வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

முர்தத் விஷயத்தில் இஸ்லாமிய சட்டம் Print E-mail
Thursday, 15 November 2018 08:56

முர்தத் விஷயத்தில் இஸ்லாமிய சட்டம்

      D.முஹம்மது ஹுசைன் மன்பஈ      

(1) முர்தத் என்ற வார்த்தையின் நேரடி அருத்தம் மாற்றுதல் இஸ்லாமிய வரலாற்றில் முர்தத் என்பது இஸ்லாமிய சிந்தனையில் பிறந்து அல்லது இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதற்கு பிறகு இஸ்லாமிய மார்கத்தை விட்டு வெளியேறுபவனை முர்தத் என்று அழைக்கப்படும்.

முர்தத் (இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுதல்) நான்கு வகைப்படும்:

1. கொள்கையின் (நம்பிக்கை) மூலம் முர்தத்

2. பேச்சின் மூலம் முர்தத்தாக மாறுதல்

3. செயல்களின் மூலம் முர்தத்

4. அல்லாஹ் கடமையாக்கிய செயல்களை மறுத்தல் அல்லது அல்லாஹ் தடுத்த விசயங்களை ஆகுமாக்குதல்.

Read more...
 
மனோ இச்சைக்கு அடிமயாகி வரம்புமீறி வசை பாடாதீர்கள் Print E-mail
Wednesday, 14 November 2018 08:22

மனோ இச்சைக்கு அடிமயாகி வரம்புமீறி வசை பாடாதீர்கள்

ஒவ்வொருவரும் மனதில் அழுத்தமாக   பதிய வைத்துக்கொள்ள வேண்டிய நபிமொழிகள்...

0 "மக்கள் நாசமடைந்து விட்டனர்" என்று எவன் கூறுவானோ, மக்கள் அனைவரையும் விட அதிகமாக அவன் தான் நாசமடைந்து போவான். (ஏனெனில் இவ்வாறு சொல்பவன் மற்றவர்களை இழிவாகக் கருதியதால் தற்பெருமை என்னும் பாவத்தில் பீடிக்கப்பட்டுள்ளான்) என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

0 "அடியான் சிந்திக்காமல் ஒரு சொல், சொல்லிவிடுகின்றான். அதன் காரணமாக கிழக்கு – மேற்கிற்கு இடையே உள்ள இடை தூரத்தைவிடவும் அதிக தூரம் நரகத்தில் போய் விழுகிறான்" என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

0 "மனிதன் ஒரு வார்த்தையை பேசி விடுகிறான், அதைச் சொல்வதில் எந்த குற்றமும் இல்லை என்று கருதுகிறான். ஆனால் அதன் காரணமாக எழுபது வருட தொலை தூரத்திற்குச் சமமான அளவு நரகத்தில் போய் விழுகிறான்." என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)

Read more...
 
குழந்தைகளை பள்ளிவாசலோடு இணையுங்கள் Print E-mail
Wednesday, 21 January 2009 07:29

    ஒரு நிகழ்ச்சி:    

"ஒரு தடவை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளில் (ஹஸன் அல்லது ஹுசைன்) ஒருவரைச் சுமந்தவாறு மக்ரிப் அல்லது இஷா தொழுகைக்கு வந்தார்கள். குழந்தையைக் கீழே இறக்கி விட்டு விட்டு தொழுகையைத் தொடங்கினார்கள்.

அவர்கள் சஜ்தாவுக்குச் சென்றதும் நீண்ட நேரம் அதே நிலையிலேயே இருந்திடவே - நான் சற்று என் தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தேன். பேரக்குழந்தை நபியவர்கள் முதுகில் அமர்ந்திருந்தது! நான் மீண்டும் சஜ்தாவுக்குச் சென்று விட்டேன்.

தொழுகை முடிந்ததும் நபித்தோழர்கள் கேட்டார்கள்: யா ரசூலுல்லாஹ்! தாங்கள் நீண்ட நேரம் சஜ்தாவில் இருந்திடவே ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதோ அல்லது தங்களுக்கு வஹி வரத் தொடங்கி விட்டதோ என்று நாங்கள் நினைத்து விட்டோம் என்றார்கள்.

