ல, நோய் ஆபத்தின் அறிகுறி என்கிறார் அக்குபஞ்சர் மருத்துவர் எம்.என்.சங்கர். அவர் இங்கே விவரிக்கிறார். அக்குபங்சர் மருத்துவ தத்துவத்தின்படி உடலின் ரகசியபுள்ளிகளில் ஏற்படும் மச்சங்கள் மற்றும் நிறமாற் றங்களை வைத்தே நோயாளியின் நோயை மிக எளிதாக கணிக்க முடியும்.

ஆம்! பல மச்சங்கள் நோயின் அறிகுறியே! மச்சங்களை கிள்ளியெடுத்து மைக்ராஸ் கோப்பின் அடியில் வைத்து `எபிடொமிஸ்’ என்றும், `மெலனோசைட்’ என்றும் கூறி புற்றுநோயாகவும் இருக்கலாம் என்று ஆங்கில மருத்துவ விஞ்ஞானிகள் பயமுறுத்துவது உண்டு! மச்சங்கள் உருவாவது பல சமயங்களில் உடல் உறுப்புகளின் நோயை வெளிக்காட்டும் இயற்கையின் அபாய அறிவிப்பே ஆகும்.

Read more...
 
ஏன் சிந்திக்க மறுக்கிறோம்? தயங்குகிறோம்? Print E-mail
Friday, 11 June 2010 21:52

ஏன் சிந்திக்க மறுக்கிறோம்? தயங்குகிறோம்?

எது ஆடுகிறதோ அதுவால்.

எது சிந்திக்கிறதோ அது தலை.

மனிதன் செய்யக்கூடிய வேலைகளில் மிக உயர்வானது எது?

எத்தகைய கின்னஸ் சாதனைகள் இருக்கின்றதோ, அத்தனையும் விட உயர்வானது எது?

சிந்திப்பது! ஆம். அதுவேதான்.

Read more...
 
அநீதியும் அக்கிரமமும் ஒழிக்கப்பட வேண்டுமானால்... Print E-mail
Friday, 06 September 2013 06:13

    அபுல் அஃலா மெளதூதி    

அநீதியும் அக்கிரமமும் ஒழிக்கப்பட வேண்டுமானால்... நீங்கள் சற்று ஆழ்ந்து நோக்கினால் உங்கள் வாழ்க்கையின் கேடுகளுக்கு அறியாமையைத் தவிர மற்றொரு காரணமும் புலப்படும்.

ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ மனிதன் என்ற பெயரல்ல என்பதைப் புரிந்து கொள்ளச் சொற்ப அறிவு போதுமானது.

எல்லா மக்களும் மனித குலத்தின் அங்கங்களே. மக்கள் அனைவருக்கும் வாழும் உரிமை உள்ளது. தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள அனைவரும் உரிமையுடையவர்களே! அனைவரும் அமைதி, நீதி, மரியாதை, கண்ணியம் ஆகியவற்றிற்கு உரியவர்களே!

Read more...
 
ஜும்ஆவும் காணிக்கைத் தொழுகை-தஹிய்யத்துல் மஸ்ஜிதும் Print E-mail
Thursday, 21 January 2010 09:43

[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;  ''உங்களில் யாரேனும் பள்ளியில் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம்''.  (நூல்: புகாரி) .  இது ஜும்ஆவுக்கு மட்டுமின்றி எல்லா நேரத்துக்கும் பொருந்தும்.

சென்னை போன்ற நகரங்களில், இமாம் தமிழிலோ உருது மொழியிலோ பயானை முடித்துவிட்டு 'மிம்பரில் குத்பா' ஓதுவதற்கு முன், சுன்னத்து தொழுவதற்காக ஐந்து நிமிடங்கள் இடைவெளி கொடுக்கப்படுவதால் மஸ்ஜிதுக்குள் நுழையும் பலர், உள்ளே நூழைந்தவுடன் சுன்னத்தான 'தஹிய்யத்துல் மஸ்ஜித்' இரண்டு ரக் அத்தை தொழுகாமல் அப்படியே உட்கார்ந்து விடுவதை வழமையாக காண்கிறோம்.

