வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

ஈதுல் அள்ஹா - ஈத் முபாரக் Print E-mail
Tuesday, 21 August 2018 03:34

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இன்று  ஈதுல் அள்ஹா  பெருநாள்

கொண்டாடும் அனைவருக்கும்

உளமார்ந்த

ஈத் முபாரக்

M.A.Mohamed Ali,B.A.

-adm. www.nidur.info

 
ஹஜ்ஜுப் பெருநாள் சட்டங்கள் Print E-mail
Wednesday, 23 September 2015 04:36

ஹஜ்ஜுப் பெருநாள் சட்டங்கள்

الله أكبر الله أكبرلااله الا الله والله أكبر الله أكبر ولله الحمد

''ஈத்'' என்னும் அரபுச் சொல்லுக்கு திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும். பெருநாள் ஆண்டு தோறும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயர் பெற்றது.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனாவாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்கான காரணங்களை வினவியபோது நாங்கள் பண்டு தொட்டு விளையாடுவதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்றார்கள்.

அப்போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''அல்லாஹ் அவ்விரண்டு (திருவிழாக்களு) க்கும் பதிலாக அவ்விரண்டைவிடச் சிறந்த திருநாட்களை பதிலாக வழங்கியுள்ளான். அவை: ஒன்று ஈதுல் அள்ஹா! (குர்பானி வழங்கும் தியாகத் திருநாள்!) மற்றொன்று ஈதுல் ஃபித்ர்! (ஈந்து உவக்கும் ஈகைப் பெருநாள்!) என்று அறிவித்தார்கள் என அனஸ் ரளியல்லாஹு அன்ஹுதெரிவித்தார்கள். (ஆதாரம் : அபூதாவூது நஸயீ)

ஈதுல் ஃபித்ர் ரமளான் மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்றபின் ஷவ்வால் மாதம் முதல் பிறை பார்த்தபின்னர் கொண்டாடப்படும் பெருநாளாகும். ரமளான் மாதம் முழுவதும் உண்ணாமல் பருகாமல் பசித்திருந்து நோன்பு நோற்றவர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசாக இந்த நோன்பு அமைந்துள்ளது.

ஈதுல் அள்ஹா இறை ஆணைப்படி நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் மகன் இஸமாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பலியிட முன்வந்த இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கொண்டாடப்படும் பெருநாளாகும்.

Read more...
 
தியாகத் திருநாள் - வரலாற்று நினைவுகள் Print E-mail
Sunday, 05 October 2014 19:43

தியாகத் திருநாள் - வரலாற்று நினைவுகள்

    கவிஞர் ப.அத்தாவுல்லாஹ்    

பரந்து கிடந்தது அந்த பாலைப் பெருவெளி. கண்ணெட்டிய தூரம்வரை மண்கொட்டிக் கிடந்தது. அந்தப் பெருமகனாரும் அவர்தம் துணைவியாரும் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு பால்மணம் மாறாத அந்த பச்சிளம் பாலகர். இறைவன் இட்டுவைத்த இலக்கு நோக்கி அவர்களது பயணம் அமைந்திருந்தது.

தமது எந்த சொந்த விருப்பங்களுக்காகவும் தம்மை விலைப்படுத்திக் கொள்ளாத அந்த நேயர் குறிப்பிட்ட இடம் வந்ததும் தம் பயணம் நிறுத்தினார். அவர்களது தேவைக்காகக் கொஞ்சம் கனிகளையும் தோற்பை சுமந்த குடிநீரையும் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தார்.

அவர்களைக் குடியமர்த்திய அந்தப் பெருவெளியில் அந்த மரத்திற்கு அருகில் இந்த உலகத்தின் மையப்புள்ளி, சற்றே உயர்ந்த மணல்மேடாய் தெரிந்தது. திரும்பி நடந்த அந்தப் பெருமகனாரை நோக்கி அவர் துணைவியார் வினவினார்.

'எங்களை இங்கே விட்டுவிட்டுச் செல்லுமாறு இறைவன்தான் உங்களுக்குக் கட்டளையிட்டானா?'

'ஆமாம்'

'அப்படியானால் அவன் எங்களைக் கைவிட மாட்டான்' உறுதிபட எழுந்தது அன்னையின் குரல். அவர்களை விட்டுச்சென்ற அந்த இடத்தில் இரு மலைக்குன்றுகள் நின்றன. பக்கத்தில் அந்த மணல்மேடு இருந்தது. அந்த மணல்மேடு ஆதியிறை ஆலயம் 'கஅபா'.

