வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

இறைவனின் நீதிமன்றம்

மத நல்லிணக்கம் கண்ணை உறுத்துகிறதா? Print E-mail
Friday, 20 October 2017 07:16

Image result for hindu muslim friendship

மத நல்லிணக்கம் கண்ணை உறுத்துகிறதா?

          Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)         

சமீப காலாத்தில் ஷாஜஹான் எழுப்பிய பளிங்கு நினைவு மாளிகை சிலருக்கு கண்ணை உறுத்தி அது, 'சிவன் கோவிலை இடித்து எழுப்பப் பட்ட கட்டிடம்' என்று உ.பி.மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும், 'தாஜ் மஹால் பல்வேறு ஹிந்து தொழிலாளிகள் வேர்வை சிந்தி எழுப்பப் பட்டது' என்று உ.பி.முதல்வரும், அது துரோகிகள் கட்டிய கட்டிடம் என்று வினய் கட்டார் என்ற பி.ஜே.பி எம்.பி.யும் கூறியிருப்பது சிரிப்பையும் சிந்தனையும் தூண்டி விட்டிருக்கிறது.

2014ஆம் ஆண்டு ஆட்சி பீடம் மத்தியில் அமர்ந்து மூன்று வருடம் ஆகியும், சொன்ன வாக்குறுதிகளான, 'வெளிநாட்டில் பதுக்கிய கறுப்புப் பணமீட்டல்' 'அந்தப் பணத்தில் ஒவ்வொருவருக்கும் அவர் வங்கியில் ரூ 15லட்சம் வங்கியில் செலுத்துதல்', 'கறுப்புப் பணம் ஒழிப்பேன் என்று ரூ.500/ ரூ 1000/ நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து அதுபோன்று செல்லாத நோட்டுக்கள் அரசு வங்கிகளுக்கு எவ்வளவு வந்துள்ளது என்று எண்ண முடியாமல் அதற்கான எந்திரங்கள் இல்லாத நிலை,

புதுமை பொருளாதாரம் என்று ஜி.எஸ்.டி.சட்டம் கொண்டு உற்பத்தி முடக்கியது', 'வெளிநாட்டு மேனா மினுக்கி பயணங்கள் மூலம் பயன் பெற்றது சில தொழில் அதிபர்கள் தானே ஒழிய ஐ.நா.சபையில் நிரந்தர பாதுகாப்பு உறுப்பினர் கூட பெறமுடியா பரிதாப நிலை போன்ற தோல்வியான திட்டங்களால் துவண்டு போன காவிப் படை கையில் எடுத்தது தான், 'லவ் ஜிஹாத் எதிரான நடவடிக்கை',

'பசுமாட்டை கறிக்காக கடத்துகிறார்கள் என்று ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நடந்த கொலைகளும், மாட்டுக் கறி சாப்பிட்டார்கள், மற்றும் பதுக்கி வைத்திருக்கின்றார்கள்' என்று கூலிப்படை கொண்டு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் அங்குள்ள ஆட்சியாளர்கள் துணையுடன் நடப்பதாக எண்ணத் தோன்றுகிறது என்று ஒரு உதாரணத்தைச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.

Read more...
 
அழகிய வினாக்களும் அற்புத பதில்களும் Print E-mail
Friday, 24 March 2017 07:59

அழகிய வினாக்களும் அற்புத பதில்களும்

ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.

01) நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?

நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்காரராகிவிடுவீர்கள்.

02) மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?

தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

03) நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?

ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

Read more...
 
இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது, முஸ்லிம்களில் பலர் மிக மோசமானவர்களாக இருப்பது ஏன்? Print E-mail
Monday, 06 May 2013 06:06

இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது, முஸ்லிம்களில் பலர் மிக மோசமானவர்களாக இருப்பது ஏன்?