நபியவர்கள் சொன்னார்கள்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எனது பேரன் என் முதுகில் அமர்ந்து விட்டார். அவரது மகிழ்ச்சியைக் கெடுத்து விட நான் விரும்பவில்லை!" (நூல்கள்: அன் நஸயீ, அஹ்மது, அல் ஹாக்கிம்)

Read more...
 
உண்மை உரைத்தீர்கள்! Print E-mail
Tuesday, 28 April 2015 06:11

உண்மை உரைத்தீர்கள்!

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மக்களிடம்) "என்னிடம் (விளக்கம்) கேளுங்கள்" என்று கூறினார்கள்.

மக்கள் அவர்களிடம் கேட்கத் தயங்கினர். அப்போது (எங்கிருந்தோ) ஒருவர் வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முழங்காலுடன் ஒட்டி அமர்ந்து, "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம்(கட்டுப் படுதல்) என்றால் என்ன?" என்று கேட்டார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை வைக்காமலிருப்பதும் தொழுகையைக் கடைப்பிடிப்பதும் ஜகாத்தைச் செலுத்தி விடுவதும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்" என்று கூறினார்கள்.

(இதைக் கேட்ட) அவர் "உண்மை உரைத்தீர்கள்" என்று கூறினார்.

Read more...
 
அல்லாஹ்விடம் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள் அதிகமாகக் தர்க்கம் புரிபவரே! Print E-mail
Saturday, 24 March 2012 08:14

அல்லாஹ்விடம் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள் அதிகமாகக் தர்க்கம் புரிபவரே!

''தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மையின் மீதிருந்தும் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்கு சுவனபதியின் மத்தியில் ஓர் இல்லம் எழுப்பப்படும். மேலும் எவர் நற்பண்புகள் உள்ளவராக இருக்கின்றாரோ அவருக்குச் சுவனபதியின் மேலே ஓர் இல்லம் நிர்மாணிக்ப்படும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மதீ)

''அல்குர்ஆனில் வீண் தர்க்கம் செய்வது நிராகரிப்பாகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அபூதாவூத்)

''நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள் அதிகமாகக் தர்க்கம் புரிபவரேயாவர்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ)

Read more...
 
இறந்தவரின் உறவினரிடம் கூற வேண்டியவை! Print E-mail
Tuesday, 28 December 2010 08:25

உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்:

''நோயாளியிடமோ அல்லது இறந்தவரிடமோ நீங்கள் இருக்க நேரிட்டால், நல்லதைக் கூறுங்கள். நீங்கள் சொல்லக் கூடியவற்றிற்கு வானவர்கள் 'ஆமின்' கூறுகிறார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(என் கணவர்) அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்தபோது, நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! அபூஸலமா இறந்து விட்டார்கள்'' என்று கூறினேன்.

''அல்லாஹு மஹ்ஃபிர்லீ வலஹு, வஅஹ்கிப்னீ மின்ஹு உக்பன் ஹஸனதன் (இறைவனே! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக, அவரை விட சிறந்த துணையை எனக்கு ஏற்படுத்துவாயாக)'' என்று நீ கூறு! என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

அதை நான் கூறினேன். அவரை விட சிறந்தவர்களான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எனக்கு அல்லாஹ் துணையாக்கினான். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 920)

Read more...
 
ஹதீஸ் கலை - குழப்பமும் விளக்கமும் Print E-mail
Tuesday, 29 November 2011 09:05

ஹதீஸ் கலை - குழப்பமும் விளக்கமும்

    குழப்பம்      

ஓர் ஹதீதை ளயீஃபானது என்று கூறினால் அதன் விளக்கம் அதன் அறிவிப்பாளர் தொடரில் ஓர் பலஹீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார் என்பதே தவிர அந்த ஹதீஸ் ஆதாரமானதுதான், அது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதுதான், அந்த ஹதீஸ் ஏற்கத்தக்கதுதான் என்றே விளங்க வேண்டும் என சில மௌலவிமார்கள் கூறுவதைப் பார்க்கிறோம்.