அந்தப் பெருமகனார் பெயர் இபுராஹீம் (அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்), அவர் துணைவியார் பெயர் ஹாஜரா (அலைஹிஸ்ஸலாம்) அந்தப் பாலகர் பெயர் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்).

Read more...
 
உள்ஹிய்யாவின் முக்கியத்துவமும், சிறப்பும் Print E-mail
Saturday, 13 September 2014 09:51

உள்ஹிய்யா என்றால் என்ன?

    M.B.M. இஸ்மாயில்(ஸலாமி) BA.Hons (Madeena)  

மொழி வழக்கில் உள்ஹிய்யா என்பது சூரியன் உதயமாகி அது உயர்வடைந்துள்ள நேரத்தைக் குறிக்கும். இஸ்லாமிய வழக்கில் உள்ஹிய்யா என்பது, "சில நிபந்தனைகளுடன் குறித்த ஒரு தினத்தில் இறைவனின் நெருக்கத்தைப் பெறும் நோக்கில் அறுக்கப்படும் குறிப்பிட்ட வயதையுடைய ஒரு பிராணிக்குச் சொல்லப்படும் பெயராகும்." என்று அறிஞர்கள் வரைவிலக்கணப் படுத்தியுள்ளார்கள்.

உள்ஹிய்யாவின் முக்கியத்துவமும், சிறப்பும்:

இறைவனின் கட்டளைப்படி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் அன்பு மகன் இஸ்மாயீலை அறுக்க முனைந்தபோது அல்லாஹ் அதற்குப் பதிலாக சுவர்க்கத்திலிருந்து ஒரு ஆட்டை இறக்கி அதை அறுக்குமாறு சொன்னான். இந்த சோதனையில், இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பவர் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டது.

இதனை நினைவூட்டும் வகையில் அமையப்பெற்ற முக்கியமான வணக்கங்களில் ஒன்றே உழ்ஹிய்யாவாகும். அதாவது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக ஷைத்தானிய சக்திகளுக்கு அடிபணியமாட்டேன், இஸ்லாத்திற்காக எனது உடல் பொருள், சொந்தங்கள் அனைத்தையும் இழக்கத் தயார், மற்றவர்களுடன் இதற்காக போராடவும், இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போன்று எந்த சவாலையும் ஏற்றுக்கொண்டு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒரு ஏகத்துவவாதியாக வாழவும் நான் தயார் எனும் உணர்வை உருவாக்கும் உன்னத வணக்கம் இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

Read more...
 
தியாகத் திருநாள் கற்பிக்கும் பாடங்கள் Print E-mail
Monday, 28 August 2017 07:37

Image result for eid ul adha 2016

தியாகத் திருநாள் கற்பிக்கும் பாடங்கள்

இவ்வுலக வாழ்க்கை என்பது இறைவனால் நடத்தப்படும் பரீட்சை என்பதை அனைவரும் அறிவோம். இப்பரீட்சையில் பலரும் பல்வேறு விதமாக சோதிக்கப்படுகிறார்கள். சுமார் 5000 வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்த இப்ராஹீம் என்ற ஒரு இறைத்தூதருக்கு வாய்த்த பரீட்சை மிகவும் அலாதியானது.

அவர் முழுக்க முழுக்க இறைவனுக்குக் கட்டுப் பட்டவராகவும் இறைக்கட்டளைகள் எதுவானாலும் சிறிதும் தயக்கம் காட்டாமல் நிறைவேற்றுபவராகவும் இருந்தார்.

இறைவன் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய நம்பிக்கையும் ஈடிணையில்லாதது.

சிலைவணங்கிகளாயிருந்த தன் நாட்டு மக்களுக்கிடையே தனிநபராக நின்று சத்தியப்பிரச்சாரம் செய்து அதன் விளைவாக அந்நாட்டு அரசனால் நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்டார்.

இறைவன் கட்டளையிட்டான் என்பதற்காக தனது ஆருயிர் மனைவியையும் பச்சிளம் பாலகனையும் ஒரு பாலைவனத்தின் நடுவெளியில் விட்டுவிட்டு வந்தார்.