     பதிலளிப்பவர்:  ஜாகிர் நாய்க்      

1. ஊடகங்கள் பரப்பும் அவதூறுகள்: 

இஸ்லாம் ஓர் சிறந்த மார்க்கம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் உலகின் பெரும்பாலான ஊடகங்கள் இஸ்லாத்தைக் கண்டு பயந்து கொண்டிருக்கும் மேற்குலகத்தின் கையில் இருக்கிறது. இந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை அச்சிட்டும், ஒலி-ஒளி பரப்பியும் வருகின்றன். இந்த ஊடகங்கள் இஸலாத்தைப் பற்றிய தவறான தகவல்களை தருவதையும், இஸ்லாமிய கருத்துக்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதையும் தொழிலாக கொண்டுள்ளன.

எப்போது, எங்கு வெடிகுண்டு வெடித்தாலும் - எந்தவித ஆதரமுமின்றி - முதன் முதலில் குற்றம் சாட்டப்படுவது முஸ்லிம்கள்தான். இந்த குற்றச் சாட்டுக்கள் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கும். பின்னர் அவர்கள் வெளியிட்ட செய்தி தவறு என்று தெரியும் பட்சத்தில் - அந்த செய்தி முக்கியத்துவம் அளிக்கப்படாத செய்தியாக மாறிவிடும்.

ஓரு ஐம்பது வயது முஸ்லிம் பெரியவர் 15 வயது பெண்ணை - அந்த பெண்ணிண் சம்மதத்தோடு - திருமணம் செய்து கொண்டால் அந்த செய்தி ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கும். அதே சமயம் ஐம்பது வயது முஸ்லிம் அல்லாத ஒருவர் 6வயது சிறுமியுடன் வல்லுறவு கொண்டு விட்டால் அந்த செய்தி முக்கியத்துவம் அளிக்கப்படாமல் - செய்திக் குறிப்புகள் போன்று பிரசுரிக்கப்படும்.

அமெரிக்காவில் தினமும் 2,713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. அந்த செய்திகள் எதுவும் ஊடகங்களில் வெளியிடப்படுவதில்லை. ஏனெனில் வல்லுறவு குற்றங்கள் செய்வது அமெரிக்கர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போய் விட்டது.

Read more...
 
அல்லாஹ் என்னை மன்னிப்பானா? Print E-mail
Thursday, 20 September 2012 22:12

 

    அல்லாஹ் என்னை மன்னிப்பானா?   

கேள்வி நான் ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு சாராயம் குடிக்கிறேன்; விபச்சாரம் செய்கிறேன். எனக்கு அதிலிருந்து பாவமன்னிப்பு கிடைக்குமா? தயவுசெய்து சொல்லுங்களேன். அவற்றிலிருந்து விலக எனக்கு என்ன வழியுள்ளது? எல்லாம் வல்ல அல்லாஹ் என்னை மன்னிப்பானா?. 

பதில் பாவங்களைத் தொடர்ந்து செய்துகொண்டு, "கருணையாளானான அல்லாஹ் என்னை மன்னிப்பான்" என்ற அலட்சியமான போக்கைக் கைவிட்டு, "அல்லாஹ்வின் உதவியோடு பாவங்களிலிருந்து நான் மீளப்போகிறேன்" எனும் உறுதியான நிய்யத்தை உள்ளத்தின் பதித்துக்கொண்டு அயராது முயல்வீர்களாயின் பாவங்களிலிருந்து நீங்கள் மீள்வது திண்ணம் இன்ஷா அல்லாஹ்!

Read more...
 
அந்நியப் பெண்களுடன் பேசலாமா? Print E-mail
Friday, 01 November 2013 07:31

Image result for muslim woman and man talk

அந்நியப் பெண்களுடன் பேசலாமா?

அந்நியப் பெண்களுடன் பேசலாமா அந்நியப் பெண்களுடன் பேசலாமா நான் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிகிறேன். அங்கே பெரும்பாலும் பெண்களே பணிபுரிகின்றனர். அவர்களுடன் நான் பேசலாமா? -ஒரு வாசகர்.