 விளக்கம் 

இவர்களின் இந்த கூற்று மிகவும் தவறானதாகும், எந்த ஓர் ஹதீஸ் கலை அறிஞரும் இவ்வாறு கூறவுமில்லை. ஹதீஸ் கலையைப் பற்றி அறியாதவர்களே இவ்வாறு கூறுவார்கள்.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:

"பாவம்செய்யக்கூடிய (ஓர் அடியான்) ஓர் செய்தியை உங்களிடத்தில் கொண்டு வந்தால் (அதை தீர்க்கமாக விசாரித்து) தெளிவோடு நடந்து கொள்ளுங்கள்". (அல்குர்ஆன் -அல் குஜராத் 6)

Read more...
 
அல்லாஹ் முஃமின்கள் மீது பேரன்பு கொண்டவன் Print E-mail
Friday, 24 June 2011 08:15

அல்லாஹ் முஃமின்கள் மீது பேரன்பு கொண்டவன்

அல்லாஹ் மிகப்பெரும் கருணையாளன், நீதியாளன். அல்லாஹ் வெருமனே முஃமின்களை சோதித்துவிட்டு இருந்துவிடுவதில்லை. மாறாக அதற்கான பரிசுகளையும் வழங்கும் இறைவன் நம்மீது பேரன்பும், நிகரற்ற கருணையும் வைத்துள்ளான் என்பதற்கு கீழ்க்காணும் நபிமொழிகள் (ஹதீஸ்குத்ஸி) சான்று பகர்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். அல்லாஹ் கூறுகிறான்:

''என்னுடைய அடியான் என்னைப்பற்றி நினைக்கின்ற விதத்தில் நான் உள்ளேன். அவன் என்னைப் பற்றி அவனது மனதிற்குள் நினைவு கூர்ந்தால், நானும் அவனைப் பற்றி எனது மனதிற்குள் நினைவு கூர்கிறேன்.

அவன் என்னை ஒரு சபையில் நினைவு கூர்ந்தால், நானும் அவர்களை விட மேலான வானவர்கள் நிறைந்த சபையில் அவனை நினைவு கூறுகிறேன்.

அவன் என்னை நோக்கி ஒரு சான் அளவு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு முழம் அளவு நெருங்குவேன்.

அவன் என்னை நோக்கி ஒரு முழம் அளவிற்கு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்வேன்.

என்னை நோக்கி அவன் நடந்து வந்தால், அவனை நோக்கி நான் ஓடிச் செல்வேன்.'' (நூல்: புகாரி, முஸ்லிம்)

Read more...
 
"இறைவா! என் முகத்தை நரகத்தைவிட்டும் திருப்புவாயாக!" Print E-mail
Friday, 01 June 2012 06:13

"இறைவா! என் முகத்தை நரகத்தைவிட்டும் திருப்புவாயாக!" 

புகாரி ஹதீஸ் 806. அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:

இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! இல்லை' என்றார்கள். மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்' என்று கூறினார்கள்.

தொடர்ந்து, 'கியாமத் நாளில் மக்களெல்லாம் ஒன்று திரட்டப் பட்டதும் யார் எதனை வணங்கினார்களோ அதைப் பின் பற்றிச் செல்லட்டும்' என்று இறைவன் கூறுவான். சிலர் சூரியனைப் பின்பற்றுவர். வேறு சிலர் சந்திரனைப் பின்பற்றுவர். மற்றும் சிலர் தீய சக்திகளைப் பின்பற்றுவர். இந்த சமூகம் முனாஃபிக்குகள் உட்பட அதே இடத்தில் நிற்பர்.

Read more...
 
''அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகின்றீர்கள்?'' Print E-mail
Friday, 17 May 2013 19:43

''அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகின்றீர்கள்?''