இவ்வாறு தொடர்ந்து அவருக்குக் கொடுக்கப்பட்ட அனைத்துப் பரீட்சைகளையும் ஒரு சிறிதும் தயக்கம் காட்டாமல் நிறைவேற்றி வந்தார்.

இறைவன் அனைத்து சோதனைகளிலும் அவரையும் அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றவும் செய்தான்.

அவருக்கு உச்சகட்டமாக வைக்கப் பட்ட ஒரு பரீட்சையை மனிதகுலம் நினைவு கூரவும், அதன் படிப்பினையை வாழ்வில் கடைப்பிடிக்கவுமே முஸ்லிம்களால் க்ரீத் அல்லது தியாகத் திருநாள் என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Read more...
 
ஹஜ்ஜின் புனிதமான நோக்கங்கள் Print E-mail
Tuesday, 22 August 2017 07:12

       ஹஜ்ஜின் புனிதமான நோக்கங்கள்       

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்

லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்

அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.

எல்லாம் வல்ல இறைவன் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்குக் கடமையாக்கி வைத்திருக்கின்ற அத்தனை வணக்க வழிபாடுகளும் ஒரு புனிதமான நோக்கத்தைக் கொண்டவையாக இருக்கின்றன.

அவன் மொழிகின்ற கலிமாவான ஷஹாதத்தாக இருக்கட்டும், தொழுகையாக இருக்கட்டும், நோன்பாக இருக்கட்டும், ஸகாத் மற்றும் தான தர்மங்களாக இருக்கட்டும், வாழ்நாளில் ஒருமுறை வசதிவாய்க்கப்பட்டவர்களுக்காக கடமையாக்கப்பட்டிருக்கும் ஹஜ்ஜாக இருக்கட்டும்.., இவை அனைத்தும் ஒரு உயரிய நோக்கத்திற்காகவே கடமையாக்கப்பட்டிருக்கின்றன.

எவ்வாறு வானமும், பூமியும், அண்ட சராசரங்களும் இந்த பிரபஞ்ச வாழ்க்கைக்கான பங்களிப்பிற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றனவோ, அதனைப் போலவே மனிதனும், அவன் மீது இறைவன் கடமையாக்கி வைத்திருக்கின்ற வழிமுறைகளும் ஒரு உயரிய நோக்கத்தைக் கொண்டவையாக உள்ளன.

Read more...
 
இறை நம்பிக்கையை அதிகமாக்கும் இறுதிக் கடமை Print E-mail
Monday, 20 August 2018 07:46

Image result for hajj

இறை நம்பிக்கையை அதிகமாக்கும் இறுதிக் கடமை

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையாக ஹஜ் காணப்படுகிறது. ஹஜ் என்ற அரபுப் பதத்திற்கு (புனிதமான ஒன்றை) நாடிச் செல்லல் என்பது பொருளாகும்.

அதாவது அல்லாஹ்வின் இல்லமான புனித கஃபாவை நாடிச் சென்று இக்கடமை நிறைவேற்றப்படுவதால் ஹஜ் என்ற அரபு பதத்தால் இக்கடமை அழைக்கப்படுகிறது.

ஹஜ்ஜினால் ஏற்படும் நன்மைகளும் அது புகட்டும் பாடங்களும் ஏராளம் உள்ளன. அவைகள் இன்றைய சமூகத்தில் சரியாக உணரப்படவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.

Read more...
 
'அரஃபா நோன்பு' - பிறை ஒன்பதிலா? அல்லது அரஃபாவில் ஹாஜிகள் கூடும் அன்றா? Print E-mail
Saturday, 10 September 2016 07:06

'அரஃபா நோன்பு' - பிறை ஒன்பதிலா? அல்லது அரஃபாவில் ஹாஜிகள் கூடும் அன்றா?

ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தவிர, வருடத்தின் மற்ற சில நாட்களில் நோன்பு வைப்பதும் இஸ்லாத்தில் வரவேற்கத்தக்க, வலியுறுத்தப்பட்ட வணக்கங்களாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான நோன்புதான் 'அரஃபா நோன்பு' என்று சொல்லக்கூடிய நோன்பாகும்.

இந்த நோன்பை, இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோற்கும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம‌க்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.

அபூ கதாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2151)

Read more...
 