ஒரு ஆண் அந்நியப் பெண்களிடம் எந்தவிதமான பேச்சுக்களையும் பேசக்கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித்தோழர்களும் தவறான நோக்கமின்றி தேவை ஏற்படும் போது அந்நியப் பெண்களிடம் பேசியுள்ளார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

பெண்களிடம் ஆண்கள் அறவே பேசக் கூடாது என்று மார்க்கத்தில் தடுப்பதாக இருந்தால் இத்தா இருக்கும் பெண்கள் விஷயத்தில் அல்லாஹ் தடுத்திருப்பான். ஏனெனில் இத்தா காலத்தில் அந்தப் பெண்கள் திருமணம் செய்வதற்கு தடுக்கப்பட்டுள்ளனர். அப்படி இருந்தும் இத்தாவில் இருக்கும் பெண்களிடம் கூட அந்நிய ஆண்கள் பேசுவதை அல்லாஹ் பின் வரும் வசன்ங்களில் அனுமதிக்கிறான்.

Read more...
 
தஜ்ஜாலை விட்டும் தப்பிப்பது எப்படி? Print E-mail
Wednesday, 13 February 2013 06:41

தஜ்ஜாலை விட்டும் தப்பிப்பது எப்படி?

ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5239)

தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ உபைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

தஜ்ஜாலை விட்டும் தப்பிப்பது எப்படி?

"எவர் கஹ்ஃப் சூராவின் ஆரம்ப 10 ஆயத்துக்களை மனனமிட்டாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)

Read more...
 
ஒரு மனிதர் ஜோஸியம் பார்த்தால் மனைவியுடனான அவரது நி(க்)காஹ் முறிந்து விடுமா? Print E-mail
Wednesday, 15 February 2012 07:19

 Image result for q and a

  ஒரு மனிதர் ஜோஸியம் பார்த்தால் மனைவியுடனான அவரது நி(க்)காஹ் முறிந்து விடுமா?   

அவசர கோலத்தில் உடனே எவரையும் இஸ்லாத்தைவிட்டு வெளியில் தள்ளும் உரிமை எவருக்கும் தரப்படவில்லை.

  கேள்வி:      முன் நடந்தவைகளையோ அல்லது இனி பின்னால் நடக்கப் போகின்றவைகளையோ சாஸ்திரம், ஜோதிடம், கணிதம், குடுகுப்பைக்காரனின் கூற்று முதலியவைகளின் மூலம் கேட்டு, ஒருவன் அதன் மீது நம்பிக்கை வைத்து விட்டால், அவனுடைய, ஈமான் முற்றிலும் நீங்கி விடுகின்றது. அவனுடைய மனைவியின் நிக்காஹ் தானாகவே முறிந்து விடுகிறது. எனவே அந்த மனிதனுக்கு ரத்துல் குஃப்ர் (ஐந்தாம்) கலிமாவை சொல்லிக்கொடுத்து மீண்டும் அந்த விவாகத்தை புதுப்பிக்க வேண்டும் என்று ஒரு ஃபிக்ஹ் கிதாபில் வருகிறது என்று ஒரு ஆலிம் சொன்னார். அந்த ஃபிக்ஹ் கிதாபின் பெயரைக் கேட்டால் பெயர் மறந்துவிட்டது என்கிறார். குறி, ஜோஸியம் பார்த்து அதன் மீது நம்பிக்கை வைத்துவிட்டால் ஈமான் போய் விடுமா? நிக்காஹ் முறிந்து விடுமா? இதற்கு ஆதார நூலின் மேற்கோளுடன் தயவு செய்து பதில் தறுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். - ஒரு வாசகர்.

Read more...
 