இந்த குறையைப் பற்றி எந்த இமாமும் மக்களுக்கு எடுத்துச் சொன்னதாகத் தெறியவில்லை. மாதம் ஒரு முறையாவது மக்களுக்கு இதை நினைவுப்படுத்துவது சிறப்பானதாகும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தை உயிர்ப்பிப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும், அதுவும் இறையில்லத்துக்குள்.]

Read more...
 
பெண் என்பவள் யார்? Print E-mail
Friday, 26 August 2011 11:52

      பெண் என்பவள் யார்?      

பெண் என்பவள் யார்?

அவளின் குணாதிசயங்கள் யாவை?

அவளின் எதிர்பார்ப்புக்கள் எவை?

அவளிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது?

- ஏன்? பெண் என்பவன் ஆணுக்கு ஒரு புதிராகவே எப்போதும் தெரிகிறான்.

‘கடலின் ஆழத்தைவிட ஆழமானது பெண்ணின் மனம்’ என்பார்கள். உலகில், எழுதப்பட்ட இலக்கியங்களில் பெரும்பங்கு - பெண்’ என்ற புதிரைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் எழுதப்பட்டவைதாம். கொஞ்சம் பெரிய சைஸ் காக்கையைப் போல் இருக்கும்.

அழகே இல்லாத ஒரு பெண் மயிலைக் கவர, கம்பீரமான, வானவில்லைப் பல் வண்ணங்களைக் கொண்ட தோகையை உடைய அழகிய ஆண் மயில் ஏன் ஆடிப்பாட வேண்டும்? ஏதோ முட்டையிட்டோம். குஞ்சுபொரித்தோம். இனி அதுவாயிற்று அதன் வாழ்க்கையாயிற்று என்று ‘தேமேய யென சும்மா இராமல் ஒரு தாய்ப் பருந்து ஒருமீனைக் கொன்று ஏன் குஞ்சுக்கு ஊட்ட வேண்டும்? காடும் மேடும் திரிந்து, புல்லும் சருகும் சேர்த்து ஏன் ஒரு கூட்டைக் கட்ட வேண்டும்? இதற்கெல்லாம் விடை ‘அன்பு’ என்பீர்கள்.

அன்பு என்பது என்ன? அது ஒரு இரசாயன மாற்றமா, ஹார்மோன் சுரப்பா, இல்லை வேறு ஏதாவதா? பசிக்கும்போது சாப்பிடுவதைப்போல அன்பு என்பது ஒரு உடலின் தேவையா, இல்லை அதைவிட மேலானதா? சைனாவின் ‘யின் - யாங்’ தத்துவத்தை நாம் கேள்விப்பட்டிருப்போம். "யின்" என்பது பெண் தத்துவம். "யாங்" என்பது ஆண் தத்துவம். யின் என்பது பெண்மை, பூமி, இருள், செயலுக்கு உள்ளாவது. யாங் என்பது ஆண்மை, வானம், வெளிச்சம், செயல்படுவது, ஊடுருவுவது.

Read more...
 
ஆயிரங்களை அள்ளித்தரும் ஆடு வளர்ப்பு! Print E-mail
Saturday, 29 January 2011 09:11

ஆயிரங்களை அள்ளித்தரும் ஆடு வளர்ப்பு!

ஆடுகளை வளர்க்காத நபிமார்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு தனது தூதர்கள் யாவரையும், ஏக இறைவன் அல்லாஹ் ஆடுகளை வளர்க்கும்படிச் செய்தான். இது ஒன்றே இது எவ்வளவு ''பரக்கத்''தான தொழில் என்பதற்கு சாட்சி.

வான்கோழி, காடை, ஈமு என வகை வகையாக இறைச்சிகள் இருந்தாலும், நாட்டுக்கோழிக் கறிக்கும் வெள்ளாட்டுக் கறிக்கும் உள்ள மவுசு குறைவதேயில்லை. எப்போதுமே சந்தையில் அவற்றுக்கான கிராக்கி உச்சத்தில்தான். அவற்றின் விலையே இதற்கு சாட்சி. அதனால்தான் விவசாயத்தோடு சேர்த்து, ஆடு, கோழி என வளர்க்கும் பழக்கம் தொன்று தொட்டே தொடர்கிறது.