(ஒரு முறை) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டுக்குள் வர அவர்களிடம் உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது நபியவர்களிடம் (அவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் (குடும்பச் செலவுத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி குரலை உயர்த்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்(தபடி எழுந்)து கொண்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி கொடுத்த உடன் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உள்ளே வந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ''இறைத்தூதர் அவர்களே! தங்களை அல்லாஹ் (வாழ்நாள் முழுதும்) சிரித்தபடி (மம்ழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்த இவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாகப் பர்தா அணிந்துகொண்(டு உள்ளே சென்று விட்)டார்களே!'' என்றார்கள்.

Read more...
 
ஒருவர் செய்யும் நற்செயல் 50 நபித்தோழர்களின் நற்செயலுக்கு ஈடாவது எப்போது? Print E-mail
Monday, 19 February 2018 07:14

ஒருவர் செய்யும் நற்செயல் 50 நபித்தோழர்களின் நற்செயலுக்கு ஈடாவது எப்போது?

பொறுமையின் காலத்தில் நற்செயலுக்கான பரிசு...

அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: ''உங்களுக்குப் பின்னால் ஒரு காலம் வரும். அது பொறுமையின் காலமாகும். அக்காலத்தில் பொறுமையாக இருப்பது என்பது சூடான நிலக்கரியில் தத்தளிப்பது போன்றதாகும். அந்த சமயத்தில் எவர் ஒருவர் நற்செயல் புரிகிறாரோ அவர் உங்களில் 50 பேர் அந்த நற்செயலைப்புரிந்தால் என்ன பரிசைப் பெறுவீர்களோ அதை அவர் (ஒருவரே) பெறுவார்.''

ஸஹாபாக்கள் சிலர் கேட்டார்கள்: ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் 50 பேர் பேருக்கான பரிசுகளா?''

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: (இல்லை) உங்களில் 50 பேர் பெறும் பரிசு."

(நூல்கள்: அபூ தாவூத் 4341, திர்மிதீ 3085)

Read more...
 
ஆயிரத்தில் ஒருவர் ! Print E-mail
Wednesday, 25 July 2018 19:53

ஆயிரத்தில் ஒருவர்!

(மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதிமனிதரை நோக்கி) ஆதமே! என்று அழைப்பான்.

அதற்கு அவர்கள் (இறைவா!) இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான் என்று கூறுவார்கள்.

அப்போது அல்லாஹ் "(உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்" என்று கூறுவான்.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் "எத்தனை நரகவாசிகளை?" என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் "ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (தனியாகப் பிரித்திடுங்கள்)" என்று பதிலளிப்பான்.

(அப்போதுள்ள பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுகின்ற, கர்ப்பத்தை(ப் பீதியின் காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுகின்ற நேரம் இது தான்.

மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். மாறாக, அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.

Read more...
 
மூன்றை கேட்டேன்! இரண்டை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக்கொண்டான்! Print E-mail
Monday, 16 April 2018 09:21

மூன்றை கேட்டேன்! இரண்டை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக்கொண்டான்!

சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மதீனா புறநகரில் மேட்டுப் பகுதியான) "ஆலியா"விலிருந்து வந்து பனூ முஆவியா பள்ளிவாசலைக் கடந்து சென்றார்கள்.

அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களுடன் நாங்களும் தொழுதோம்.

பிறகு நீண்ட நேரம் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.

பிறகு எங்களை நோக்கித் திரும்பி, "நான் என் இறைவனிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துப் பிராத்தித்தேன். அவற்றில் இரண்டை எனக்குத் தந்தான்; ஒன்றை மறுத்து விட்டான்.

Read more...
 