விபச்சார குற்றத்திற்கு மன்னிப்பு உண்டா? Print E-mail
Tuesday, 22 May 2012 21:42

   விபச்சார குற்றத்திற்கு மன்னிப்பு உண்டா?  

 கேள்வி :  திருமணம் செய்து கொண்ட ஆணும், திருமணம் செய்து கொண்ட பெண்ணும் அறியாமையாலும் பெரும்பாவம் என்று தெரியாத காரணத்தினாலும் விபச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டார்கள். இந்த விபச்சாரம் மரணதண்டனை கிடைக்கக்கூடிய பெரும்பாவம்.

தண்டனை பெறாமல் இருவரும் மரணமடைந்து விட்டார்கள். இருவரும் மணரமடைந்த பின் இவ்விஷயம் இருவரின் பெற்றோர்களுக்கும தெரிய வந்தன. பெண் கணவனுக்கும், கணவன் மனைவிக்கும், இரு பெற்றோர்களும் எப்படிப்பட்ட பிரார்த்தனை செய்தால் அந்தப் பாவத்தை இறைவன் மன்னிப்பான்?

திருமணம் செய்து கொண்ட ஆணும், திருமணம் செய்து கொண்ட பெண்ணும் அறியாமலும், விபச்சாரம் பெரும் பாவம் என்பதை தெரியாமலும் விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டார்கள். எப்படிப்பட்ட பிரார்த்தனையால் இந்த பெரும் பாவம் இறைவனால் மன்னிக்கப்படும்?

Read more...
 
முஸ்லிமல்லாத பெற்றோரின் சொத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டா? Print E-mail
Monday, 02 January 2012 07:08

Related image

o முஸ்லிமல்லாத பெற்றோரின் சொத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டா?

o நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுவயது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்தது ஏன்?

o வினிகர் பயன்படுத்தலாமா?

Read more...
 
பலதாரமணத்தை ஊக்குவித்தால் என்ன? Print E-mail
Monday, 14 May 2012 10:39

    பலதாரமணத்தை ஊக்குவித்தால் என்ன?   

கேள்வி : முஸ்லிம் சகோதரர்கள், அல்லாஹ் அனுமதி அளித்த குறைந்தபட்ச 2 திருமணமாவது செய்தால் என்ன?

வரதட்சணை கொடுமையினால் திருமணம் ஆகாமல் பல முதிர் கன்னிகளும், சிறுவயதில் கணவனை இழந்த இளம் விதவைகளும், பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், திருமணம் செய்ய தகுதி படைத்தோர் அப்படி செய்யவும், அப்படி இயலாதோர் பிரச்சாரமாவது செய்தால் என்ன?

இவ்வாறாவது விதவைகளின் வாழ்வில் ஒளியையும், சமுதாய மானத்தையும் காப்பாற்றினால் என்ன?

2-ஆம் திருமணத்தை வலியுறுத்தினால் என்ன? - ஒரு பெண் வாசகி

Read more...
 
அடக்கம் செய்யப்பட் உடலை வெளியில் எடுக்கலாமா? Print E-mail
Tuesday, 04 October 2011 08:04

o  அடக்கம் செய்யப்பட் உடலை வெளியில் எடுக்கலாமா?

o  பிரேதப் பரிசோதனை செய்யலாமா?

o  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மையத்தை குளிப்பாட்டலாமா?

Read more...
 
ஜனாஸாவை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமா? Print E-mail
Wednesday, 14 May 2014 06:14

ஜனாஸாவை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமா?