ஆரம்ப காலங்களில் நாட்டு ஆடுகள், நாட்டுக் கோழிகள் என்று இருந்ததெல்லாம் காலமாற்றத்திற்கு ஏற்ப கலப்பினங்களாக உருவெடுத்துவிட்டன. இத்தகைய கலப்பினங்கள் இருவகைகளில் உருவாக்கப்படுகின்றன.

ஆராய்ச்சிக் கூடங்களில் வெளிநாட்டு இனங்களோடு உள்நாட்டு இனங்களைக் கலப்பு செய்து வளர்ச்சி ஊக்கிகளை செலுத்தி அதிக இறைச்சி, கொழுப்புடன் கூடிய ஆடு, கோழி ரகங்களை உருவாக்குவது ஒரு விதம். இதற்கென சில கட்டுப்பாடுகள் உண்டு. பலவித சோதனைகளுக்குப் பிறகே இவை சந்தைப் பயன்பாட்டுக்கு வரும். இவற்றுக்குத் தனியாக பெயர்கூட வைப்பார்கள்.

Read more...
 
எதற்காக ஓடுகிறோம்? Print E-mail
Tuesday, 20 August 2013 10:46

எதற்காக ஓடுகிறோம்?  

வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டால் போதும். மனிதர்களுக்கு ஒரே ஓட்டம்தான். பஸ்ள்ஸப் பிடிக்க வேண்டும். ரயிலைப் பிடிக்க வேண்டும். தொழிற்சாலைக்குச் செல்ல வேண்டும். அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். பல வேலைகள், பல பிரச்னைகள் என நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

எல்லோரும் எங்கே ஓடுகிறோம்? பணம் சம்பாதிக்கவா? பணம் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானதுதான். ஆனால், பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடுமா? லட்சியத்தை அடையவா? லட்சியம் என்பது கடைசி நிலைதானே. அதனை அடைய நாம் செல்லும் பயணம் சுகமானதாக இருக்க வேண்டாமா?

வாழ்வின் முடிவை நோக்கி ஓடுகிறோமா, வாழ்க்கையை நாம் அனுபவிக்க வேண்டாமா?

Read more...
 
நகங்களைப் பாதுகாப்போம் Print E-mail
Monday, 03 January 2011 08:26

Image result for நகங்கள்

நகங்களைப் பாதுகாப்போம்

நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியாகவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக்கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும். ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்துகிறோம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள். நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்க முடியும் என்கிறார்கள். அனுபவம் உள்ள மருத்துவர்கள் நகத்தைப் பார்த்தே 'இன்ன நோய்' என்பதையும் சொல்லிவிடுவார்கள்.

நுண்மையான, நரம்பு கூட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பது நகங்களே. நாம் நுட்பமான பொருட்களை கையாளவும், நமது தொடு உணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள ரோமத்தில் போலவே நகத்திலும், 'புரோட்டீன் _ கெராட்டீன்' என்ற ரசாயனப் பொருள் காணப்படுகிறது
Read more...
 
சளித்தொல்லையும், விட்டமின் ''C'' யும் Print E-mail
Friday, 26 November 2010 08:04

Image result for orange

சளித்தொல்லையும், விட்டமின் ''C'' யும்

உலகில் பரவலாக எல்லோருக்குமே ஏற்படக்கூடியது, முகத்தை சுளிக்க வைத்து, நம்மிடமிருந்து மற்றவர் சற்று ஒடுங்கி நிற்கும் அளவுக்கு தொற்று அச்சுறுத்தலைக் கொண்டது. உயிர்குடிக்கும் தீவிரம் இல்லாது போனாலும், நம்மை வாட்டி நோகடிப்பது. ஆங்கிலத்தில் கோல்ட் - Cold என்றும் வடமொழியில் ஜலதோஷம் என்றும் அறியப்படும் சளி.

இதன் தன்மை அறிந்துதான், உணர்ந்துதான் பொதுவாக தொல்லை என்பதை உடன் சேர்த்தே "சளித்தொல்லை என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்".

மருந்து சாப்பிட்டால் ஏழு நாட்களில் தீரும், மருந்து இல்லாவிட்டால் ஒரு வாரம் நீடிக்கும் என்று உண்மையை கிண்டலாக சொல்லி நாம் நமது ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்கிறோம். பொதுவாக சளித்தில்லை ஏற்பட்டால் நாம் குளிர்ச்சியாக எதையும் சாப்பிடுவதில்லை.