குர்பானியின் சட்டங்கள் Print E-mail
Saturday, 21 November 2009 07:33

குர்பானியின் சட்டங்கள்

o குர்பானி கொடுக்கும் நாட்கள்

o அறுக்கும் முறை

o ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி

o குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை விநியோகம் செய்தல்

o குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்

o குர்பானிப் பிராணியின் வயது

o நாமே அறுக்க வேண்டும்.

o தொழுகைக்கு முன் குர்பான் கொடுத்தால் கூடாது

o அரஃபா தினத்தன்று நோன்பு

Read more...
 
"குர்பானி" என்னும் திருப்பலி Print E-mail
Saturday, 02 September 2017 06:46

 Related image

"குர்பானி" என்னும் திருப்பலி

      ரஹ்மத் ராஜகுமாரன்      


குர்பானி எப்போது ஆரம்பித்தது ?

ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் தம்பதிகளுக்கு ஒவ்வொரு சூலிலும் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள் பிறக்கும்.

முதல் பிரசவ ஆணுக்கும் இரண்டாம் பிரசவ பெண்ணுக்கும் திருமணம்.

முதல் பிரசவ பெண்ணுக்கும் இரண்டாம் பிரசவ ஆணுக்கும் திருமணம். .இது இறைச் சட்டம். காரணம் வேறு மக்கள் எவரும் இல்லை. இப்போது இச்சட்டம் உலகில் எங்குமே இல்லை.

முதல் சூலில் காபிலும் இக்லீமா என்ற பேரழகியும், இரண்டாம் சூலில் ஹாபிலும் லுபூதா என்ற குறைவான அழகியும் பிறந்தார்கள்.

காபில் இறைச் சட்டத்தை மீறி தன்னுடன் பிறந்த பேரழகி இக்லீமாவை மணப்பேன் என்று கூற, ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் சம்மதம் பெற குர்பானி கொடுக்கச் சொல்லி  "யாருடைய குர்பானியை இறைவன் ஏற்றுக் கொள்கிறோனோ அவருக்கே பேரழகி  இக்லீமா"  என்கிறார்கள்.

Read more...
 
பேரற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஜம் ஜம் கிணறு Print E-mail
Wednesday, 22 June 2011 12:33

பேரற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஜம் ஜம் கிணறு

ஜம் ஜம் கிணறு. இப்போது மக்கா நகரமாக இருக்கும் இந்த இடம் ஊராக உருவாவதற்கு முன், முதன் முதலில் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது மனைவியையும், கைக் குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக் கட்டளைப்படி இங்கே குடியமர்த்தினார்கள்.

குழந்தை தாகத்தால் தவித்த போது இஸ்மாயீலின் தாயார், ஸஃபா மர்வா என்னும் இரு மலைக் குன்றுகள் மீதும் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக ஓடி ஏறி, ஏதாவது வணிகக் கூட்டம் செல்கின்றதா? என்று பார்த்தார்கள். அவர்களிடம் தண்ணீர் வாங்கி குழந்தையின் தாகத்தை தணிக்க எண்ணினார்கள்.

அதற்கிடையே அல்லாஹ், குழந்தை கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை ஏற்படுத்தினான்.எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாத தன்மை இந்த ஜம்ஜம் நீருக்கு உண்டு. இங்கே கால் கோடிக்கும் அதிகமான மக்கள் அன்றாடம் பயன்படுத்தியும், கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் இந்தக் கிணறு ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்துக் கொண்டிருக்கிறது.

தோண்டுகின்ற இடமெல்லாம் எண்ணெய்க் கிணறுகள் தோன்றுகின்ற இந்தப் பாலைவன மணலில், இது ஒரு வரலாற்று அற்புதம். நாள் தோறும் வருகின்ற பல்லாயிரக் கணக்கான மக்களுக்கும், ஆண்டு தோறும் கூடுகின்ற அத்தனை இலட்சம் பேருக்கும் தாகம் தணிக்கிறது இக்கிணறு. அதிக சக்தியுள்ள இயந்திரங்கள் மூலம் அனுதினமும் நீர் வெளியேற்றப்படுகிறது.

Read more...
 