நமது இஸ்லாம் மார்க்கம் இறந்தவரை சீக்கிரமாக கஃபனிட்டு அடக்கம் செய்ய கட்டளை இடுகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; "நீங்கள் ஜனாஸாவை (சுமந்து செல்லும்போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாக இருந்தால் அந்த நன்மையின் பக்கம் விரைந்து. செல்கிறீர்கள். அவ்வாறு இல்லாவிட்டால் ஒரு தீங்கை உங்களின் தோள்களில் இருந்து (விரைவில்) இறக்கி வைக்கிறீர்கள்" என்று கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி)

எனவே ஃபுககாக்கள் "ஜனாஸா தொழுகைக்கு அதிகமாக கூட்டம் வரும் என்பதற்காக ஜும்ஆவிற்கு முன்பே தயாரான ஜனாஸாவை ஜும்ஆ வரை பிற்படுத்துவதும் மக்ரூஹ் என்று கூறுகிறார்கள். எப்பொழுது தயாராகி விடுகிறதோ அப்போதே மய்யித்தை தொழ வைத்து அடக்கம் செய்திட வேண்டும். (நூல்: ரத்துல் முக்தார் 2/239)

எனவே தான் மய்யித்தை அடக்கம் செய்யச் செல்லும்போது சற்று விரைவாக (ஓடக்கூடாது) நடந்து செல்ல கட்டளையிடப்படுகிறது. (நூல்: அல்பஹ்ருர் ராயிக் 2/335)

Read more...
 
ஆண்கள் குப்புறப் படுத்துத் தூங்கலாமா? பெண்கள் நிமிர்ந்து படுத்துத் தூங்கலாமா? Print E-mail
Friday, 10 February 2017 08:37

ஆண்கள் குப்புறப் படுத்துத் தூங்கலாமா? பெண்கள் நிமிர்ந்து படுத்துத் தூங்கலாமா?

கேள்வி: ஆண்கள் குப்புறப் படுத்துத் தூங்கக் கூடாது என்றும் பெண்கள் நிமிர்ந்து படுத்துத் தூங்கக் கூடாது என்றும் கூறுகின்றார்களே! இதற்கு ஹதீஸ் ஆதாரம் உள்ளதா? 

பதில்:  குப்புறப்படுத்து தூங்கக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அறிவிப்பாளர் தொடரில் பல குறைபாடுகளைக் கொண்டதாக உள்ளன.

இந்த அறிவிப்பாளர் தொடர் குறித்த விமர்சனம் நுணுக்கமானதாக இருந்தாலும் இதை சரியான ஹதீஸ் என்று சிலர் வாதிடுவதால் விரிவாகவே இதை விளக்குகிறோம்.

முதல் ஹதீஸ்

ஒருமனிதர் தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருப்பதை நபியவர்கள் பார்த்தார்கள். இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர் அபூ ஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு,  நூல் திர்மிதி (2692) அஹ்மது (7524, 7698)

Read more...
 
மதம் மாறினால் மரண தண்டனையா? Print E-mail
Wednesday, 05 June 2013 07:03

Related image

  Q.     இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர் பிறகு இஸ்லாத்திலிருந்து வெளியேறி மாற்றுமதத்திற்கு சென்று விட்டால் அவரை கொல்ல வேண்டும் என்பது சட்டமா...? 

  A.   ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி பிற மதத்திற்கு சென்று விட்டால் அவரைக் கொள்ள வேண்டும் என்று அறிஞர்களில் ஒரு சாரார் கூறி வருகிறார்கள். ஸலஃபுகள் என்று அறியப்பட்ட முந்தைய அறிஞர்களில் பலரும் இந்த கருத்தைக் கொண்டுள்ளனர்.  அதற்கு ஆதாரமாக,

''எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி தமிழ் 3037, 6992. என்ற நபிமொழியை முன் வைக்கின்றனர் (இதே கருத்தில் இன்னும் சில நபிமொழிகளும் உள்ளன)