வைட்டமின் என்று நாம் அழைக்கும், விட்டமின், உயிர்ச்சத்துகளில் சி வகை சளிக்கு நல்லது என்பது பரவலான ஒரு நம்பிக்கை. ஆரஞ்சுப்பழத்தில் இந்த உயிர்சத்து சி அதாவது விட்டமின் சி நிறைந்துள்ளது.

Read more...
 
ஆண்களின் மலட்டுத் தன்மையை அறிவது எப்படி? Print E-mail
Wednesday, 21 April 2010 08:13

Image result for ஆண்களின் மலட்டுத் தன்மையை அறிவது எப்படி?

[ அதிகாலை வேலை ஆண்கள் விழித்துக் கொள்ளும் போது எந்த வித பாலியல் உணர்ச்சியும் இல்லாமல் தாமாகவே விறைத்திருக்கும் ஆணுறுப்பைப் பார்த்து தங்களுக்கு ஏதோ நோய் இருப்பதாய் கற்பனை செய்து, வெளியில் சொல்லவும் வெடகப்பட்டு மனரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.

உண்மையில் இது வெட்கப்பட வேண்டியதோ அல்லது அச்சப்பட வேண்டிய விஷயமோ அல்ல. சாதாரணமாக இது எல்லா ஆண்களிலும் காணப்படும் உடற் தொழிற்பாட்டு மாற்றமாகும்.

இந்த அதிகாலை விறைப்பு மருத்துவ ரீதியாக முக்கிய பங்கு வகிக்கின்றது.]

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படலாம். பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களிலே மலட்டுத்தன்மை ஏற்படும் சந்தர்ப்பம் குறைவு என்பதால் குழந்தை பிறக்காவிட்டால் முழுக் குற்றத்தையும் மனைவி மேலேயே சுமத்தி விடுகிறது இந்தச் சமூகம்.

ஆனாலும் மருத்துவ ரீதியாக மலட்டுத்தன்மைக்குரியவர் கணவனா அல்லது மனைவியா என அறிந்துகொள்ள இப்போது ஏராளமான வசதிகள் உள்ளன. குழந்தை உருவாகாமல் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி மட்டுமல்ல கணவனும் தங்களை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்திக் கொள்வது கட்டாயமாகும். ஏனென்றால் இன்றைய மருத்துவ வளர்ச்சியில் அந்தக் குறைபாடுகளை போக்கிக் கொள்ள நிறைய வசதிகள் வந்துவிட்டன.

சரி , ஆணிலே மலட்டுத் தன்மை உள்ளதா என்று எவ்வாறு பரிசோதிக்கப்படுகிறது?

Read more...
 
மேற்கத்தியர்கள் இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுவது ஏன்? Print E-mail
Monday, 18 August 2008 09:31

மேற்கத்தியர்கள் இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுவது ஏன்?

[ இஸ்லாத்தைப் பற்றி ஆயிரமாயிரம் ஆராய்ச்சிகளைச் செய்யும் அமெரிக்காவுக்கோ, ஐரொப்பாவுக்கோ தெரியாததல்ல. அப்படி அமெரிக்கா அறியாமலிருந்தாலும் அதற்குப் புரியும் வகையில் இஸ்லாமிய அறிஞர்கள் எடுத்துச் சொல்லியே இருக்கின்றார்கள். ஒவ்வொரு நிகழ்வின் போதும் தெளிவுபடுத்தியே வருகின்றார்கள்.

இத்தனையும் அறிந்தும் தெரிந்தும் அமெரிக்காவும் ஐரொப்பிய நாடுகளும் இஸ்லாம் சொல்லும் ஜிஹாதையும் இஸ்லாத்தையும் தீவிரவாதத்தோடு இணைக்கின்றனவே ஏன்?

காரணமிருக்கின்றது! அமெரிக்காவுக்கு முஸ்லிம் நாடுகளைப் பற்றி அச்சம் அறவே இல்லை என்பது உண்மை தான். ஆனால் அது நிச்சயமாக இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுகின்றது. காரணம், அதன் மடியில் - இன்னுஞ் சொன்னால் அதன் அடிவயிற்றில் அது கட்டிக் கொண்டிருக்கும பிரச்னைகள். 