இறையன்பர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிறப்புகள் Print E-mail
Monday, 14 October 2013 08:26

இறையன்பர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிறப்புகள்

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "படைப்பினங்களிலேயே மிகவும் சிறந்தவரே!'' என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான்'' என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே...' என்று கூறினார்'' என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. - மேற்கண்ட அதே ஹதீஸ் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது எண்பதாவது வயதில் வாய்ச்சியினால் விருத்த சேதனம் செய்துகொண்டார்கள். இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (இறந்துவிட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால்) நாமே இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைவிடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (ஆகவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை.) இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், "என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக'' என்று கேட்ட போது, "(அதை) நீர் நம்பவில்லையா?'' என (அல்லாஹ்) கேட்டான். அதற்கு அவர் "அவ்வாறன்று (நம்பியிருக்கிறேன்); எனினும், எனது உள்ளம் நிம்மதியடைவதற்காகவே (கேட்கிறேன்)'' என்று கூறினார். (அல்குர்ஆன் 2:260)

Read more...
 
மனிதன் Print E-mail
Sunday, 19 August 2018 11:35

னின்

அல்லாஹு தஆலா நமக்கு செய்த மிகப்பெரிய கிருபை நம்மை மனித குலத்திலே பிறக்க செய்து, அதிலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அன்னவர்களின் சிறப்பு மிக்க உம்மத்திலே நம்மை கொண்டு வந்தான்.

அல்லாஹ் தன் அருள்மறையில் :

ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا

ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தான் அவர்களைச் சுமந்து செல்(லும்படிச் செய்)கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற உயிரினங்களில்) பலவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம். (17:70)

இப்படி அல்லாஹ் நம்மை சிறந்த முறையில் சங்கை படுத்தியுள்ளான். எல்லா வகையிலும் நமக்கு வேண்டியவற்றையு தாராளமாக அவனது கிருபையை கொண்டு பகிர்ந்தளித்துள்ளான்.

Read more...
 
மனிதாபிமானம் ஓர் இபாதத் Print E-mail
Friday, 14 October 2016 07:21

மனிதாபிமானம் ஓர் இபாதத்

[ ஒரு மனிதன் மறுமையை மிக ஆழமாக விசுவாசிக்கின்றான் என்றால் அவனது உள்ளத்திலே இரக்க உணர்வு வரும். நீதி வரும். சமூகத்திலே பாதிக்கப்பட்டவர்களையும் ஆளாக்க வேண்டும், அவர்களையும் கவனிக்க வேண்டும் என்ற சிந்தனை வரும். அவர்களை கவனிக்க வேண்டும், அவர்களுக்குரிய உரிமைகளைக் கொடுக்க வெண்டும் என்றெல்லாம் சிந்திக்கின்ற அந்தத் தன்மைகளை மறுமை பற்றிய நம்பிக்கை உருவாக்குகின்றது.

தொழுகையை நிறைவேற்றிவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். அல்லாஹுத்தஆலா அற்புதமாக கூறுகின்றான், வாழ்க்கையை நீங்கள் கூறுபோட்டு பார்க்காதீர்கள்.

தொழுகை இபாதத் போன்று ஏழை எளியோர் விஷயத்தில் அக்கறை காட்டுவதும் மனிதாபிமான பண்பாடுகளை வளர்த்துக் கொள்வதும் ஓர் இபாதத். 

சமூகத்தில் ஏழைகள் இருப்பது நமக்கு பெரும் பாக்கியமாகும். அவர்கள் அல்லாஹ்வுடன் மிக நெருக்கமாக இருப்பார்கள். அவர்களின் துஆவினால், அவர்கள் செய்கின்ற பிரார்த்தனையின் மூலமாக சமூகத்திலே பணக்காரர்களையும் வாழ வைக்கின்றான்.]

Read more...
 
இஸ்லாத்தின் பார்வையில் கல்வி Print E-mail
Tuesday, 12 April 2016 21:50

AN EXCELLENT ARTICLE

இஸ்லாத்தின் பார்வையில் கல்வி

    ஷேக் அகர் முஹம்மத்    

இன்று நாம் காணும் அதிசயிக்கத்தக்க அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக தற்கால உலகை 'அறிவியல் யுகம்' என்று வர்ணிப்பர். கனணி (computer), மின்அஞ்சல் (e-mail), இணையம் (Internet)இ டிஜிடல் தொழில்நுட்பம் என தகவல் தொழில் நுட்பத்துறை பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டி உலகை ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாற்றியுள்ளது.