இந்த நபிமொழியை படிக்கும் எவரும் இஸ்லாத்தில் மனித உரிமை (இந்த விஷயத்தில்) இல்லை. ஒருவர் ஒரு மதத்தை தேர்ந்தெடுப்பதும், விரும்பினால் அதை விட்டு விலகுவதும் அவரது சொந்த விருப்பமல்லவா... கிறிஸ்த்தவத்திலிருந்து எவ்வளவோ நபர்கள் இஸ்லாத்திற்கு வருகிறார்கள், ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாத்தை தழுவுகிறார்கள் அவர்களையெல்லாம் அந்த மதங்கள் கொல்ல சொல்கின்றனவா... அது மனித உரிமை என்று அந்த மதங்கள் கருதும் போது அது போன்ற ஒரு சகிப்புத் தன்மை ஏன் இஸ்லாத்தில் இல்லை. என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்  இது குறித்து ஆங்காங்கே விவாதங்களும் நடக்கின்றன. 

உண்மையில் மதம் மாறியவர்களை இஸ்லாம் கொல்ல சொல்கின்றதா..?   மேற்கண்ட நபிமொழியின் அர்த்தம் என்ன? இது குறித்து நாம் விளக்கியாக வேண்டும். மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..?

Read more...
 
தாடி, தலைமுடி முதலியவற்றிற்குக் கறுப்புச் சாயம் பூசுவது கூடுமா? கூடாதா? Print E-mail
Friday, 04 January 2013 07:53

தாடி, தலைமுடி முதலியவற்றிற்குக் கறுப்புச் சாயம் பூசுவது கூடுமா? கூடாதா?

"நிச்சயமாக யூதர்களும், கிருஸ்தவர்களும் தாடி, தலைமுடி ஆகியவற்றிற்குச் சாயம் பூசிக்கொள்வதில்லை. ஆகவே அவர்களுக்கு வேறுபட்டு நடவுங்கள்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ, முஸ்லிம்)

ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவாசிகளில் தாடிகள் வெளுத்திருந்த வயோதிகர்களின் பக்கம் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது அவர்களை நோக்கி "மதீனாவாசிகளே! நீங்கள் சிவப்புச் சாயமோ, அல்லது மஞ்சள் சாயமோ பூசிக் கொள்ளுங்கள். மேலும் வேதக்காரர்களுக்கு வேறுபட்டு நடந்து கொள்ளுங்கள்' என்றார்கள். (அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு, அஹ்மத்)

மேற்காணும் ஹதீஸ்களில் தாடி, தலை ஆகியவற்றில் நரைத்துள்ள உரோமங்களுக்கு சிவப்பு, அல்லது மஞ்சள் சாயம் பூசிக் கொள்வது வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காணுகிறோம்.

"அல்லாஹ் கறுப்புச் சாயம் பூசுவோரின் முகத்தை மறுமை நாளில் கறுப்பாக்கி விடுவான்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அபுத்தர்தாஃ ரளியல்லாஹு அன்ஹு, தப்ரானீ)

Read more...
 
பாங்கு சொல்வதைக் கேட்கும் போது பெண்கள் தலையில் துணி அணிவது கடமையா? Print E-mail
Friday, 21 October 2011 07:33

01. பாங்கு சொல்வதைக் கேட்கும் போதும், பாங்கு துஆக்களை ஓதும் போதும், உளூச் செய்யும் போதும், குர்ஆன் ஓதும் போதும் பெண்கள் தலையில் துணி அணிவது கடமையா?

02. முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. இதனால் மறுமையில் தண்டனை உண்டா?

03. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே! இதன் விளக்கம் என்ன?

04. என் கணவர் திடீரென்று முத்தலாக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி விட்டார். என் கணவர் தலாக் விட்டு ஏழு மாதங்கள் ஆகின்றது. என் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். இது சரியா?

05. இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்ய திருக்குர்ஆன் தடை செய்கிறது. தற்போது தர்ஹா வழிபாடுகளில் ஈடுபடும் பெண்களை திருமணம் செய்யக் கூடாதா?

06. மணமக்களை அழைத்து விருந்து கொடுக்கலாமா? அதில் நாம் கலந்து கொள்ளலாமா?

Read more...
 
பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்வதில் என்ன தவறு...?! Print E-mail
Wednesday, 26 December 2012 06:50

பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்வதில் என்ன தவறு...?!

[ மாற்றார்களின் திருமணத்தில் நமது மார்க்கம் தடுத்துள்ளவை நடக்குமானால் பங்கெடுக்கக் கூடாது என்றாலும் திருமணத்துக்கு முன்போ அல்லது பின்போ தீமைகள் அரங்கேறாத போது மணமக்களைப் பார்த்துவிட்டு வந்தால் அது மார்க்கத்தில் தவறல்ல.]

பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் சில சட்டங்கள் பொருந்தாது என்பது உண்மை. அவர்கள் பன்றி இறைச்சி சாப்பிட்டால் அதை இஸ்லாமிய அரசு தடுக்காது. அவர்கள் சிலை வழிபாடு செய்தால் அவர்களின் வழிபாட்டு உரிமை என்று அதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நம் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயல்களை அவர்கள் செய்யும் போது அதை அந்தச் சபையில் நாம் இருப்பதற்கு இது எப்படி ஆதாரமாக அமையும்?

முஸ்லிமல்லாதவர்கள் நடித்துள்ள ஆபாசக் காட்சியை நாம் பார்ப்பது கூடுமா? அவர்கள் பன்றியைச் சாப்பிடுவதால் அதை அவர்கள் நமக்குத் தரும் போது நாம் சாப்பிட முடியுமா?

இறைவன் கட்டளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளும் மாற்று மதத்தினர்களுக்குப் பொருந்துமா? பொருந்தாதா? என்ற அடிப்படையில் இப்பிரச்சனையை நாம் அனுகக் கூடாது. மார்க்கம் தடை செய்த காரியங்களில் நாம் பங்கெடுப்பது கூடுமா? கூடாதா? என்ற அடிப்படையில் தான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

Read more...
 
நிர்வாணமாக இருப்பது தவறா? Print E-mail
Friday, 28 June 2013 19:53

Q.   நானும் எனது மனைவியும் வீட்டில் தனியாக இருக்கும்போது நிர்வாணமாக இருப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன். அப்படி இருப்பது தவறா? -ஒரு வாசகர்.

 A.   நிர்வாணமாக இருத்தல் என்பது இரு வகைகளில் உள்ளது. நிர்வாணம் அவசியம் என்பதற்காக நிர்வாணமாக இருப்பது ஒரு வகை. அவசியமில்லாமல் நிர்வாணமாக இருப்பது இன்னொரு வகை. அவசியமான நிர்வாணத்துக்கு உள்ள அனுமதியை அவசியமில்லாத போது பயன்படுத்தக் கூடாது.

மலஜலம் கழிக்கும் போது நிர்வாணம் அனுமதிக்கப்படுவதால் எல்லா நேரத்திலும் நிர்வாணமாக இருக்கக் கூடாது.

கணவன் மனைவி மட்டுமே இருந்தாலும் எப்போது ஒருவருக்கொருவர் தேவையோ அந்த நேரங்களில் நிர்வாணமாக இருக்க அனுமதி உண்டு. அவ்வாறு இல்லாமல் எல்லா நேரங்களிலும் நிர்வாணமாக இருக்கக் கூடாது.

Read more...
 
முஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா? Print E-mail
Sunday, 08 September 2013 04:30

முஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா?

 ஐயம் :  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ளேன்.

என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதுவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை.

என் குழந்தைகள் என்னை இப்போது வெறுக்கிறார்கள். என் முகத்தைக்கூட பார்ப்பதில்லை.

ஆனால், என் தேடலையும் என்னையும் என் மனைவி புரிந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் என் மனைவியுடன் நான் இல்லறம் தொடரலாமா? அல்லது அவர்களை ஒதுக்கிவிட்டு வேறு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவா?  - சகோதரர் ரஹ்மத்துல்லாஹ்.