இஸ்லாமியப் பிரச்சாரம், அதன் வெற்றி இவர்கள் நுழையவே முடியாது என்று கட்டி வைத்திருக்கும் கோட்டைகளுக்குள் எல்லாம் இன்று இஸ்லாமியப் பிரச்சாரம் புகுந்திருக்கின்றது. இந்த இஸ்லாமியப் பிரச்சாரம் மிகவும் அமைதியான முறையில் அமெரிக்காவில் ஓர் இஸ்லாமிய அலையை உருவாக்கி இருக்கின்றது. எழுந்து வரும் இந்த அலையை எப்படியேனும் முடக்கிப் போட வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்.]

Read more...
 
குடும்ப உறவில் மலரும் இஸ்லாம் Print E-mail
Sunday, 25 September 2011 07:09

குடும்ப உறவில் மலரும் இஸ்லாம்

குடும்ப உறவு என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட புனிதமிக்க உறவாகும். அதில் சில சந்தர்ப்பங்களில் சலசலப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருந்தாலும், அதன் மூலம் இறைவன் உறவின் வலிமையை மேலும் பலப்படுத்தி விடுகின்றான். ஆனால் நம்மில் சிலர் குடும்ப உறவில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்னைகளை பெரிதுபடுத்தி பல்லாண்டுகள் நீடித்து அப்புனித உறவை ஒரே நாளில் சிதைத்து விடுகின்றார்கள். அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

ஒரு ஆண் தனது ஆண்மையை இழந்து விட்டாலும் பெண் அவனுடன் சகிப்புத்தன்மையோடும், பொறுமையோடும் வாழ முடிவு செய்கிறாள். அதேசமயம் யார் மீது குறை என்பது நிரூபிக்கப்படாத நிலையில் இருந்தால் பெண்ணின் மீதே பழி சுமத்தி ஆண்கள் தம்மை குறையற்றவர்களாக காட்டிக் கொள்ள முனைகிறார்கள்.

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியரிடத்தில் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஆராயும் போது அவர்கள் சமுதாய அரங்கில் மிகப் பெரிய அந்தஸ்துள்ளவர்களாக இருந்த போதும் வீட்டுக்கு வந்து விட்டால் மிகச் சிறந்த கணவராக மாறி விடுவார்கள். சமையல் உட்பட அனைத்திலும் மனைவியர்களுக்கு உதவி புரிவார்கள். ஆண்களைப் பார்த்து அல்லாஹ்வும் பின்வருமாறு கூறுகிறான் :

அப் பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்த போதிலும் (பொறுமையோடிருப்பீர்களாக. ஏனெனில்) ஒரு பொருளை நீங்கள் வெறுக்கக் கூடும். (ஆனால்) அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருப்பான் (அல்குர்ஆன் 4:19)

Read more...
 
திருமணமான ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? Print E-mail
Monday, 02 August 2010 08:09

திருமணமான ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா?

[ தம்பதிகளே! உங்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்படும்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து குளித்துப்பாருங்கள்; உங்கள் பிரச்சனைகள் காற்றோடு பறந்துபோவதை கண்கூடாக காண்பீர்கள்.

உடல் குளிர்ந்தால் உள்ளமும் குளிரத்தானே செய்யும். உள்ளம் குளிர்ந்தால் இல்லறமும் குளிருமே - அதாவது இல்லறமும்நல்லறமாகும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!]

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் சேர்ந்து குளித்ததற்கான ஆதாரங்கள் ஹதீஸ்களில் காணக்கிடைக்கின்றன.

''நானும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரு பித்தளை அண்டாவிலிருந்து தண்ணீர் எடுத்து குளித்து வந்தோம்’ (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: அபூ தாவூது)

ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? படிப்பவர்கள் ஆச்சரியப்பட வேண்டாம்! திருமணமான ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? நிச்சயமாக சேர்ந்து குளிக்கலாம் என்று மனமொத்து வாழும் தம்பதியினரிடம் எடுத்த புள்ளி விபரங்கள் கூறுகின்றன!