‘இந்த நாவிலிருந்து உண்மையைத்தவிர வேறு எதுவும் வராது’ Print E-mail
Thursday, 24 March 2011 08:17

‘இந்த நாவிலிருந்து உண்மையைத்தவிர வேறு எதுவும் வராது’

     மவ்லவி, எம்.எம். முஹம்மது இப்ராஹீம், சென்னை    

அல்லாஹ் மனிதகுலத்திற்கு வழங்கிய மிகச்சிறந்த அருட்கொடைகளில் ஒன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தனது தூதராக அனுப்பியது. இதை தனது திருமறையிலேயே அல்லாஹ் குறிப்பிட்டுக்காட்டுகிறான்.

‘நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்;. அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்;. அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்;. இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்;. மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.’ (அல்குர்ஆன்: 3:164)

‘எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்;. யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை.’ (அல்குர்ஆன்: 4:80)

Read more...
 
இதுவே நபி வழி! இதுவே நபி வழி! இதுவே நபி வழி! Print E-mail
Sunday, 14 June 2015 06:41

இதுவே நபி வழி! இதுவே நபி வழி! இதுவே நபி வழி!

ஹளரத் அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்;

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தபோது, அருந்துவதற்கு தண்ணீர் கேட்டார்கள். ஆகவே, அவர்களுக்காக நாங்கள் ஓர் ஆட்டின் பாலை கறந்தோம். பிறகு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, பாலில் கலந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுத்தேன்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இடப்பக்கத்திலும், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்பக்கத்திலும், ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வலப்பக்கத்திலும் இருந்தனர்.

அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "இதோ அபூபக்கர் (அவருக்கு மீதியுள்ள பாலை கொடுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!" என்று (இடப்பக்கத்தில் இருந்த) அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை சுட்டிக்காட்டிக் கூறினார்கள். எனினும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (வலப்பக்கமிருந்த) அந்த கிராமவாசிக்கு கொடுத்தார்கள். அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் கொடுக்கவில்லை.

Read more...
 
அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து Print E-mail
Wednesday, 14 October 2015 06:41

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து

குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

‘‘ஒருவனுக்கு நல்லது செய்ய அல்லாஹ் நாடிவிட்டால் அவனை சோதிப்பான் ’’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

‘‘உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட தீமைக்காக மரணத்தை எதிர்பார்க்க வேண்டாம். அப்படியே அவசியம் விரும்புவர் இருந்தால், 'இறைவா! உயிருடன் இருப்பது எனக்கு சிறப்பாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக! மரணிப்பது எனக்கு சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! என்று கூறட்டும் ’’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

‘‘அல்லாஹ், தன் அடியானுக்கு நல்லதை நாடிவிட்டால், அவனுக்கு உலகத்திலேயே தண்டனையை தீவிரமாக்குவான். அல்லாஹ் தன் அடியானுக்கு தீமை செய்ய நாடிவிட்டால் அவனது குற்றம் காரணமாக அவனை விட்டும் (சோதனையைத்) தடுப்பான், இறுதியில் மறுமை நாளில் அவனுக்கு அதை நிறைவேற்றுவான் ’’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்

Read more...
 
''அல்லாஹ், நமக்குப் பணி புரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்து விட்டான்!'' Print E-mail
Wednesday, 12 April 2017 08:07

''அல்லாஹ், நமக்குப் பணி புரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்து விட்டான்!''

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (தம் துணைவி) சாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர்.

அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்! என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. மன்னன் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து வரச் செய்து இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்? எனக் கேட்டான். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் என் சகோதரி என்று சொன்னார்கள்.

பிறகு சாராவிடம் திரும்பிய இராப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் ஓரிறை விசுவாசி (மூமின்) யாரும் இல்லை என்று சொன்னார்கள். பிறகு சாராவை மன்னனிடம் அனுப்பினார்கள்.

அவன் அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால் எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே! என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்கள் உதைத்துக் கொண்டான்.

Read more...
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு குச்சியால் பூமியைக் கிளறினார்கள்.... Print E-mail
Thursday, 02 March 2017 07:50

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு குச்சியால் பூமியைக் கிளறினார்கள்....

ஒரு அன்சாரித் தோழரின் ஜனாசாவை அடக்கம் செய்வதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சென்றோம்.