உலகம் ஒரு பூகோளக் குடும்பமாக (Global Family) சுருங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என நம்பப்படுகின்றது. மறுபக்கத்தில் அறிவியல் ஆராய்ச்சியின் உச்ச நிலையில் போலாக்கம் (cloning) எனும் செயற்பாடு உலகை பெருவியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இத்தகைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் மத நம்பிக்கையானது கேள்விக் குறியாக்கப்பட்டு வருகின்றது. இது அறிவியல் யுகம்; மதத்துக்குரிய காலமல்ல் மதமானது அதன் பங்களிப்பை வரலாற்றில் செய்து முடித்து விட்டது; நவீன வாழ்க்கை அமைப்பில் அதற்கு இடமில்லை என்ற வாதம் முன் வைக்கப்படுகின்றது. இதற்கு பின்வருவன ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன.

அறிவியலின்றி ஒரு நாகரிகம் தோன்ற முடியாது. மதமோ அறிவியலுக்கு எதிரானதாகும். சம கால மேற்குலகின் அனைத்துத் துறை சார்ந்த முன்னேற்றத்திற்கும் அது மதத்தை நிராகரித்து அறிவியலை ஏற்று விசுவாசித்தமையே காரணமாகும்.

மனித வாழ்வு வரலாற்று நோக்கில் மூன்று கட்டங்களைக் கொண்டது.  அவை: 1. சமயம், 2. தத்துவம்,  3.அறிவியல்.

மூன்றாம் கட்டமே இறுதிக் கட்டமாகும்.

Read more...
 
வாழ மறந்த வாழ்க்கை! Print E-mail
Friday, 01 January 2016 08:38

MUST READ

வாருங்கள்! வாழ மறந்த வாழ்க்கையின் பக்கங்களை கொஞ்சம் வாசித்து விட்டு, வாழப் பழகுவோம்!

வாழ மறந்த வாழ்க்கை!

இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்திலே இபாதத் – இறைவணக்கம், வழிபாடுகளிலிருந்து விலகி வாழ்கிற மக்கள் ஏராளம் இருக்கின்றார்கள்.

பெருநாள் தொழுகையை மட்டும் தொழுகிறவர்கள், ஜும்ஆ தொழுகையை மட்டும் தொழுகிறவர்கள், சுபுஹைத் தவிர்த்து 4 வேளை மட்டும் தொழுகிறவர்கள், லுஹர், அஸரை விட்டு விட்டு 3 வேளை மட்டும் தொழுகிறவர்கள், ரமலானில் மட்டும் தொழுகிறவர்கள், மிஃராஜ், பராஅத் லைலத்துல் கத்ர் இரவில் மட்டும் தொழுகிறவர்கள், 5 வேளைத் தொழுகையைக் கூட நினைத்தால் மட்டும் தொழுகிறவர்கள்.

ரமலான் நோன்பைப் பிடிக்காதவர்கள், ஒற்றைப் படை நாட்களில் மட்டும் நோன்பு பிடிப்பவர்கள்.

ஜகாத், தானதர்மம், குர்பானி, ஹஜ் போன்றவற்றில் கூட எல்லை வகுத்து செய்பவர்கள். தொழுதவுடன் ஓடுபவர்கள், குர்ஆனை ஓதாதவர்கள், திக்ர் செய்யாதவர்கள், பயானைக் கேட்காதவர்கள். ஜனாஸாவோடு வந்து விட்டு தொழாமல் ஓரமாக ஒதுங்கி நிற்பவர்கள் என இப்படியாக ஒரு நீண்ட பட்டியலைத் தரலாம்.

இவர்களைச் சந்தித்து ஏன் நீங்கள் இவ்வாறு இறைக்கடமைகளில் இருந்து, இபாதத்களில் இருந்து தூரமாக விலகி இருக்கின்றீர்கள் என்று கேட்டால்...?

சிலர் “என்னுடைய பிரச்சனைகள் எல்லாம் முடியட்டும் இன்ஷா அல்லாஹ் இபாதத்தில் கவனம் செலுத்துவேன்” என்பார்கள்.

சிலர் “என்னுடைய கஷ்டங்கள் தீரட்டும் அப்புறம் பாருங்கள் நான் எப்படி இபாதத்தாளியாக மாறுகின்றேன்” என்பார்கள்.

சிலர் “என்னுடைய சோதனைகள் என்னை விட்டு அகன்றதும் சதா அல்லாஹ்வின் நினைவிலேயே மூழ்கிவிடுவேன்” என்பார்கள்.

Read more...
 
அல்குர்ஆன் அனைவருக்கும்! Print E-mail
Wednesday, 03 August 2011 12:52

அல்குர்ஆன் அனைவருக்கும்!