நம் நாட்டில் பொதுவாக சேர்ந்து குளிப்பது அபூர்வம். பெரிய குளியல் அறைகளோ, வீட்டில் நீச்சல் குளமோ இருக்காது. ஏன் குளிக்கும் பாத் டப் கூட நாம் உபயோகிப்பதில்லை! ஆனால் பிற நாடுகளில் குளிப்பதையும் அனுபவித்துக் குளிக்கிறார்கள்.

Read more...
 
ஆணும் பெண்ணும் ஒன்றல்ல Print E-mail
Sunday, 30 January 2011 11:16

ஆணும் பெண்ணும் ஒன்றல்ல

[ எந்த கணவனை எடுத்துக் கொண்டாலும் அவன் தன் அன்பை, தன் மனைவியின் மீது கொண்டுள்ள நேசத்தை நீண்ட நேரம் பேசி தெரிவிப்பதைவிட, பாலுறவு மூலம் வெளிப்படுத்தவே முயலுவான்.

ஆனால், பெண் இதற்கு மாறானவள். அவன் எப்போதும் தன் பக்கத்திலேயே இருக்கவேண்டும்,

தன் காதலை அவன் நிறைய வெளிப்படுத்த வேண்டும்,

தனக்காகவே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என நினைப்பாள்.

அதாவது பாலுறவை விட காதலை அதிகமாக எதிர்ப்பார்ப்பாள்.

பெண் இயல்பிலேயே வெற்றியாளனை மட்டுமே விரும்பி, தோற்றுப் போகிறவனையோ, சோம்பேறியையோ தவிர்க்கும் குணம் உள்ளவள்.

தன்னை ஆண் நேசிக்கவேண்டும், தனக்காக நிறைய நேரம் செலவழிக்க வேண்டும், தனக்கு உண்மையாக இருக்கவேண்டுமென எண்ணமிடுவாள்.]

திருமணமாகி மகிழ்ச்சியுடன் இல் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் ஆண்-பெண்ணிடையே சில காலத்திற்குப் பிறகு பிரச்சினைகள் ஏற்படுவது ஏன்? இதற்கான அடிப்படைக் காரணம் என்ன?

சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆண் பெண் உறவில் பிரச்சினை ஏற்பட அவர்களுக்கு இயல்பிலேயே உள்ள குணங்கள்தான் அடிப்படைக்காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

என்னதான் பொருத்தம் பார்த்தாலும், உறவாக இருந்தாலும், காதலித்து மணந்தாலும் அடிப்படையாக அமைந்த இயல்பான குணங்கள்தான் அவர்களது வாழ்வை ஆட்டி வைக்கிறது.

Read more...
 
கருத்து வேற்றுமை காலத்தின் கட்டாயமாவது எப்போது? Print E-mail
Thursday, 28 October 2010 10:46

கருத்து வேற்றுமை காலத்தின் கட்டாயமாவது எப்போது?

 மவ்லவி கணியூர் நாஜி ஃபாஜில் பாகவி 

ஒற்றமை தீனுக்குப் பயன்படும் எனில் அது வரவேற்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரித்தாகும். ஒற்றுமை தீனுக்கு விரோதமாகவும், வேற்றுமை தீனுக்கு நன்மை பயக்கக் கூடியதாகவும் இருந்தால் அந்த வேற்றுமையே புகழுக்குரியதாகும்.

ஒற்றுமையம் வேற்றுமையும்

கருத்து வேற்றுமை, ஒற்றுமையின்மை தவறு என்பது அது தீனுக்கு தீங்கிழைக்கும் என்றால்தான். அந்த வேற்றுமையே தீனுக்கு நன்மை பயக்கும் என்றிருந்தால், அது இம்மைக்கு தீங்கிழைத்தாலும் தவறல்ல, கண்டிக்கத்தக்கதும் அல்ல.

ஏனெனில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்அவர்களும் தம் கால மக்களுக்கு எதிராக ஒத்துழையாமையையும், வேற்றுமையையும் காட்டினார்கள். ‘இப்ராஹீமிடத்திலும் அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கும் ஓர் அழகிய முன்மாதிரி நிச்சயமாக இருக்கிறது.

அவர் தம் மக்களை நோக்கி, ‘நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவைகளில் இருந்தும் விலகி விட்டோம். நிச்சயமாக நாங்கள் உங்களையும் நிராகரித்து விட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசம் கொள்ளும்வரை எங்களுக்கும், உங்களுக்கும் இடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது என்றும் கூறினார்’ என அல்லாஹ் கூறுகிறான்.