கப்ரடியில் சென்றபோது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியால் கிளறிக் கொண்டிருந்தார்கள்.

எங்களின் தலைகள் மீது பறவைகள் இருப்பது போன்று நாங்களும் அமைதியாக கப்ருகளுக்கு அருகில் அமர்ந்தோம்.

திடீரென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடுங்கள் என்று இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளை கூறினார்கள்.

Read more...
 
அநீதிக்கு உதவி செய்பவர்கள் மற்றும் செய்யாதவர்கள் Print E-mail
Thursday, 12 April 2018 08:41

அநீதிக்கு உதவி செய்பவர்கள் மற்றும் செய்யாதவர்கள்

      அநீதிக்கு உதவி செய்பவர்கள்       

அதிகாரம் உள்ள பதவிக்கு வருபவர்கள், தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுகம் காண்கிறார்கள்.

மக்களின் தேவைகளையும் அவர்களின் விருப்பங்களையும் கண்டு கொள்வதில்லை.

இப்படிப்பட்ட தலைவர்களின் குறைகளை சுட்டிக் காட்டி அநீதிகளை தட்டிக் கேட்பதற்குப் பதிலாக, அவர்கள் செய்யும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் பொய்களையும் சரி காண்பவர்களும் இன்று இருக்கத் தான் செய்கிறார்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் தலைவர்களிடம் சில பலன்களை பெற்றுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வரும் செய்தியின் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

''எனக்கு பின்னால் சில தலைவர்கள் வருவார்கள்.

அவர்களிடம் சென்று அவர்களின் பொய்களை உண்மைப்படுத்துவார்கள். அவர்களின் அநீத செயல்களுக்கு உதவி புரிவார்கள்.

அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் இல்லை.

நான் அவனைச் சார்ந்தவனும் இல்லை.

அவர்கள் (மறுமைநாளில்) ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்திற்கு என்னிடம் வர மாட்டார்கள்.

Read more...
 
மாற்றம் தேடும் வழி முறைகள் Print E-mail
Tuesday, 13 November 2018 07:01

மாற்றம் தேடும் வழி முறைகள்

'ஷஹாதத் கலிமா'வைச் சுமந்த முன்னோர்,
அளப்பரிய வெற்றிகளோடு உலகை ஆண்டார்கள்.
சகலதையும் சம்மதமாய்ப் பார்க்கும் நாமோ,
சொல்லொனா தோல்விகளால் தொடர்ந்தும் மடிகிறோம்.

குர்ஆன் ஹதீஸாக வாழ்ந்த முன்னோர்,
குவலயம் போற்றும் கோமான்களாய் வாழ்ந்தார்கள்,
குர்ஆன் ஹதீஸின் பெயரால் நாம்,
குரோதங்கள் வளர்க்கும் கொடுமையைப் புரிகின்றோம்!

முஸ்லிமை முகமனோடும், எதிரியை வாலோடும்,
சந்திப்பதே நம் வாழ்வும் வரலாறும்;,
இஸ்லாத்தின் எதிரியை அன்போடு அணைக்கின்றோம்,
ஈமானிய உறவுகளை வெறுப்போடு மறுக்கின்றோம்.

Read more...
 
இறைவன் எனும் படைப்பாளி! Print E-mail
Thursday, 27 September 2012 21:37

         இறைவன் எனும் படைப்பாளி!         

 

இறைவன் என்னும் படைப்பாளி, என்றும்

இனியவற்றையே உலகில் படைத்திடுவான்.

ஐந்தறிவுள்ள உயிர்கள் அனைத்தும், அவன்

தந்த உடலை நிறைவுடன் ஏற்றுக் கொள்ளும்.

 

ஆறறிவு பெற்ற மனிதர்கள் மட்டும் தான்,

அவன் படைப்பிலே குறை காண்கின்றனர் .

உருவை மாற்றி அமைக்கும் முயற்சிகளில், தம்

பொருளையும் மன நிறைவையும், இழக்கின்றனர்!

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 100

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article