[ குர்ஆனை படிக்கும்போது முதலில் நம்பிக்கை ஏற்படவேண்டும். சந்தேகம் தேவையில்லை. இறைவனை அஞ்சுபவருக்கு ஹிதாயத் நேர்வழி தரும். இறை நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டி குர்ஆன். முதல் நிபந்தனை அல்லாஹ்வுக்கு அஞ்சுவது; தக்வா.

உமர் ரளியல்லாஹு அன்ஹு தக்வா குறித்து வினவப்பட்டது. இரண்டு பக்கம் முட்கள் நிறைந்த ஒற்றையடி பாதை. ஆடை கிழியாமல், உடல் சேதமுறாமல் பாதுகாப்புடன் நடப்பது. இரண்டு திசைகளிலும் ஷைத்தான்கள் கவனத்தை திரும்புகின்றனர். ஷைத்தான்களிடம் சிக்காமல் உலகில் வாழவேண்டும். உமர் ரளியல்லாஹு  அன்ஹு விளக்கினார்கள். வஸ்வஸா குழப்பம், தீய சிந்தனையில் விழாமல் நடைபோட வேண்டும்.

உங்களுக்கு எதிராக இண்டர்நெட் ஆபாசம், சேட்டிங், நிர்வாணம் பாவங்களிலிருந்து தப்பிப்பது தக்வா ஆகும். ஆங்கில நாளிதழில் கட்டுரை வெளிவருகிறது. நடனம் ஆடினால் உடல் வலிமை பெறும். உலகமக்களின் துனியா விரும்பிகளின் நோக்கம். நாங்கள் கெட்டுப் போய்விட்டோம். நீங்களும் பாழாய் போங்கள். மேற்கத்திய கலாச்சாரம் பரவினால் ஒழுக்கம் குறையும். காணாமல் போகும்.

உலக மதங்களின் அடிப்படை இறைவன், இறைநினைப்பு, ரஷ்யாவில் நாத்திகம் பேசினர். ஆனால் இப்போது இறைவனை ஒப்புக் கொள்கின்றனர். சமுதாயம் சீரழிந்த பின்னர் ‘‘அல்லாஹ்’’ நினைவு வருகிறது.]

Read more...
 
அன்று அந்த மரத்தின் கனி, இன்று மது, மாது, சூது! Print E-mail
Wednesday, 27 July 2011 08:19

அன்று அந்த மரத்தின் கனி, இன்று மது, மாது, சூது!

மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,

ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.

மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய்? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். (திருக்குர்ஆன் 2:30)

நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.

Read more...
 
சுத்தம் சோறு போடுகிறதோ இல்லையோ சுகம் தரும்! Print E-mail
Friday, 22 July 2011 09:16

Image result for சுத்தம் சோறு போடும்

சுத்தம் சோறு போடுகிறதோ இல்லையோ சுகம்தரும்!

      S.E.ஜியாவுத்தீன்      

[ இறால் கழுவின தண்ணீரை வீட்டில் வைத்தால் வீடு நாறிவிடுமாம்.. அதனால் முடுக்கிலும், நடு ரோட்டிலும் கொட்டுகிறார்கள். என்ன சுயநலம்.. இரண்டு பையில் நன்றாக இறுக்கி கட்டி வைத்தால் எந்த வாடையும் வராது. அந்த இறால் கழுவின தண்ணீரை வடித்து கானில் ஊற்றினால் கூட போதும்.. அதற்கும் பதில் இருக்கும், கான் நிறைந்து விடுமாம்...(சகோதரிகளுக்குள் கான் சண்டை வரும் பாருங்க..அப்பப்பா...என்னத்தை எழுத..!).

இன்னும் ஒன்றை நீங்கள் கவனிக்கலாம், பல வீடுகளில் ஜன்னல் கம்பிகளில், ஒரு மூன்று கம்பியின் ஒரு பகுதி மட்டும் அழுக்கு பிடித்து, துருல் ஏறி இருக்கும்.. என்னது என்று நினைக்கிறீர்கள்....அதான்..வீட்டில் இருந்து புளிச்..புளிச் என்று துப்பியத்தின் அடையாளம் தான்..