Read more...
 
நான் உனக்கு எதில் குறை வைத்தேன்? Print E-mail
Sunday, 25 April 2010 11:01

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?

அன்பார்ந்த சகோதர, சகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதா? 

உங்கள் அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள்.

இந்த கேள்வியை கேட்டுவிட்டால் ஆத்திரப்படாதவர்கள் எவரேனும் இருப்பார்களா? என்னைப் பார்த்து இக்கேள்வியை கேட்கிறாயே உனக்கு அவ்வளவு துணிச்சலா? என்று பதில் வரும் உடனே என் இஷ்டம் எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் செய்வேன் என்று சாக்கு போக்கு கூறி பிரச்சினையிலிருந்து தப்பித்து இடத்தை காலி செய்துவிடுவார்கள்.  சரி இந்த கேள்வியை இவர்கள் கேட்டால் எப்படி இருக்கும்! சுயபரிசோதனை செய்து பாருங்கள்.

உங்களை பெற்ற தாய் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறாள்

தாய்: ஏன்டா! மகனே நான் 10 மாதம் உன்னை வயிற்றில் சுமந்து பாலுட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்தேனே தனிக்குடுத்தம் போன நீ வாரம் ஒரு முறை கூட வந்து என்னை பார்ப்பதில்லையே ஏன்டா?

தாய் ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லடா என் மகனே?

மகன்: சரி விடும்மா? ஏதோ ஊர் உலகத்துல எவனும் செய்யததா நான் செய்துட்டேனா? இதைப் போய் பெரிசு பண்ணி பேசுறியே உனக்கு அறிவு இருக்கா? எனக்கு பிசினஸ்-ல ஆயிரத்து எட்டு பிரச்சினை சரியா கவனிக்க முடியல அதனால உன்னை வாரம் ஒரு முறை கூட வந்து பார்க்க முடியல? இப்ப என்னாங்கறா? உன்னை பார்க்காதது ஒரு குத்தமா? அப்போ என்னை உன் பிள்ளை இல்லைன்னு சொல்லிடுவியா? என்ன!

உங்களுடைய வாதத்திறமையால் உங்களை பெற்ற தாயின் வாயை அடைத்துவிட்டீர்கள்! அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்! ..... ! ! !

Read more...
 
மார்க்க விஷயங்களில் சரியான அளவுகோள் எது? Print E-mail
Friday, 18 June 2010 07:21

Related image

MUST READ

மார்க்க விஷயங்களில் சரியான அளவுகோள் எது?

        மௌலவி B.A. அஸ்பர் (பலாஹி)       

‘இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.’ (அல் குர்ஆன் 6:153)

இஸ்லாமிய மார்க்கத்தில் அடிப்படை அம்சங்கள் அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபி வழிகளுமாகும். மனித குலத்திற்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் இவ்விரண்டும் உள்ளடக்கியுள்ளது. மனித குலம் ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கும் கட்டுப்பட வேண்டுமென்பது அல்குர்ஆனின் வாக்காகும்.

அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் ‘அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு வழிப்படுகின்றாரோ, அவர் திட்டவட்டமாக வெற்றிபெற்று விட்டார்’ எனக்கூறுகின்றான். (அல்குர்ஆன் 33:71)

இன்றைய முஸ்லிம்களில் அதிகமானோர் மேற் கூறப்பட்ட அளவுகோளை விட்டுவிட்டு, நபியவர்கள் இஸ்லாத் தைப் பிரச்சாரம் செய்த வேளையில் அக்காலத்தில் வாழ்ந்த அறியாமை சமூகம் மார்க்கத்தின் அளவுகோள்களாக எதனைக் கொண்டார்களோ அந்த விஷயங்களையே இவர்களும் தமது மார்க்க அளவுகோள்களாக கொள்வதை காணமுடிகின்றது. இன்று அதிகமான முஸ்லிம்கள் மார்கத்தின் அளவுகோள்களாக பின்வரும் அம்சங்களை எடுக்கின்றனர்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 71 72 73 74 75 76 77 78 79 80 Next > End >>

Page 80 of 87

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article