Read more...
 
சுய இன்பம் செய்யவில்லை என்றால், ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்... என்ன செய்ய?! Print E-mail
Sunday, 15 September 2013 06:01

ஈமானின் உறுதி எங்கெல்லாம் ஒளிந்திருக்கிறது...!!!

 ஐயம் :  நேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வேன். இதை செய்யவில்லை என்றால், ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும். எனக்கு விரைவில் திருமணம் ஆக இருக்கிறது. திருமணமானவுடன் மனைவியை ஊரில் விட்டு விட்டு அரபு நாடுகளுக்கு வரலாமா?

 தெளிவு :  "மனிதன் நன்மையைக் கோருவது போலவே தீமையையும் கோருகிறேன். (ஏனெனில்) மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்". என அல்லாஹ்(ஜல்) பரிசுத்த நெறி நூலின் 17:11 வசனத்தில் தெரிவிக்கிறான். ஹராமான செயல்களில் ஈடுபடும்படி ஆகிவிடும் என்பதற்காக, தங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள் எனத் தெரிகிறது.

"இதைச் செய்ய்வில்லையென்றால், ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்" என தாங்கள் கூறுவதிலிருந்து தங்களின் (Will – Power) மன உறுதியில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத்தெரிகிறது.

Read more...
 
இந்துவாக பிறந்ததற்கு நான் எப்படி பொறுப்பாவேன்? Print E-mail
Wednesday, 23 July 2014 04:19

இந்துவாக பிறந்ததற்கு நான் எப்படி பொறுப்பாவேன்?

கேள்வி :  மறுபிறப்பில் ஆபிராமிய மதங்களில் நம்பிக்கை இல்லை. ஒரே பிறப்புதான்.. அந்த ஒரே பிறப்பை, என்னை ஏன் ஹிந்துவாக பிறக்க வைத்தான் அல்லாஹ்? ஹிந்து தாய் தந்தைக்கு பிறந்தால், நான் ஹிந்துவாகத்தான் வளர்க்க படுவேன். யூதன் யூதனாக வளர்க்க படுவான். கிறிஸ்துவன் கிருதுவனாக வளர்க்க படுவான். பவுத்தான் பவுத்தனாக வளர்க்க படுவான்... -திரு ஜனவி புத்திரன்!

பதில் : இங்கு இறைவனை குற்றம் சொல்ல முடியாது. ஆதாமும் ஏவாளும் முதல் மனிதர்கள் இந்த உலகத்துக்கு. அதன் பின் நமது காலம் வரை இந்த உலகத்துக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான இறைத் தூதர்கள் மனிதர்களை நேர் வழிப்படுத்த வந்துள்ளார்கள். ஒவ்வொரு மொழிக்கும் தூதரை அனுப்பியுள்ளதாக குர்ஆனில் இறைவன் கூறுகிறான். ஆனால் மனிதனோ தனக்கு அருளப்பட்ட வேதத்தை சில காலத்துக்குப் பிறகு தனது வசதிக்காக மாற்றி விடுகின்றான்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இறைத் தூதரான ஏசு நாதரை இன்று கிறித்தவர்கள் கடவுளாக மாற்றியதை பார்க்கிறோம். அவரும் நபிகள் நாயகத்தைப் போல ஒரு இறைத் தூதரே! அதே போல் இந்து மத வேதங்களும் ஏக தெய்வக் கொள்கையையே பறை சாற்றுகின்றன. ஆனால் அந்த வேதத்தை மொழி பெயர்க்காமல் தெருவுக்கு ஒரு கடவுளை உண்டாக்கிக் கொண்டது யார் தவறு? 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பதூனே நமது தமிழர்களின் பண்பாடு. அதனைத்தானே இஸ்லாமும் போதிக்கிறது?

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 98

-         310 300nd

Links

லா இலாஹ இல்லல்லாஹ்

Links 2

Best Article