இன்னும் சிலர் இருக்கின்றார்கள்.. ஜன்னல் கம்பியில் படாமல் சூப்பராக..கரெக்ட் ஆ க துப்புவார்கள்..ஒலிம்பிக்கில் இந்த துப்பும் போட்டி இருந்தால், இதற்க்கு கண்டிப்பாக பதக்கம் கிடைக்கும்.. துப்பாக்கி சுடுதல் எல்லாம் சுத்த வேஸ்ட்..

தெருவிலோ, முடுக்கிலோ இடைஞ்சலாக கல்லோ, முள்ளோ கிடந்தால் அதை அப்புறப்படுத்தினால் நமக்கு நன்மை. அதை விடுங்க, நம் நகத்தை, நம் முடியை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன முறையில் வெட்டினால் அதற்கு நன்மை. எச்சில் துப்பி அதை மணல் கொண்டு மூடினால் அதற்கும் நன்மை.. இப்படி நன்மைகள் கொள்ளை அடிக்க எந்த மார்க்கத்தில் முடியும், சொல்லுங்க. ஆனால் இதை நாம் பின்பற்றுகிறோமா? ]

Read more...
 
ஆதி மனிதரின் தோற்றம் உறுதிப்படுத்தப்படும் இஸ்லாமியக் கருத்துகள் Print E-mail
Monday, 27 June 2011 09:33

ஆதி மனிதரின் தோற்றம் உறுதிப்படுத்தப்படும் இஸ்லாமியக் கருத்துகள்

ஆதிமனிதத் தோற்றம் மத்திய கிழக்குப் பகுதியில் (இன்றைய சவூதி, பாலஸ்தீனம்) தான் அமைந்துள்ளது என அண்மையில் வெளிவந்துள்ள ஆய்வு முடிவு ஆழமான சிந்தனைக்குரியதாகும்.

ஆதிமனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினர், என்றும், அங்கிருந்து புலம் பெயர்ந்து பல நாடுகளுக்கும் பரவினர் என்றும் இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது வெளிவந்துள்ள புதிய ஆய்வு ஆதி மனிதத் தோற்றம் மத்திய கிழக்கில் தான் ஏற்பட்டுள்ளது என்பதற்கு பல ஆதாரங்களைத் தருகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி இதுவரை இருந்து வந்த கருத்துகள் தொல்லியவாளர்களின் கருதுகோள்கள் யாவற்றையும் இந்த புதிய ஆய்வு மாற்றியுள்ளதாக, மானுடவியல் துறை அறிஞர்கள் கூறுகின்றனர்.

டெல்அவிவ் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆதிமனிதத் தோற்றம் குறித்த ஆய்வுக்கு அறிஞர்கள் அவி கோஃபர் மற்றும் நான்பர்காய் ஆகியோர் தலைமையேற்றனர். இந்தக் குழுவினர் இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ரோஷ்ஹா அய்ன் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ‘கெசம்’ குகையில் இன்றைய மனிதப்பற்களின் அமைப்போடு மிகவும் பொருந்திப்போகிற, 8 மனிதப் பற்களைக் கண்டு பிடித்துள்ளனர். இப்பற்களின் வயதை ஆய்வு செய்தபோது, இவை நானூறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை எனத் தெரியவந்துள்ளது.

Read more...
 
நான்! நானே தான்! Print E-mail
Friday, 18 November 2016 07:35

நான்! நானே தான்!

      மவ்லவி, ஹாஃபிஸ், எம்.எஸ்.மீரான் ஃபைஜி        

'நான்' என்னும் சொல் அகந்தையின் அடையாளம்!

'நான் என்பது பெருமையின் பிறப்பிடம்!

'நான்' ஆணவத்தின் அறிகுறி!

'நான்' இறைவனை மறந்தவனின் தேசிய கீதம்!

'நான்' தலை, கால் புரியாத பித்துப் பிடித்தவனின் பிதற்றல்!

'நான் செய்தேன், நான் சொன்னேன், நான் சம்பாதித்தேன் என தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கூறும் கூற்று தன்னலத்தின் வெளிப்பாடு. அது சுயநலத்தின் முகவரி!

நான் தான்! நானே தான்! என நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் வார்த்தை சறுக்கி விடும் செருக்கின் பிரதிபலிப்பு.

'நான்' எனும் சொல்லாடல் மெய்ஞானத்தின் விரோதி. ஏனெனில் மனதில் கரை புரண்டோடும் 'நான்' என்ற அகந்தையை அழிப்பவரே ஆன்மிகத்தின் களங்களில் தடம் பதிக்க முடியும்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 100

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article